இஸ்லாத்தைத் தெளிவுபடுத்தும்
சஊதி நெட்வொர்க்
இ
|
ஸ்லாத்தைத் தப்பும் தவறுமாகப் புரிந்துவைத்துள்ள மேற்குலக மக்களுக்கு உண்மையைப் புரியவைக்கும் நோக்கோடு சஊதி நிறுவனம், தொலைக்காட்சி இணையத்தைத் தொடங்கவிருக்கிறது. ஜெர்மனி மொழியில் ஒளிபரப்பாகவுள்ள இநத் இணையத்தால், ஜெர்மனி மொழி பேசும் 145 மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச தகவலுக்கான ‘ஹுதா’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது காணப்படுகிறது. ரியாத்தில் இந்த வலைத்தளத்திற்குத் தலைமையகம் உண்டு. இது குறித்து ‘அல்மதீனா’ நாளிதழ் 2016 ஜூலை 30ஆம் நாள் இதழில் தகவல் வெளியிட்டுள்ளது.
‘ஹுதா’ தொலைக்காட்சி வலைத்தள நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் ஹம்து அல்ஃகம்மாஸ் கூறியதாவது: இந்தப் புதிய இணையதள சேனல், ஜெர்மன் மொழிபேசும் 14 கோடியே 50 லட்சம் மக்களைச் சென்றடையவிருக்கிறது. இதன்மூலம், மேற்குலக மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல் பிறக்கவும் இஸ்லாமிய போதனைகள் குறித்த தவறான கண்ணோட்டம் மாறவும் வழி உண்டாகும்.
வலைத்தள தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் சிரமங்கள் பல இருந்தாலும் தகவல்களைச் சேர்ப்பதில் நெட்வொர்க்கிற்கு அதிகத் தாக்கம் உண்டு. ‘ஹுதா’ ஜெர்மன் சேனல், இஸ்லாத்தின் உண்மைத் தன்மையைச் சேர்ப்பதில் மாபெரும் பங்காற்றும் என்று டாக்டர் ஃகம்மாஸ் தெரிவித்தார். இஸ்லாம் ஒரு கருணை மார்க்கம். அறிவுக்கும் அறிவியலுக்கும் அது முக்கியத்துவம் அளிக்கிறது; அது வன்மையான, கடினப்போக்குள்ள மார்க்கமன்று.
இந்தச் சேனல் அடுத்த சில மாதங்களில் IPTV தொழில்நுட்பத்தில் படிப்படியாகத் தன் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கும். ஐரோப்பாவின் அஸ்ட்ரா-பி2 செயற்கைக் கோள் உள்ளிட்ட கோள்கள் வாயிலாகவும் இணையதளம், யூடியூப் ஆகியவற்றில் செய்யப்படும் நேரடி ஒளிபரப்பு வாயிலாகவும் மக்களைச் சென்றடையும் –என்று ஹுதா வலைத்தள செயல் நிர்வாகி ஷைகு ஃபுஆத் பின் அப்திர் ரஹ்மான் அர்ரஷீத் தெளிவுபடுத்தினார். (அல்முஜ்தமா)
2017 முடிவில் ‘அல்ஹரமைன்’ ரயில்
ச
|
ஊதி ரயில்வே பொதுத்துறை நிறுவன உதவித் தலைவர் யூசுஃப் பின் இப்ராஹீம் அல்அப்தான் தெரிவித்ததாவது:
2017 முடிவில் ‘அல்ஹரமைன்’ ரயில்வே திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதன் மூலம் 9 ஆயிரம் பயணிகள் ஒரு மணி நேரத்தில் மக்காவிலிருந்து மதீனா சென்றடைய முடியும்.
இத்திட்டம் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் தாண்டி நிறைவை நோக்கிச் செல்கிறது. தடைகளில் முக்கியமானதாக நில கையகப்படுத்தலைக் குறிப்பிடலாம். காலிமனைகள் என 5150 கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 1600 மனைகள் குடியிருப்பதற்கு ஏற்றவையாகும்.
ராபிஃகில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் பொருளாதார நகர ரயில் நிலையத்தில் நடந்த சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தபோது இத்தகவல்களை உதவித் தலைவர் வெளியிட்டார். ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் பலர் இந்த முதலாவது சோதனை ஓட்டத்தின்போது கலந்துகொண்டனர். மனைகளுக்கு வழங்கப்பட்ட பகரத்தொகை 9 பில்லியன் (900 கோடி) ரியாலை எட்டியது. அடுத்து தண்டவாளங்கள் அமைக்கப் பெரும் செலவு பிடித்தது.
இருப்பினும், சாதாரணமான கட்டணங்களே நிர்ணயிக்கப்பட உள்ளன. 40-50 ரியால்கள் இருக்கக்கூடும். ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிவைத் தொட்டுவிட்டன. மதீனா ரயில் நிலையல், ராபிஃக் ரயில் நிலையம், ஜித்தா ரயில் நிலையம், திருமக்கா ரயில் நிலையம் ஆகியவை நூறு விழுக்காடு நிறைவடைந்துவிட்டன.
http://mugtama.com/archive/item/39395-2098.html
(அல்முஜ்தமா)
No comments:
Post a Comment