அன்று துருக்கியில் நடந்தது இன்று..?
மு
|
ஸ்தபா கமால் அதாதூர்க் (கி.பி. 1881-1938) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இவர் ‘டோன்மி’ (Donme) யூதர்களில்
ஒருவர். ‘டோன்மி’ என்பது, 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தற்போதைய கிரீஸ் பகுதியில் நிறுவப்பட்ட யூத-இஸ்லாமிய சமயப் பிரிவு. (துருக்கி மொழிச் சொல்லான
‘டோன்மி’ என்பதற்கு ‘மதமாறியவர்’
என்று பொருள்.)
முஸ்தபா கமால் அதாதுர்க் |
ஷா பெட்டாய் ட்ஸெவி என்பவரால் உருவாக்கப்பட்ட இம்மதத்தைச் சேர்ந்தவர்கள்,
ட்ஸெவியை ஒரு மீட்பாளர் என்றே நம்பினர். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள்
துருக்கி நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். யூதர்களாக இருந்து, ஆட்சியதிகாரத்திற்காக
முஸ்லிம்களாக மாறிய இவர்கள், அந்தரங்கத்தில் யூத மதக் கோட்பாடுகளையே பின்பற்றிவந்த
‘முனாஃபிக்’கள் என வர்ணிக்கப்படுகின்றனர்.
உஸ்மானிய கிலாஃபத்தை வீழ்த்துவதில் இவர்களின் பங்கே முதன்மையானது. ‘ஐக்கியம்
மற்றும் முன்னேற்றத்திற்கான ஜமாஅத்’ எனும் அமைப்பை உருவாக்கி, கிலாஃபத்திற்கு
எதிராகப் புரட்சி செய்தனர். இந்த யூதர்களில் ஒருவரே முஸ்தபா கமால் அதாதூர்க்.
(அதாதூர்க்: துருக்கியரின் தந்தை.
அ(த்)தா – தந்தை)
துருக்கியின் இராணுவ ஜெனரலாக இருந்து, தேசியக் கட்சியின் தலைவராக ஆன அதாதூர்க், 1923ஆம் ஆண்டு
அந்நாட்டின் அதிபரானார். இவர் தன் ஆட்சியில் இஸ்லாத்திற்கெதிராகச்
செய்த கொடுமைகளின் பட்டியலைக் கீழே தருகிறோம். நீங்களே முடிவு
செய்துகொள்ளுங்கள்! இவர் குடிகாரர். எல்லா
அநாசாரங்களையும் செய்துவந்ததுடன், துருக்கியரிடையே அந்த அசிங்கங்களைப்
பரப்பவும் செய்தார்; ஊக்குவித்தார். இறுதியாக, குணப்படுத்த
முடியாத நோயால் பாதிக்கப்பட்டு 1938இல் இவர் மடிந்தார்.
- இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிமுறையை அகற்றிவிட்டு, மார்க்கம் வேறு; ஆட்சி வேறு என்று பிரித்தது.
- அரபி லிபியில் எழுதப்பட்டுவந்த துருக்கி மொழியை, 1928இல் லத்தீன் லிபிக்கு மாற்றியது.
- அரபி மொழிப் பள்ளிக்கூடங்களை மூடியது. அதனால், திருக்குர்ஆனைக் கற்பதே கேள்விக் குறியானது; துருக்கியரின் பாரம்பரிய இஸ்லாமியத் தொடர்பு அறுந்துபோனது.
- இஸ்லாமிய ஷரீஆ, சட்டத்துறையிலிருந்து அகற்றப்பட்டது. ஷரீஆ நீதிமன்றங்களும் வக்ஃப் அமைச்சகமும் நிறுத்தப்பட்டன.
- ஐரோப்பிய சட்டங்கள் துருக்கியில் இறக்குமதி செய்யப்பட்டன. சுவிட்சர்லாந்தின் குடியுரிமை (சிவில்) சட்டமும் இத்தாலியின் குற்றவியல் (கிரிமினல்) சட்டமும் ஜெர்மனியின் வணிகச் சட்டமும் துருக்கியில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
- கணிசமான பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. ‘அயா சூஃபியா’ என்ற பிரபல பள்ளிவாசல் மியூசியமாக மாற்றப்பட்டது.
- பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 500 மீட்டர் சுற்றளவில் ஒரேயொரு பள்ளிவாசல் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
- ஹிஜ்ரீ காலண்டர் முறை அகற்றப்பட்டு, 1925 முதல் ஆங்கிலேய நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- துருக்கி அரசியல் சாசனத்திலிருந்து ‘துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு’ என்ற சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.
- மார்க்கக் கல்வி போதனை செயலிழந்து போனது. இஸ்தான்பூல் பல்கலைக் கழகத்தில் இயங்கிவந்த ஷரீஅத் கல்லூரி 1933 முதல் இழுத்துமூடப்பட்டது.
- பர்தா முறை கைவிடப்பட்டது. பெண்கள் தாராளமாக வெளியில் சுற்ற ஊக்குவிக்கப்பட்டது. குடும்பத் தலைமை ஆண்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
- பாலஸ்தீனில் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட ‘இஸ்ரேல்’ எனும் தேள் கொடுக்குக்கு –முஸ்லிம்கள் ஆட்சிபம் தெரிவித்தும்- அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சிரிய அதிபர் பஷ்ஷார் |
எகிப்து அதிபர் சீ.சீ. |
நண்பர்களே! சிரியாவிலும் இதுதான் நடக்கிறது. பஷ்ஷார் மீண்டும் வெற்றிபெற்றதால் –அந்தத்
தேர்தல் ஒரு நாடகம் என்பது வேறு விஷயம்- இன்னும் தீவிரமாக இந்த அவலங்கள் அங்கே
அரங்கேறப்போகின்றன. சீசியின் ஆட்சியில் எகிப்திலும் இதுதான் நிலை!
ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்
ஜெ
|
ர்மனியின் தலைநகர் பெர்லினில் முஸ்லிம்களின் எண்ணிக்கை
கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காகப் பெருகியுள்ளது. அதே நேரத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை
குறைந்துள்ளது. யூதர்களின் எண்ணிக்கையோ
மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் மற்றும் பிராண்டன்போர்ஜ் மாநிலங்களின்
புள்ளிவிவர மையத்தின் அறிக்கையில் இத்தகவல் காணப்படுகிறது. தேஜஸ் நாளிதழில்
வெளியான இந்த அறிக்கையில் காணப்படுவதாவது:
பெல்லினில் 1992இல் கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தது. 9.2
சதவீதம் முதல் 9.3 சதவீதம்வரை கத்தோலிக்கர்களின்
எண்ணிக்கை அதிகரித்த வேளையில், புராட்டெஸ்டண்டு கிறித்தவர்களின்
எண்ணிக்கை 17.5 சதவீதம் முதல் 26 சதவீதம்
சரிந்துவிட்டது. இது பெர்லினில் புராட்டெஸ்டண்டு பிரிவிக்கு ஏற்பட்ட
மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடைசி சில ஆண்டுகளில் பெர்லின் நகரில், யூதர்களின் எண்ணிக்கை மறுபடியும் குறைந்து, 2011இல் சுமார் பத்தாயிரமாகச் சுருங்கிப்போயிற்று. ஆனால்,
பெர்லின் நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து வளர்ச்சியிலேயே
இருந்துவருகிறது; பன்மடங்காகப் பெருகியுள்ளது. நகரில் 1,32,000 ஆக இருந்த முஸ்லிம்கள்
2,49,000 ஆக அதிகமாகியுள்ளனர்.
இன்னொரு புறம் ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டில் அடிக்கடி இஸ்லாம்
எதிர்ப்பைச் சந்தித்து வருகின்ற அதே வேளையில், இஸ்லாத்தில் இணையும்
ஹாந்து நாட்டினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறதாம்!
ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இஸ்லாத்திற்கு மாறியோர் குறித்து
ஆய்வு செய்த பெண் ஆய்வாளர் வெனிஷா ஃபிரோன் நாஜிம் கூறுகிறார்:
புதிதாக இஸ்லாத்தில் இணைந்த 48 பெண்களைச் சந்தித்தேன். முஸ்லிம் ஆண்களை
மணமுடிப்பதற்காகவே ஹாலந்து பெண்கள் இஸ்லாத்தில் சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.
ஆனால், அடிப்படையற்ற வாதமாகும் இது. நான் சந்தித்த 48 பேரில் 21 இளம்பெண்கள்
திருமணமே செய்துகொள்ளாதவர்களாவர்.
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தில் இணைகின்றனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரம்
என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாலந்து மொழியில் இஸ்லாத்தை எடுத்துரைக்கும்
வழிகாட்டிப் பெண்கள் தேவை என்று கூறும் அவர்கள், தாய்மொழியில்
உரைகளைக் கேட்பதற்கும் பயிலரங்கில் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
பிரிட்டனில் பாங்குமேடையுடன் முதல் பள்ளி
பி
|
ரிட்டனின் மையப் பகுதியாக விளங்கும் நாட்டிங்ஹாம் நகரில் பாங்கு
மேடையுடன் கூடிய முதலாவது பள்ளிவாசலை முஸ்லிம்கள் திறந்துள்ளனர். தொன்மையான இந்நகரில் நான்காண்டு கால முயற்சிக்குப்பின் முஸ்லிம்களின்
கனவு நனவாகியிருப்பது குறித்து, பள்ளிவாசல் இமாம் அவ்ரங்ஸீப்
கான் மகிழ்ச்சி தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு நகர மன்றத்தின் அனுமதியைப் பெற்ற முஸ்லிம்கள்,
1.2 மில்லியன் பவுண்ட் செலவில் அடையாளத்துடன் கூடிய இப்பள்ளிவாசலை எழுப்பியுள்ளனர்.
11 மீட்டர் உயரத்தில் இந்த பாங்கு மேடை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
நாட்டிங்ஹாம் நகரில் இதுவே முதலாவது பாங்கு மேடையாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக வீடுகளிலேயே தொழுதுவந்த நகர முஸ்லிம்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம்
என்பதில் சந்தேகமில்லை. பள்ளிவாசல்களின் பயன்பாட்டிற்காக
50 ஒலிபரப்புக் கருவிகள் வாங்க பிரிட்டன் காவல்துறை 5 ஆயிரம் பவுண்ட் நிதியுதவி அளித்துள்ளது. குறிப்பாக பர்மிங்ஹாம்
நகரில் பாங்கு, தொழுகை, குத்பா ஆகியவை ஒலிபரப்புவதற்கு
இது துணைபுரியும்.
சிறுபான்மையினரான முஸ்லிம்கள் இறையில்லங்கள் எழுப்புவதற்கு நிதியுதவி
செய்வது, அடிப்படைவாதிகளான வலதுசாரிகளின் எதிர்ப்பை
சம்பாதிக்கும் என்ற அச்சம் தங்களுக்கு இருப்பதை முஸ்லிம்கள் மறைக்கவில்லை.
இதற்கிடையில் ஃபிரான்ஸ் நாட்டில் மோன்ட்ரேக் நகரில் பள்ளிவாசல்
ஒன்று எழுப்புவதற்காக இடம் வாங்குவதற்கு அதற்கான அமைப்பு நிதி திரட்டிவருகிறது. கடந்த 9 மாதங்களில் 1.4 மில்லியன் யூரோ திரட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைதளத்தில் நிதி திரட்டுவதற்கான கோரிக்கை
வெளியிடப்பட்டது. தற்போது நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இப்போதுள்ள பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த இடம் வாங்கப்பட்டுள்ளது.
இந்தப் பழைய பள்ளிவாசல் பூட்டப்படும் என்று நகர மன்றம் எச்சரித்திருந்தது
குறிப்பிடத் தக்கது.
பள்ளிவாசல் கட்டி முடிக்க 2 லட்சம் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் செராகோஸ்
பகுதியில் கிறித்தவ தேவாலயம் ஒன்றை முஸ்லிம்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். 1,50,000 டாலருக்கு வாங்கப்பட்ட அந்த இடம் பள்ளிவாசலாக மாற்றப்பட
உள்ளது. தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருவோரின் எண்ணிக்கை மிகவும்
குறைந்துபோனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்!
‘வடக்கு கல்வி மையம்’ என்ற அமைப்பே இதற்கான
ஏற்பாட்டினைச் செய்துவருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகி யூசுஃப்
சோல் கூறுகிறார்: நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலுக்கு,
‘மசீஹ் இப்னு மர்யம்’ பள்ளிவாசல் எனப் பெயர் சூட்டப்படும்.
இப்பள்ளிவாசலில் மார்க்க மற்றும் கல்வி சேவைகள் அளிக்கப்படும்.
ஆங்கில மொழி கற்பிக்கப்படும்.
இப்பகுதியில் வசிப்போரில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தம் இல்லங்களில் ஆங்கிலம் அல்லாத
வேறு மொழிகளிலேயே பேசுகிறார்கள். 16 விழுக்காட்டினர் அமெரிக்காவிற்கு
வெளியே பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்கப் பின்னணிப் பாடகர் லோன் கூறுவதைக் கேளுங்கள்:
நான் இஸ்லாத்தில் இணைந்தபின் பெண்களையும் பிரபலத்தையும் விட்டுவிட்டேன். சுகபோக வாழ்க்கையில் திளைத்திருந்த எனக்கு ஏதோ ஒன்று குறைவாகவே
இருந்துவந்ததை உணர்ந்தேன். அந்த ஒன்று (மன அமைதி) எனக்கு இப்போது இஸ்லாத்தில் கிடைக்கிறது.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் கரத்தால் ஏராளமான
அமெரிக்கர்கள் நல்வழி பெற்று, இஸ்லாத்தில் சேர்ந்துள்ளனர்.
நான் முஸ்லிமானபின் மன அமைதியை அனுபவிக்கிறேன். என் மனைவி, இரு குழந்தைகள், 80 வயதான தந்தை, ஏராளமான என் உறவினர் ஆகிய அனைவரும் இப்போது
முஸ்லிம்கள். ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை
கூடியவண்ணம் உள்ளது.
ரஷியாவில் இஸ்லாமிய ஹாட்லைன்
இ
|
ஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் எவரும், அல்லது சட்ட உதவிபெற விரும்பும் எவரும் இஸ்லாமிய ஹாட்லைனை தொடர்புகொண்டால்
உடனுக்குடன் வழிகாட்டப்படும். 2014 ஏப்ரல் முதல் இந்த வசதி நடைமுறைக்கு
வந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் 3 நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். இஸ்லாமிய ஷரீஆ,
சட்டம், உளவியல் துறை நிபுணர்களே இவர்கள்.
ரஷியா மற்றும் தாதாரியா ஆகிய மொழிகளில் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம்
அளிக்கப்படும். வேறு மொழிகளிலும் விளக்கம் அளிப்பதற்கான ஏற்பாடுகள்
நடந்துவருகின்றன. இஸ்லாமியச் சட்டப்படி மது அருந்துவதைத் தடுத்து, குடியில் சிக்கியோரை மீட்டெடுக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷியாவின் இண்டர்ஃபேக்ஸ் பத்திரிக்கை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.