அமெரிக்கப் படைகளின் காட்டுமிராண்டித்தனம்
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள், அப்பாவி கிராம மக்களை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு, நின்றுகொண்டு அவர்களின் பிரேதங்கள்மீது சிறுநீர் கழிக்கம் காட்சி. கடந்த மார்ச் மாதம் நடந்த அவலம் இது.
இஸ்ரேலுக்கு எரிவாயு சப்ளையை நிறுத்தியது எகிப்து
எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இஸ்ரேலுக்குச் செய்துவந்த எரிவாயு
சப்ளையை எகிப்து நிறுத்திவிட்டது. இதனால் 700 மில்லியன் டாலர் அளவுக்க இழப்பு
என்றால், 10 மில்லியன் ஷைகல் (2.6 மில்லியன் டாலர்) இஸ்ரேலுக்கு இழப்பு
ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், எகிப்துடனான உறவைச் சீரமைக்க உதவுமாற அமெரிக்க அதிபர் ஒபாமாவை
இஸ்ரேல் கேட்டுள்ளது. எகிப்து எல்லையைக் கடக்க எவன் முயன்றாலும் காலை ஒடிப்போம்
என்று எகிப்து இராணுவப் படைத் தலைவர் ஹுசைன் தன்தாவி அண்மையில் எச்சரித்திருந்தார்
என்பது குறிப்பிடத் தக்கது.
சர்கோஸி வீழ்ச்சிக்கு இக்வான்கள் காரணமா?
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோஸிக்கு எதிராக வாக்களிக்குமாறு பிரான்ஸ்
முஸ்லிம்களை டாக்டர் தாரிக் ரமளான் (ஹசனுல் பன்னாவின் பேர்ர்) கேட்டுக்கொண்டார்.
இதனால் பிரான்ஸில் எதிர்க்கட்சிக்கு இக்வானுடனான கூட்டணி ஒப்பந்தம் இருக்கிறது
என்று சர்கோஸி குற்றம் சாட்டினார். 700 பள்ளிவாசல்களின் இமாம்கள் வெள்ளிமேடையில்
எதிர்க்கட்சி வேட்பாளர் பிராங்கோயிஸ் ஹோல்ண்டேவுக்கு வாக்களிக்குமாறு
முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டனர்.
சர்ச்சில் குர்ஆன் விளக்கவுரை அளித்த பேராயர்
அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில் ஒரு கிறித்தவ ஆலயத்திற்குள் ஸ்கோட்
மார்ஜன் என்ற பேராயர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி விளக்கமும் அளித்தார்
என்று சொன்னார் நம்புவீர்களா? உண்மை அதுதான். குர்ஆன் முஸ்லிமல்லாதோர்மீத
வன்முறையை கட்டவிழ்த்துவிட தடை விதிக்கிறது என்றும் பெண்களை மதித்து சமூகக்
கட்டமைப்பில் பெண்களுக்கான பங்கை எடுத்துரைக்கிறது என்றும் பேராயர் விவரித்தார்.
பேராயர் மார்ஜன் சிறு வயதில் தம் தந்தையுடன் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தவர்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழ்ந்தபோது இஸ்லாத்தின் அடிப்படைகளைக்
கற்றுக்கொண்டவர். இது, பெரியவரானபின் அவரது மனத்தை நன்கு ஆக்கிரமித்துக்கொண்டது.
நான் கற்றுக்கொண்ட உண்மையை என் சமூகத்திற்குச் சொல்வதுதான் என் கடமை என்றார்
மார்ஜன்.
இக்வான்களின் கட்சித் தலைவர் எகிப்து அதிபராகிறார்
எகிப்தில் 80 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னால் எகிப்து ஆட்சியை இக்வானுல்
முஸ்லிமீன் அமைப்பினர் கைப்பற்றுகின்றனர். அரசியல் ரீதியான ‘சுதந்திர நீதி’க் கட்சித் தலைவர் டாக்டர் முஹம்மது முர்சீ எகிப்து
அதிபராகிறார். இவர் ஒரு பொறியாளர்; முனைவர்; பேராசிரியர்; 1992லிருந்து இக்வான்களின் அரசியல் பிரிவு உறுப்பினர்.
1951ல் ‘அல்அத்வா’ கிராமத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்தார். கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டதாரி ஆனார்.
அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபின், கலிபோர்னிய
பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 2000 – 2005ல் எகிப்து
மக்களவையில் இக்வான் உறுப்பினர் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
அமெரிக்காவில் முஸ்லிம்களே அதிகம்
அமெரிக்காவில் யூதர்களைவிட முஸ்லிம்களே அதிகம். அமெரிக்காவில் முஸ்லிம்களின்
எண்ணிக்கை கடந்த பருவத்தில் அதிகமாயிருப்பதாக அமெரிக்க மதங்களுக்கான புள்ளிவிவரம்
தெரிவிக்கிறது. மத்திய மேற்கு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் அமெரிக்க
யூதர்களின் எண்ணிக்கையைவிட அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கையே கூடுதலாகும்.
இப்பகுதியில் யூதக் கோயில்களில் பெரும்பாலானவை பக்தர்களே இல்லாமல் காலியாகிவிட்டன.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட டேல்ஜோன்ஸ் கூறுகிறார்: 2010ல் இஸ்லாத்தில் இணைந்த
அமெரிக்கர்கள் 2.6 மில்லியனைவிட அதிகம்; இது 2000ல் ஒரு மில்லியனாக இருந்த்து. இதற்கிடையில்,
அமெரிக்கர்களில் 55 விழுக்காட்டினர் சமய நிகழ்வுகளில் முறையாக்க்
கலந்துகொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
லண்டன் மேயர் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் மேயர் போரிஸ் ஜான்சன் தமது பதவி காலத்தில் லண்டன்
முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளாததற்கு வருத்தம் தெரிவித்தார். 50
பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது இந்த
வருத்தத்தை அவர் தெரிவித்தார். லண்டன் மாநகரில் மட்டும் 50 லட்சம் முஸ்லிம்கள்
உள்ளனர்.
பிரிட்டன் சூழ்நிலைகளுக்கேற்ப இஸ்லாமிய அடிப்படைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்
என்று மேயர் ஜான்சன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்காகவும்
மன்னிப்புக் கேட்டார். “இஸ்லாம் ஒரு சாந்தி
மார்க்கம்” என்று குறிப்பிட்ட மேயர்,
தான் அந்தக் கட்டுரையை எழுதியது சரியல்ல என்றார். ஐரோப்பா மனித உரிமை நீதிமன்றம்
அளித்த தீர்ப்பின்படி, பிரிட்டன் முஸ்லிம்களில் யாரையும் அமெரிக்காவிடம் நீதி
விசாரணைக்காக ஒப்படைப்பதைத் தன்னால் ஏற்க முடியாது என்றும் லண்டன் மேயர்
தெரிவித்தார்.
தமிழாக்கம்: mஅ. முஹம்மது கான் பாகவி
அல்முஜ்தமா இதழிலிருந்து
a good article. by
ReplyDeletehttp://puthiyaminnal.blogspot.in/
இதுபோன்ற செய்திகள் பலருக்குக் கிடைப்பதில்லை. அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநூ. அப்துல் ஹாதி பாகவி