ஏ
|
ப்ரல் 24 உங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் நிர்ணயிக்கும் நாள். கையிலுள்ள
வாக்குச்சீட்டு ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விலைபோகின்ற கடைச்சரக்கு அல்ல!
உங்களின் கருத்துச் சுதந்திரத்தை, நம்பிக்கைகளை, வாழ்வில் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளை, கற்கும் உரிமையை, கற்பிக்கும் அதிகாரத்தை, திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற நடைமுறைகளை நீங்கள் விரும்பும் சட்டப்படி தொடர்ந்து மேற்கொள்வதை… இவற்றையெல்லாம் காத்து தக்கவைத்துக்கொள்வதற்கான துருப்புச்சீட்டே இந்த வாக்குச்சீட்டு!
- பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
- இராமர் கோயில் கட்டுவதற்கான வழிவகைகள் ஆராயப்படும்.
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்படும்.
- மதமாற்றத்திற்குத் தடை விதிக்கப்படும்.
- பசுவதைக்குத் தடை விதிக்கப்படும்.
- மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
- பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- சேது சமுத்திர திட்டம் கைவிடப்படும்.
இவையெல்லாம் என்ன தெரியுமா? இந்தியாவின் 16ஆவது பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் கறுப்புச் சட்டங்கள்தான் இவை.
இந்தக் கட்சி மட்டும் வெற்றிபெற்று நடுவண் அரசில் அமர்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?
- மதச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது.
- அவரவர் தம் சமயங்களின் சட்டங்களின்படி திருமணம், மணவிலக்கு, பாகப் பிரிவினை போன்ற சிவில் நடைமுறைகளைப்
பின்பற்ற முடியாது
- விரும்பியவர், விரும்புகிற
மதத்தைத் தழுவ முடியாது.
- சமயப் பள்ளிக்கூடங்களை அவரவர் விரும்பும் வகையில் நடத்த முடியாது.
- ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் பாழாய்ப்
போகும்.
- சிறுபான்மையினருக்கென மத்திய அரசில் இடஒதுக்கீடு கிடையாது.http://www.bjp.org/manifesto2014
இப்போது சொல்லுங்கள்!
வாக்காளப் பெருமக்களே! என்ன செய்யப்போகிறீர்கள்? கவர்ச்சியான விளம்பரங்களையும் ஆடம்பரக் கூட்டங்களையும் பொய்யான கருத்துக் கணிப்புகளையும் பார்த்து ஏமார்ந்து, உங்கள் உரிமைகளை நீங்களே பறிகொடுக்கப்போகிறீர்களா? அல்லது சுதாரித்துக்கொள்ளப்போகிறீர்களா?
யோசியுங்கள்! ஒன்றுக்குப் பலமுறை யோசியுங்கள்!
இந்த பா.ஜ.க.வுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ தேர்தலுக்குப்பின் பா.ஜ.க.வுடன் பதவியைப் பங்குபோட்டுக்கொள்ள அதிக வாய்ப்புள்ள கட்சிகளுக்கோ ஆதரவாக ஒரு வாக்குகூடப் பதிவாகிவிடக் கூடாது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே!
மதச்சார்பற்ற, சமய நல்லிணக்கம் பேணும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்! சொல்வது எங்கள் கடமை! சொல்லிவிட்டோம்.
மதச்சார்பற்ற, சமய நல்லிணக்கம் பேணும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்! சொல்வது எங்கள் கடமை! சொல்லிவிட்டோம்.
இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம்
No comments:
Post a Comment