Sunday, January 28, 2018

ترجموا المقالة العربية التاريخية التالية بلغتكم المحلية

# ترجموا المقالة العربية التاريخية التالية بلغتكم المحلية #

₹₹₹ هل انتشر الإسلام بالسيف؟
( رسالة الجهاد)
كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه قد أدركوا مما علمهم القرآن الكريم أن العقائد لا تستقر في النفوس بالقهر والترهيب، وإنما تستقر بالاقناع وفقا لقوله تعالى : أدع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة.

ولا يخفى أن القهر لا ينال من الإنسان إلا لحمه وعظمه، أما الاقتناع فإنه يخالط فيه دمه وعصبه ووجدانه - كما كانوا علموا أن العقيدة التي يكره عليها الإنسان، يكون أشد عداء لها، وأكثر حرصا على هدمها والتخلص منها.

ولذلك ابطلبت الشريعة الإسلامية عقود المكره، ونصت على بطلان الإكراه في المعتقدات بمثل قوله تعالى : لا إكراه في الدين قد تبين الرشد من الغي.

لو كان إستخدم الرسول صلى الله عليه وسلم أساليب الإكراه لحمل الناس على دعوته لكان - حاشاه - جاهلا برسالته، متجاوزا لحدود وظيفته.. ولا يستطيع متحذلق أن يدعي أن الرسول صلى الله عليه وسلم ارغم فردا على الاذعان لرسالته، بل كان إيمان الرسول وسلوكه وصبره على أذى المعتدين، عوامل فعالة في إستقطاب الناس لهذه الدعوة التي تتماشى الفطرة الإنسانية من كل الوجوه.

وكانت حروب الرسول صلى الله عليه وسلم كلها ردا للعدوان، وإن كانت تأخذ طابع الدفاع الهجومي إنتزاعا لزمام المبادرة وتحقيقا لعنصر المفاجأة كما معروف في العلم العسكري.

00 المعاني للألفاظ الغربية 00

1. الترهيب : அச்சுறுத்தல்
2. الإقناع : மனமாற்றம்
3. أساليب : வழிகள்
4. حاشاه : அல்லாஹ் காக்க வேண்டும்
5. متحذلق : புத்திசாலி
6. وظيفة : பணி, பொறுப்பு
7. عوامل : அம்சங்கள்
8 . استقطاب : கவர்தல், ஈர்த்தல்
9. تتماشى : ஒத்துபொபோகின்ற
10. طابع : முத்திரை, தோற்றம்

( إن شاء الله)

التعريب الصحيح عن التمرين السابق

# التعريب الصحيح عن التمرين السابق #

1. كانت قريش قد حاولت أن تدمر الإسلام في ابتدائه

2. كنت أتوقع قدومك، ولا أعلم أنك لما ذا نسيت.

3. كان قد هزم الحزب الحاكم الهندي في الإنتخابات العامة الماضية.

4.كان رئيس وزراء الهند رئيسا لوزراء ولاية

5. كنت قد قدمت إلى بلدك في الشهر الماضي.

++++++++++ ( إن شاء الله)

Wednesday, January 24, 2018

# تمرينات في نفس الدرس #
عربوا الجمل التالية باللغة الأمية :

1. இஸலாத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிட குறைஷியர் எண்ணியிருந்தனர்.

2. நீ வருவாய் என நான் இருந்தேன் ; ஏன் மறந்தாய் என நான் அறியேன்.

3. இந்திய ஆளும் கட்சி கடந்த பொதுத்தேர்தலில் தோல்வி கண்டிருந்தது.

4. இந்தியப் பிரதமர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.

5. சென்ற மாதம் நான் உங்கள் ஊருக்கு வந்திருந்தேன்.

¶¶¶ الألفاظ العربية للمعاني الحديثة. ¶¶¶

0 ஆளும் கட்சி : الحزب الحاكم
0 தோல்வி கண்டிருந்தது :كانت قد هزمت
0 பொதுத் தேர்தல் : الإنتخابات العامة
0இந்தியப் பிரதமர் : رئيس وزراء الهند
0மாநில முதல்வர் : رئيس وزراء الولاية.

( إن شاء الله)
எத்தனை பேருக்குத் தெரியும்?

எங்கள் மொழிபெயர்ப்பாளர் குழு, சென்னை புத்தகக் காட்சிக்கு, இறுதி நாளான 22.1.2018 மாலை சென்றிருந்தோம். ஒவ்வோராண்டும் புத்தகக் காட்சியில், அலுவலகப் பணிக்கு வேண்டிய தமிழ் அகராதிகள், விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, எழுத்து ஆகியவை தொடர்பான புத்தகங்களே வாங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு ஒரு முக்கியமான நூலை சொந்த உபயோகத்திற்கு வாங்குவதென நானும் மௌலவி, யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி அவர்களும் தீர்மானித்துத் தொகையும் கொண்டு போயிருந்தோம். விகடன் குழும வெளியீடான அந்நூல், விகடனிலும் இல்லை; மற்ற கடைகளிலும் கிடைக்கவில்லை.

விசாரித்ததில், விகடன் அந்நூலின் வெளியீட்டை நிறுத்திவிட்டதாக அறிந்தோம். சிரமப்பட்டு அலைந்து இறுதியாக ஒரு ஸ்டாலில் கண்டுபிடித்து இரண்டு செட் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நூல் மொத்தம் 3 பாகம்; விலை: ரூ.4000/-

1968 முதல் ஆங்கிலத்தில் Encyclopedia Brittannica ஒரு முக்கியமான பார்வை நூலாக இருந்துவருகிறது. இதனை 2007ஆம் ஆண்டு டாக்டர் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா ஆகியோர் கொண்ட ஆய்வாளர் குழு தமிழில் மொழிபெயர்க்க, பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் விகடன் வெளியிட்டது.

இந்நூலில் உலக நாடுகள், பிரபலங்கள், மதங்கள், வேதங்கள், ஆலயங்கள், கலை, மருத்துவம், வணிகம், தத்துவம், அரசியல், புவியியல், வரலாறு, அறிவியல், இலக்கியம், கணினி முதலான 28 ஆயிரம் கட்டுரைகளும் 2000 படங்களும் இடம்பெறுகின்றன. மேலும் இந்தியா குறித்தான 2ஆயிரம் கட்டுரைகளும் இலங்கை, மலேசியா போன்ற தமிழர் வாழும் பகுதிகளைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. அ முதல் ன வரையான வரிசைமுறையில் (ஆங்கிலப் பெயர்கள் அடைப்புக் குறியில்) கட்டுரைகள் அமைந்துள்ளன.

மூன்று பாகங்களுடன் பொருள் குறிப்பு அகராதி (பொருளடக்கம்) ஒன்று 88 பக்கங்களில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. தேடலுக்கு இது உதவியாக இருக்கும்.

எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர், இலக்கிய ஆர்வலர், மாணவர்.. என எல்லா அறிவு ஜீவிகளிடமும் இருக்க வேண்டிய தகவல் களஞ்சியமாகும் இது.

தமிழில் கிடைத்து வந்தது பேருதவியாக இருந்தது. தமிழ் பதிப்பு நின்றுபோனது பேரிழப்பாக இருக்கிறது. அநேகமாக, அதன் கடைசி பிரதிகளை வாங்கியவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.

Sunday, January 21, 2018

التمرين في الفعل الماضي البعيد والماضي الحالي

# التمرين في الفعل الماضي البعيد والماضي الحالي #

₹ ترجموا بلغتكم العبارات التالية

1.كانا يعملان في مصنع، وكنت أدرس في الكلية التقنية

2. كان والدي أرسل إلى ألف روبية منذ أسبوعين

3. قد ذهبت إلى مدينة مومباي في العام الماضي كي أزور صديقي

4. قد كتبت إلى سعادتكم كتابا قبل شهرين

5.كانت تمثل خلال عامين في 75 فيلم سينمائي

6. كانت جمهورية الهند قد طلبت مساهمة مالية كبيرة من الصندوق الدولي

7.كانت إسرائيل قد تشن هجوما على مصر منذ بضعة أعوام

8. قد كنت سئلت من فضيلتكم فيصلا دينيا حول قضية تلفزيون

9.إبنا محمود قد كانا جرحا في صدمة السيارة وحملا إلي المستشفى

10. ماكنتم حفظتم فروض المدرسة فضربتم

11. كنتم لا تحسنون قراءة الصحيفة العربية من قبل

12. كان قد وصل إلى القاهرة مساء أمس

13. تستطيع الشمس أن تجفف مياه المحيط ولكن لن تستطيع أن تجفف دموع إمرأة.

¶¶¶ معاني الألفاظ الغريبة ¶¶¶
0 مصنع : தொழிற்சாலை
0 لسعادتكم : தங்களுக்கு
0 تمثيل : நடிப்பு
0 فيلم سينمائي : திரைப்படம்
0 جمهورية الهند : இந்தியக் குடியரசு
0 مساهمة مالية : நிதியுதவி
0 الصندوق الدولي : சர்வதேச நிதியகம்
0 شن هجمات : தாக்குதல் தொடுத்தல்
0 فيصل : தீர்ப்பு
0 صدمة : விபத்து
0 فروض المدرسة : home work
0 المحيط : கடல்
كلية التقنية : தொழில் நுட்ப கல்லூரி

+++++++++++++++++++
( إن شاء الله)

Tuesday, January 09, 2018

الدرس السابع في بيان قسمي الفعل الماضي

# الدرس السابع في بيان قسمي الفعل الماضي #
+++++++++++++++++++

إن الفعل الماضي قد ينقسم إلى الماضي الإستمراري والماضي البعيد. إنك إذا زدت كلمة ' كان' في أول الفعل المضارع يصير ماضيا إستمراريا.

الأمثلة :
كان يذهب - போய்க்கொண்டிருந்தான்
كانا يقرءان - அவ்விருவர் ( ஆண்கள்) படித்துக்கொண்டிருந்தனர்
كانوا يكتبون - அவர்கள் ( பல ஆண்கள்) எழுதிக்கொண்டிருந்தனர்
كانت تشاهد - அவள் பார்த்துக்கொண்டிருந்தாள்ற
كانتا تتحدثان - அவ்விருவர் ( பெண்கள்) பேசிக்கொண்டிருந்தனர்
كن يأكلن - அவர்கள் ( பல
பெண்கள்) சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
كنت أهرع - நான் ஓடிக்கொண்டிருந்தேன்
كنا نسمع - நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்

أما إذا زدت كلمة ' كان' في أول الفعل الماضي فهو يصير ماضيا بعيدا.
الأمثلة :
كان جاء - அவன் வந்திருந்தான்
كانا طلبا - அவ்விருவர் ( ஆண்கள்) கேட்டிருந்தனர்
كانوا بعثوا - அவர்கள் (  பல ஆண்கள்) அனுப்பியிருந்தனர்
كانت قالت - அவள் சொல்லியிருந்தாள்
كانتا شاجرتا - அவ்விருவர் ( பெண்கள்) சண்டைபோட்டிருந்தனர்
كن ساعدن - அவர்கள் ( பல பெண்கள்) உதவியிருந்தனர்
كنت رحت - நான் போயிருந்தேன்
كنا صمنا - நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம்

₹ الأمثلة في مجهول الماضي الإستمراري ₹
كان يفتح باب المسجد - பள்ளிவாசல் கதவு திறக்கப்பட்டுக்கொண்டிருந்தது
كانت تغلق الكلية - கல்லூரி மூடப்பட்டுக்கொண்டிருந்ததுட
كانوا يحاكمون - அவர்கள் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்

₹ الأمثلة في مجهول الماضي البعيد ₹
كان أعلن - அறிவிக்கப்பட்டிருந்தது
كان ولع النور - விளக்கு போடப்பட்டிருந்தது

₹ الأمثلة في النفي ( الإستمراري) ₹
ما كان يلعب - أو - كان لا يلعب : அவன் விளையாடிக்கொண்டிருக்கவில்லை
ما كنت اتدخن - أو - كنت لا اتدخن : நான் புகைப்பிடித்துக்கொண்டிருக்கவில்லை
ما كان يضرب - أو - كان لا يضرب : அவன் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கவில்லை

₹ الأمثلة في النفي ( البعيد) ₹
ما كنت حسبت - நான் நினைத்திருக்கவில்லை
ما كانت شربت - அவள் குடித்திருக்கவில்லை
ما كنا رأينا - நாங்கள் பார்த்திருக்கவில்லை

¶ الملحوظة ¶
العرب يستخدمون كلمة ' قد' كثيرا مكان فعل ' كان'
مثلا يقولون :
قد كتبت - مكان - كنت كتبت
قد يقرأ - مكان - كان يقرأ
وربما يستعملون ' كان' و ' قد' معا.

الاعزة! كرروا هذا الدرس مرة بعد أخرى وحافظوا القوانين والصيغ التي للماضي الإستمراري والبعيد. وبعد ذلك التمرين لا الآن.
( إن شاء الله)

Saturday, January 06, 2018

ஜமாஅத்துல் உலமாவைப் பாராட்டுவோம்!


*ஜமாஅத்துல் உலமாவைப் பாராட்டுவோம்!*
முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து, தமிழகமெங்கும் சமுதாயத்தை ஒன்றுதிரட்டி, கடும் கண்டனம் தெரிவிக்கின்ற முக்கியப் பணியை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சிறப்பாக சாதித்துவிட்டது. இதை மனமாரப் பாராட்ட வேண்டும்.

காரணம், இச்சட்டம் அஸ்திவாரத்தையே அசைத்துப்பார்க்கும் மிகப் பெரிய சதித் திட்டமாகும். முத்தலாக் செல்லுமா, செல்லாதா என்பதில் சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒரு சிவில் விவகாரத்தை கிரிமினல் விவகாரமாக மாற்றுவதை முஸ்லிம் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் ஏற்கமாட்டார்கள்.

இந்த வகையில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைக் குரலாக, இந்தக் கண்டனக் குரல்கள் தமிழ்நாடு முழுக்க ஜனவரி 5ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒலித்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதற்கு அடிகோலிய, உழைத்த, ஆதரவு கொடுத்த அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் என்பதில் ஐயமில்லை.

முத்தலாக் தடைச் சட்டம் மட்டுமல்ல; பலதார மணத் தடைச் சட்டம்; மதமாற்றத் தடைச் சட்டம்; குர்பானி தடைச் சட்டம்; மஹ்ரம் தடைச் சட்டம்… என இன்னும் பல ஈட்டிகள் நம்மை நோக்கி அணிவகுக்கக் காத்திருக்கின்றன. எந்த ஈட்டியையும் எதிர்கொண்டு வீழ்த்தும் திராணி இந்தச் சமுதாயத்திற்கு உண்டு. ஆனால், வழிகாட்டத்தான் ஆள் வேண்டும். அது மார்க்கம் கற்ற ஆலிம்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கண்டனக் கூட்ட மேடையில் தம்பிகள் முஜீபுர் ரஹ்மான் பாகவியும் மன்சூர் ஃபைஸியும் கண்டன முழக்கங்களை உணர்ச்சிபூர்வமாக எழுப்ப எழுப்ப, கண்ணுக்கு எட்டும் தூரம்வரை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகளையும் குரல்களையும் உயர்த்தி முழங்கியது இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஒலித்ததாகும். ஆலிம்களே!  இக்காட்சி நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகிறது. மார்க்கம் கற்ற நீங்கள் மட்டும் தலைமையேற்று வழிநடத்தினால், இந்தச் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருக்கிறது! இனி, எழுவதும் முன்னுக்குப்போய் வழிகாட்டுவதும் உங்கள் கையில்தான்!
______________________

Monday, January 01, 2018

ترجموا القصة الطفلية التالية باللغة الأمية

# ترجموا القصة الطفلية التالية باللغة الأمية #
~~~~~~~~~~~~~~~~
₹ حيلة الثعلب مع الأرنب ₹

إغتاظ الثعلب من الأرنب البري لأن الأرنب يضايق الثعلب ويحاول إزعاجه حين خروجه وعودته من صيده. استجمع الثعلب دهاءه وفكر في حيلة يتخلص بها من شر الأرنب البري الخبيث المزعج.

أحضر الثعلب كمية من. الزفت وجعل يدهن بها الحشائش والشوك وغطى هذا العمل بالعشب. ولما حضر الأرنب أخذ يأكل من العشب ويمرح وملأ بطنه بالأعشاب الخضراء الندية.

وعند ما أراد الأرنب العودة بعد ما شبع لصق بالزفت، قبض عليه الثعلب وقال له : إختر لك موتة. فقال الأرنب : كل الموت سواء إلا أن تلقيني في الشوك فأستحلفك ألا تفعل ذلك.

فأخذ الثعلب الأرنب وذهب به إلى حقل ملئ بالشوك وقذفه فيه. وعندئذ قفز الأرنب بعيدا عن الثعلب وقال له :
شكرا لك، لقد انقدتني من الموت، ألم تعلم انني ولدت في الشوك وفيه أعيش؟
( عن أطفال الجزيرة)

¶¶¶ معانى الألفاظ الغريبة : ¶¶¶
1.إغتاظ - கோபம் கொண்டது
2. الأرنب البري - காட்டு முயல்
3. إزعاج - தொல்லை
4. دهاء - புத்திக்கூர்மை
5.الزفت - தார்

( الدرس المستقبل في بيان قسمي الفعل الماضي - إن شاء الله)

# الترجمة للمقالة العربية في التمرين الماضي بالتاميل

# الترجمة للمقالة العربية في التمرين الماضي بالتاميل #

< ரமளான் வரவேற்பு >
~~~~~~~~~~~~~~~~
பூமியின் மேற்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து எல்லாருமே தகிழ்ச்சியோடும் ஆவலோடும் ரமளானை வழவேற்கின்றனர். இறைநம்பிக்கையால் கட்டமைக்கப்பட்ட திருப்தியான மனத்தாலும் பொறுமை மற்றும் அமைதியால் உறுதி செய்யப்பட்ட வலுவான வைராக்கியத்தாலும் இவ்வாறு வழவேற்கின்றனர். அனைத்துலகங்களின் இரட்சகன் அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணத்தால் அமைந்த உண்மையான எண்ணத்தோடும் அவர்கள் ரமளானை வழவேற்கின்றனர்.

பசிக்கோ தாகத்திற்கோ அவர்கள் அஞ்சுவதில்லை. கடும் வெயிலைப் பொருட்படுத்துவதில்லை. பகல் நீள்வதைக் கண்டு நடுங்குவதில்லை. கோடை வெப்பமோ பனிக் கால குளிரோ நோன்பிலிருந்து அவர்களை அகற்றிவிடுவதில்லை. நிலை எப்படி மாறினாலும் அவர்கள் உண்மையிலேயே நோன்பு நோற்பவர்களே.

ரமளானில் அவர்கள் வழிபாடு செய்கிறார்கள். தூய்மை அடைகிறார்கள். பாவமன்னிப்புக் கோருகிறார்கள். நோன்பு, தானம், இதர வணக்க வழிபாடுகளால் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாகிறார்கள். அந்த மாதத்தில் பாவங்கள், தீமைகள், தடைசெய்யப்பட்டவை ஆகியவற்றிலிருந்து விலகிவிடுகிறார்கள்.

ரமளான் யாருடைய கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அவருக்கு வாழ்த்துகள். அவர்தம் எஜமானனிடம் திரும்புகிறார். அவனிடம் பாவமன்னிப்புக் கேட்கிறார்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் மீட்சி பெறுகிறார்கள்.

( இன் ஷாஅல்லாஹ்)