Friday, November 23, 2012

கலப்புத் திருமணம் - ஒரு மீள்பார்வை


-    கான் பாகவி

லப்புத் திருமணம் சாதியக் கொடுமைகளைக் களைய இந்தியர்களுக்குக் கிடைத்த ஒரு வரம் என்றே பலரும் நம்புகின்றனர். ஆனால், இன்று கலப்புத் திருமணம் பெரிய சாபமாக மாறி, தருமபுரிகள் அதர்மபுரிகளாகக காட்சியளிக்கின்றன.

தருமபுரி அருகே நாயக்கன் கொட்டாய் என்ற கிராமத்தில் 268 வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன; 54 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலருக்குக் காயம். ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டார். சேத மதிப்பு ரூ. 3.50 கோடி.

எல்லாம் ஒரு காதல் திருமணம் செய்த லீலைகள்தான். இளவரசன் என்ற தலித் வாலிபன், திவ்யா என்ற வன்னியப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டானாம்! அவமானம் தாளாமல் பெண்ணின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொள்ள, பிரச்சினை மோதலாக வெடித்தது.

‘‘இது நிறுபூத்த நெருப்பாய், தமிழகக் கிராமங்கள் அனைத்திலும் இந்த நிலைமைதான் காணப்படுகிறது. பட்டியல் ஜாதியினர் (தலித்கள்) திட்டமிட்டு பிறசாதிப் பெண்களைக் காதலிக்கிறார்கள்; சீண்டி வேடிக்கை பார்க்கிறார்கள்; வன்கொடுமைச் சட்டம் இருக்கும் தைரியத்தில் செயல்படுகிறார்கள் என்பது ஏனைய சாதியினரின் பரவலான குற்றச்சாட்டு’’ என்கிறார், தினமணி வைத்தியநாதன்.

கலப்புத் திருமணம்

இந்துச் சமூகத்தில் சாதிகளுக்குக் கணக்கில்லை. இந்துச் சமூகத்தில் சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தார், உறவினர் போன்றோரைச் சார்ந்திருப்பதும் பலபடி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவுதான் சாதிஎனப்படுகிறது.

இந்துச் சமூகத்தை மூன்று சாதிகளாகப் பிரிக்கலாம். 1. பிராமணர் போன்ற வளர்ந்த சாதி. 2. பிராமணர் அல்லாத இந்துக்களுள் தலித்துகளைவிட உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சாதி இந்துக்கள். இவர்களைத்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்கிறது அரசாங்கம்.

இவர்களில் நூற்றுக்கணக்கான சாதிகள் அடக்கம். வன்னியர், தேவர், பிள்ளைமார், நாடார் போன்ற சாதியினர் சாதி இந்துக்கள்தான். 3. தலித் சமூக மக்கள்; ‘பட்டியல் சாதியினர்எனப்படுவோர்.

சாதிகளிடையே ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் காலம்காலமாக இருந்துவருவதால், சுதந்திர இந்தியாவில் இதை ஒழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்களைத் தூக்கிவிடுவதற்காக இடஒதுக்கீடு, மானியம், நல உதவிகள் எனப் பலவகையான திட்டங்கள் நாடெங்கும் செயல்படுத்தப்படுகின்றன.

சாதியை ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் கலப்புத் திருமணம்’. அதாவது வேறு சாதி அல்லது வேறு மதத்தைச் சார்ந்தவருடன் செய்துகொள்ளும் திருமணம். இத்தகைய கலப்புத் திருமணம் இந்தியச் சட்டப்படி செல்லும் என 1954ஆம் ஆண்டில் இந்தியா சட்டம் இயற்றியது. ஷிஜீமீநீவீணீறீ விணீக்ஷீக்ஷீவீணீரீமீ கிசிஜி. 1954’ என்பது இச்சட்டத்தின் பெயர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, பெரியார் ஈ.வெ. ராமசாமி மற்றும் ரகுபதி வெங்கட ரத்தினம் நாயுடு, மன்தேனா வெங்கடராஜு போன்றோர் இச்சட்டம் கொண்டுவர கடுமையாகப் போராடியவர்கள் ஆவர்.

கலப்புத் திருமணங்களை அரசே செய்துவைக்கும் வகையில்தான் பதிவுத் திருமணம்என்றொரு நடைமுறையை அரசு கொண்டுவந்தது. கலப்புத் திருமணத்தைச் சமூக அமைப்புகள் தடுக்கும்போது, காதலர்கள் திருமணப் பதிவாளரிடம் வந்து மாலை மாற்றி, திருமணம் செய்துகொள்வதற்கு இது வகை செய்தது.

மீள்பார்வை

இந்தியாவில் சாதி ஒழிந்ததா? தீண்டாமைதான் நின்றதா? இல்லவே இல்லை. மாறாக, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அரசியல் கட்சி; ஒரு தினசரி பத்திரிகை; ஒரு தொலைக்காட்சி சேனல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என சாதியின் அடையாளம் ஆழமாக வேர் பதித்திருக்கிறதே தவிர, சாதி மறையவில்லை.

புரட்சிக் கருத்துகளை அன்றே சொன்னவர் பாரதியார் எனும் உயர்சாதிக் கவிஞர் என்று சொல்கின்றனர். ஆனால், ‘சாதிகள் இல்லையடி பாப்பாஎன்று பாட்டோடு பாட்டாக பாடிவிட்டுச் சென்றாரே தவிர, அவரும் சாதிய மாச்சரியத்திற்கு உட்பட்டவர்தான் என்றே தெரிகிறது.

பெ. தூரன் எழுதிய பாரதி தமிழ்எனும் நூலில் பாரதியாரின் இக்கருத்து இடம்பெறுகிறது:

ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய்விடமாட்டோம்.

சாதி இந்துத் தலைவர்கள் கலப்புத் திருமணத்தை வெளிப்படையாகவே எதிர்க்கின்றனர். ‘‘காதல் திருமணத்தை நான் எதிர்க்கவில்லை; அதே நேரத்தில், காதல் திருமணம் என்ற பெயரில் திட்டமிட்டே எங்களை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ். இவர் ஒரு வன்னியர்.

கொங்கு வேளாளர் அமைப்பின் தலைவர் ஒருவர், எங்கள் சாதி அசிங்கப்படுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார்.

பிராமணர்என்ற இதழின் ஆசிரியர் ஒருவர், கலப்புத் திருமணத்தை எங்கள் சமூகம் அங்கீகரிக்காது என்று பேட்டி அளிக்கிறார்.

தருமபுரி அட்டூழியத்திற்கு மருத்துவர் ராமதாசே காரணம் என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் தமிழரசனும்.

ஆக, கலப்புத் திருமணத்திற்கு, சமூக மக்களிடம் ஆதரவில்லை. தலைவர்களிடமும் வரவேற்பு இல்லை. இவர்களெல்லாரும் சொல்லும் காரணம் இதுதான்: எங்கள் சமூகத்திற்கென்று சில பழக்கவழக்கங்களும் கலாசார முறைகளும் நாகரிகமும் உண்டு. அடுத்த சமூகம் கலக்கும்போது இவையெல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஒரு சமூகத்தின் அடையாளமே அதன் கலாசார வீச்சுதான். எங்கள் அடையாளத்தை இழக்க நாங்கள் தயாராயில்லை.

ஒருபடி மேலே ஒருவர் சொன்னார்: முன்னோர்களின் மரபுவழியாகத்தான் அடுத்த தலைமுறையின் பண்பாடும் நாகரிகமும் செழிக்கும் என்பது அறிவியல் உண்மை. இந்த மரபுவழியைச் சிதைக்கும் ஒரு நச்சுப் பாம்புதான் கலப்புத் திருமணம். இதை எப்படி அங்கீகரிக்க முடியும்? சொல்லுங்கள்!

வட இந்தியாவில் கௌரவக் கொலைகள் நடந்துவருகின்றன. அதாவது மேல்சாதிப் பெண்ணைக் கீழ்சாதி வாலிபன் காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன், பெண்ணின் பெற்றோர் சொல்லிப்பார்ப்பார்கள். மகள் பிடிவாதம் செய்தால், அன்பு காட்டுவதைப் போன்று பேசி வீட்டிற்கு அழைத்துவந்து, பெற்றோரே விஷம் கொடுத்து கொன்றுவிடுகிறார்களாம்! இதனால் குடும்பத்தின் மானமும் சாதியின் கௌரவமும் காக்கப்படுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

கலப்படத் திருமணம்

மேலே கண்டது கலப்புத் திருமணம். அதாவது ஒரே மதத்தில் இருவேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடையே நடக்கும் திருமணம். ஐ.ஆர். இருபது அரிசியையும் பொன்னி அரிசியையும் (அவர்கள் எண்ணப்படி) கலப்பது. மணமக்கள் இருவரின் மதக் கொள்கை, பலதெய்வ நம்பிக்கை ஆகும். வழிபாட்டு முறை ஒன்று; பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை ஒன்று; உணவு முறை (சிலரைத் தவிர) ஒன்று; செத்தால் சுடுகாட்டில் எரிப்பதும் ஒன்று.

சிற்சில வித்தியாசங்களைத் தவிர, மற்றெல்லா அம்சங்களும் ஒன்றாக இருக்கின்ற இருவேறு சாதி இளைஞனும் இளைஞியும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதையே இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கலாசாரச் சீரழிவும் பண்பாட்டுச் சிதைவும் ஏற்படுகிறது என்று பதைக்கிறார்கள்; பணத்திற்காக எங்கள் பெண்ணைக் கெடுக்கிறார்கள் என்று கூக்குரலிடுகிறார்கள்.

முஸ்லிம் இளம்பெண்களைத் திட்டமிட்டே, இந்தப் பட்டியல் சாதி இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் காதலிப்பதைப் போன்று நடித்து, இறுதியில் நகைநட்டுகளைப் பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிடுவது, அல்லது திருமணம் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு ஓடிப்போவது, அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வது என்று சதியாட்டம் போடுகிறார்களே! முஸ்லிம் பெற்றோர்கள் எவ்வளவு நொந்துபோவார்கள்!

அவன் பலதெய்வக் கொள்கை உடையவன்; அவளோ ஓரிறைக் கொள்கையில் பிறந்தவள். அவன் சிலைகளை வழிபடுபவன்; அவளோ ஓரிறையைத் தொழுபவள். அவன் குடிப்பான்; பன்றி உண்பான்; திருவிழா போவான்; ஆட்டம் பாட்டம் என்று மனம்போன போக்கில் வாழ்வான். அவளுக்கோ இவை எல்லாம் தடை செய்யப்பட்டவை.

இங்கு கலாசாரச் சீரழிவு என்ன! நம்பிக்கையே தகர்ந்துபோகிறது! மரபுவழியே நிர்மூலமாகிப் போகிறது! இறந்தால், இறுதித் தொழுகை நடத்தி கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டியவளை, நெருப்புக்கு இரையாக்கி சாம்பலைத் தூற்ற வேண்டியதுள்ளது. எப்படி மனம் பொறுக்கும்? அவளைப் பெற்றவர்கள் சமுதாயத்தில் எப்படி தலைகாட்டுவர்?

இது, சர்க்கரையில் பொட்டாசியத்தைக் கலப்படம் செய்வதற்கு, அல்லது தேயிலைத் தூளில் அடுப்புக் கரியைக் கலப்படம் செய்வதற்கு ஒத்ததல்லவா? எனவே, இதை கலப்புத் திருமணம்என்று அழைக்க முடியாது; ‘கலப்படத் திருமணம்என்றுதான் சொல்ல வேண்டும்.

மதவெறி சக்திகள் தலித் இளைஞர்களுக்கும் வேறுசிலருக்கும் பணம் கொடுத்து, முஸ்லிம் பெண்களைக் கெடுக்கத் திட்டமிட்டு, இரகசியமாகச் செயல்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. நீங்கள் முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிவிட்ட அதே அம்பு, இப்போது உங்களையே திருப்பித் தாக்க ஆரம்பித்ததன் அடையாளம்தான் தருமபுரிகள்! இன்று நீங்கள் அனுபவிக்கிற வலியை நாங்கள் பல நாட்களாக அனுபவித்துவருகிறோம்! அதைத் தடுக்க யாரேனும் முயன்றீர்களா? துணைபோனீர்களே! -என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.

மொத்தத்தில், பட்டியல் சாதியினர் பணத்திற்காக, சுகபோக வாழ்வுக்காக, அழகான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்திவரும் இந்த நாடகம் தடுக்கப்பட வேண்டும். இதற்குத் துணைபோவோர் தவறை உணர்ந்து திருந்த வேண்டும். இந்தியச் சமூகத்தில் பரவிவரும் இந்த நோய்க்குத் தடுப்பூசி போட்டு, நோய் வருமுன் காத்திட வேண்டும். இதற்கு எல்லா சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்களா?

(முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தபின் அவருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கும் நடக்கும் திருமணம் கலப்புத் திருமணமும் அல்ல; கலப்படத் திருமணமும் அல்ல என்பது குறிப்பிடத் தக்கது.)

Tuesday, November 06, 2012

தலைமுறை இடைவெளி


சிறுகதை...
விரல்

ரங்கத்தில் இடம் பிடிப்பதில் சலீமுக்குச் சிரமம் இருக்கவில்லை. அதிகமான இருக்கைகள் காலியாகவே இருந்தன. அது ஒரு அரபி மதரசாவின் பட்டமளிப்பு விழா. இருவர் ஆலிம்பட்டமும் ஒருவர் ஹாஃபிள்பட்டமும் பெறுகிறார்.

விழா ஏற்பாடு தூள் கிளப்பியது. மக்கள்தான் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மௌலானாக்களின் தலைகள் தெரிந்தன. ஓதுகிற பிள்ளைகள் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தார்கள். பட்டம் வாங்குவோரின் உறவினர்கள் ஏதோ கல்யாண வைபவத்திற்கு வந்தவர்கள்போல் புத்தாடைகள் சரசரக்க வேன்களில் வந்து இறங்கிக்கொண்டிருந்தனர்.

சலீம், சென்னை மருத்துவக் கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவன். எம்.பி.பி.எஸ்.ஸில் இடம் கிடைத்து குடும்பத்தில் முதலாவது டாக்டர் ஆகப்போகிறவன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவன் ஆர்வத்தோடு விழாவில் நண்பனுடன் கலந்துகொண்டிருந்தான்.

ஏண்டா இந்த மீட்டிங்கிற்கெல்லாம் வந்து பொழுதை வீணாக்குகிறாய்? என்னையும் வற்புறுத்தி அழைத்து வந்து கழுத்தை அறுக்கிறாய்? -என்று நண்பன் கரீம் சடைந்துகொண்டான். துறை மாறும்போது ஓர் அந்நியம் தலைகாட்டுவது இயல்புதானே! அதுவே வெறுமையாகி வெறுப்பாகவும் மாறிவிடுவதுண்டு.

டேய் கரீம்! நான் ஒரு ஆலிம் குடும்பத்தின் வாரிசு என்பது உனக்குத் தெரியும்தானே! என் தாத்தா (தந்தையின் தந்தை) ஒரு பிரபலமான ஆலிம். அவரது உரையைக் கேட்க கூட்டம் காத்திருக்கும். சமுதாயத் தலைவர்கள் முதல் அரசியல் தலைவர்கள்வரை அவருக்குத் தொடர்பு இருந்தது. எங்கள் குடும்ப விசேஷங்களில் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். சுயமரியாதையோடு வாழ்ந்தவர். எந்தப் பணக்காரரிடமும் கையேந்தாதவர். நல்ல எழுத்தும் பேச்சும் அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றன. மார்க்கக் கல்வியின் சிறப்பு பற்றி எங்களுக்கு அடிக்கடி கூறுவார். மதரசாவில் கற்றது, பட்டம் வாங்கியது, மார்க்கப் பணியாற்றியது எனத் தாம் கடந்துவந்த பாதைகளையெல்லாம் நினைவுகூர்ந்து மகிழ்ந்துபோவார். அந்த ஈரம்தான் என்னை இங்கு ஈர்த்துவந்தது -என்றான் சலீம்.

மூதாதையரின் உயர்வு, அவர்களின் மறைவுக்குப் பிறகுதானே இளைய தலைமுறைக்குத் தெரிகிறது! சரிடா! தெரியாமல் கேட்டுவிட்டேன்; ஐ ஆம் சாரி என்றான் கரீம்.

பட்டமளிப்பு விழா தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. சிறப்புப் பேச்சாளர், மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்தும் உலமாக்களின் சேவைகள் குறித்தும் அழகாகப் பேசினார். ‘‘இந்த ஊரில் பிறந்து எங்களூரில் 34 ஆண்டுகள் இமாமாகப் பணிபுரிந்த அந்த பெருந்தகையைப் பற்றி இங்கு நான் குறிப்பிடாவிட்டால் நன்றி கொன்றவனாகிவிடுவேன்; நான் ஆலிமானதற்குக் காரணமே அவர்தான்; இன்று உங்கள்முன் சிறப்புரையாளனாக நான் நிற்பதற்கு அவர் கொடுத்த ஊக்கம்தான் காரணம்’’ என்ற நீண்ட முகவுரையுடன் சலீமின் தாத்தாவின் பெயரைக் குறிப்பிட்டுப் புகழ்ந்து தள்ளினார்.

சலீம் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்; பெருமையுடன் நண்பன் கரீமைப் பார்த்தான். அன்றிரவு சலீமுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. தாத்தாவின் நினைவில் மூழ்கிப்போனான். தாத்தா மதரசாவில் ஓதிக்கொண்டிருந்த நாட்களில் லீவில் ஊருக்கு வந்திருக்கிறார். தாத்தாவின் அத்தாவை அவருடைய உறவுக்காரர் ஒருவர் சந்திக்க வந்தார். தாத்தாவைப் பார்த்துவிட்டு, ‘‘இவன் என்ன செய்கிறான்?’’ என்று உறவுக்காரர் கேட்க, ‘‘ஆலிமுக்குப் படித்துக்கொண்டிருக்கிறான்’’ என்று தாத்தாவின் அத்தா சொல்ல, உறவுக்காரரோ ‘‘ஓதி முடித்துவிட்டு ஊர் ஊராகப் பிச்சையெடுக்கவா ஓதவைக்கிறாய்?’’ என்று கேட்டுவிட்டார்.

அதற்கு, ‘‘அப்படிப்பட்டவர்களின் வழியில் செல்லாமல், கண்ணியமாக வாழும் ஆலிம்களின் வழியில் நம் பிள்ளை செல்ல வேண்டியதுதானே!’’ என்று தாத்தாவின் அத்தா சாந்தமாகப் பதிலளித்தார். இதைத் தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்திருந்த சலீம், தாத்தாவின் அத்தாவை நினைத்துப் பேருவகை கொண்டான்.

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த சலீமின் மனத்தில் விசித்திரமான கேள்வியொன்று எழுந்து அழுத்தியது. நியாயங்கள் உச்சத்தை எட்டும்போது திரைபோட்டு மறைக்க முடிவதில்லை.

இவ்வளவு உயர்வான கல்வியைக் கற்றுப் பெயரும் புகழும் பெற்று வாழ்ந்த தாத்தாவின் வயிற்றில் பிறந்தவர்தானே என் தந்தை. அவர், தாமும் ஆலிமாகாமல் ஒரு பொறியாளர் ஆனார்; என்னையும் மருத்துவராக்கப் பாடுபடுகிறார். இப்படியே போனால், நம் குடும்பத்தில் தாத்தாவின் கல்வி வழி அழிந்துபோய்விடாதா? இது தாத்தாவுக்குச் செய்யும் ஒருவகை துரோகமாகிவிடாதா?

விடிந்ததும் தந்தை ரஹீமிடம் கேட்டேவிட்டான் சலீம். ‘‘இதுவெல்லாம் வற்புறுத்தி வருவதில்லை. அவரவர் விருப்பத்தின்பேரில் கற்க வேண்டும்’’ என்று சமாளித்தார் இன்ஜினியர் ரஹீம்.

அக்கறையுடன் வினவிய மகனை சமாதானப்படுத்த ஒரு பதிலை அவர் சொல்லிவிட்டாரே தவிர, நிஜம் அவர் மனத்தை அரிக்க, பின்னோக்கிச் சென்றன நினைவுகள்...

தந்தை இமாமாகப் பணியாற்றிய ஊரிலேயே அந்தப் பொறியியல் கல்லூரி இருந்தது. கல்லூரி தாளாளர் ஜியாவுத்தீன் ஹாஜியார் இமாமின் நெருங்கிய நண்பர்; ஒருவகையில் உறவினரும்கூட. எனவே, ரஹீமுக்கு குறைந்த கட்டணத்தில் கல்லூரியில் இடம் கிடைத்தது.

படித்து முடித்த கையோடு பெரிய கம்பெனி ஒன்றில் வேலையும் கிடைத்தது. கை நிறைய சம்பளம். சொந்த வீடு, கார் என்று இமாமின் குடும்ப நிலை உயர்ந்தது. ரஹீமுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினார் இமாம். உறவில் படித்த பெண்கள் இல்லை என்பதற்காகத் தரகர் மூலம் பெண் தேடினார்.

பெங்களூரில் ஒரு சம்பந்தம். பெண்ணின் தந்தையிடம் ரஹீமின் புகைப்படம், பயோடேட்டா, சம்பளம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு... என எல்லா தகவல்களையும் தரகர் அளித்தார். பெண் வீட்டாருக்குப் பையனை மிகவும் பிடித்துவிட்டது. இறுதியாக ஒரு விவரம் கேட்டார் பெண்ணின் தந்தை: பையனின் தகப்பனார் என்ன செய்கிறார்?

அவர் ஒரு ஆலிம்; இமாமாகப் பணியாற்றுகிறார். நீங்கள்கூடக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபலமான பேச்சாளர். முற்போக்குச் சிந்தனையாளர். எழுத்தாளர்... என அடுக்கிக்கொண்டுபோனார் தரகர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பெண்ணின் தந்தை சொன்னார்: பையனின் தந்தை ஆலிம்சாவா? அப்படியென்றால் பெண் கொடுக்க முடியாது. இடத்தைக் காலி செய்யுங்கள்!

தகவல் அறிந்த இமாமுக்கு மட்டுமன்றி, ரஹீமுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆலிம் என்றால் அவ்வளவு இளக்காரமா? இதனால்தான், அத்தா மார்க்கக் கல்விக்கு நம்மை வற்புறுத்தவில்லையோ! வசதிகள் ஆயிரம் இருந்தும் சமூக அந்தஸ்து இல்லாதிருந்தால் என்ன பயன்? என ரஹீம் எண்ணிக்கொண்டான்.

வேறொரு நடுத்தர குடும்பத்தில் ரஹீமுக்குத் திருமணமாகி, சலீமும் பிறந்தான். சலீம் பிளஸ் டூ முடித்தபின், அவனுடைய தாத்தா வழியில் இறக்கிவிட வேண்டும் என்ற ஆசை ரஹீமுக்குத் தலைதூக்கியது. ஒரு பெரிய மதரசாவின் விண்ணப்பப் படிவத்தையும் பெற்று பூர்த்தி செய்து வைத்தார் ரஹீம். அதற்கு முன்பே, மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் சலீமுக்கு வந்தது. அதற்கான கலந்தாய்வு படிவத்தையும் பெற்று பூர்த்தி செய்து வைத்திருந்தார் சலீம்.

சொந்த ஊரில் ஜமாஅத்தில் ஒரு பிரச்சினை என்று தகவல் வரவே ஊருக்குப் பயணமானார் இன்ஜினியர் ரஹீம். ஜமாஅத் நிர்வாகக் கமிட்டி கூடிப் பிரச்சினையை விவாதித்தது. விவாதத்தில் முக்கியப் பங்காற்றிய ரஹீம் முன்வைத்த தீர்வு அனைவராலும் ஏற்கப்பட்டு, சுமுகமாகப் பிரச்சினை முடித்துவைக்கப்பட்டது.

மறுநாள் ஜமாஅத் தலைவர் தேர்தல் இருப்பதாகவும் அதிலும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்த ரஹீம் ஊரிலேயே தங்கிவிட்டார். அடுத்த நாள் பள்ளிவாசலில் மக்கள் திரண்டனர். ஜமாஅத்தார்களில் சிலர் முத்தவல்லி பதவிக்கு ரஹீமின் பெயரை முன்மொழிந்தனர்.

இந்தப் பிரேரணையைப் பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்தனர். காரசாரமான வாக்குவாதம் பள்ளிவாசலில் எதிரொலித்தது. சாலையில் செல்வோர் வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பும் நடந்தது.

திடீரென ஒலித்த கணீர் குரலொன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆரவாரம் அடங்கி நிசப்தம் நிலவியது. கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் ஊரிலேயே பெரும் தனவந்தர். திடீர் பணக்காரர். அரசியல் செல்வாக்கு மிக்கவர். அடியாட்கள் நிறைந்தவர். இப்ராஹீம் ராவுத்தர்.

அவர் பேசினார்: ரஹீம் என்னதான் படித்துப் பட்டம் பெற்று, கார் - பங்களா என வசதியோடு வாழ்ந்தாலும் ஆலிம்சா பிள்ளைதானே! பள்ளிவாசல் பெயரைச் சொல்லி வசூல்செய்து, பொய்க் கணக்கு காட்டி சுருட்டமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

ஊரே மௌனமானது. ரஹீம் சென்னை திரும்பினார். மகன் சலீமுக்காகப் பூர்த்தி செய்துவைத்திருந்த மதரசாவின் விண்ணப்பப் படிவத்தைக் கிழித்துப் போட்டார்.
நன்றி: அல்ஹிந்த்