செல்வாக்கு மிக்க நூறுபேரில்
தாரிக் ரமளானுக்கு இடம்
பி
|
ரிட்டன் ‘டைம்’ ஏடு, பல்வேறு
சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நூறுபேரில் ஒருவராக சுவிட்சர்லாந்தின் இஸ்லாமிய
சிந்தனையாளர் டாக்டர், தாரிக் ரமளானைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் இமாம் ஹசனுல்
பன்னா அவர்களின் பேரர் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவில் இஸ்லாமியப்
பரப்புரை ஆற்றுவதிலும் இஸ்லாமோஃபோபியாவுக்குத் தக்க தீர்வு காண்பதிலும் ஐரோப்பாவில்
வாழும் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்படாததை எதிர்த்து இயக்கம் கண்டதிலும்
மாபெரும் சாதனை படைத்தவர் தாரிக் ரமளான் என ‘டைம்’ ஏடு பாராட்டியுள்ளது.
طارق رمضان |
கனடா
பல்கலைக் கழகம் அண்மையில் வெண்ட்சார் நகரில் இஸ்லாமிய விழிப்புணர்வு வாரம்
அனுசரித்தது. இஸ்லாம் குறித்துச் சொல்லப்படும் தவறான விளக்கங்களையும் பொய்யான
செய்திகளையும் மறுத்து, உண்மைகளை விவரிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு வாரம்
மேற்கொள்ளப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களின் தொடர்
முயற்சியால் இது நடத்தப்பட்டது.
இதே
அடிப்படையில், இஸ்லாமிய இம்பீரியல் கல்லூரி மன்றம், இஸ்லாமிய அறிமுக வாரம் ஒன்றைக்
கடைப்பிடித்தது. ‘இஸ்லாமைக் கண்டறிந்துகொள்’ என்பது அறிமுக வாரத்தின் தலைப்பு.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு லண்டன் பொதுமக்களுக்குப் பொது அழைப்பு
விடுக்கப்பட்டது. இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள் குறித்துக் கேட்டு, விடைகள் பெற்று அனைவரும்
தெளிவு பெற வேண்டும் என்பதே நோக்கம்.
அறிமுக
வார நிகழ்ச்சிகளில் உரைகள், சந்திப்புகள், கட்டுரைகள், உணவுக்கான இடைவெளி ஆகியன
இடம்பெற்றன. இவற்றில் ஏராளமான ‘தாஇ’கள், அறிஞர்கள் கலந்துகொண்டு கேள்விகளுக்கு
விடையளித்தனர்; இஸ்லாம், முஸ்லிம்
சமூகம், மனிதன் தொடர்பான தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தினர்.
கத்தோலிக்க மருத்துவமனையில் தொழுகைத் தலம்
ஜெ
|
ர்மனி நாட்டின்
ஜனநாயகப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவரும் திட்டத் துறை அமைச்சருமான ஜான்ட்ராம் ஷினைடர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தம் உரையில், “இஸ்லாம் ஜெர்மனி சமூகத்தின் ஓர் அங்கமாகும். குறிப்பாக, வடக்கு ரீன்வெஸ்ட்ஃபாலி மாநிலத்தில் இதுதான் நிலையாகும். இன்று இதற்கு மாற்றமான சிந்தனை சிலரிடம் இருந்தாலும் இதுவே உண்மையாகும்” என்று குறிப்பிட்டார்.
ஜெர்மனியின் ரைம்ஷேய்டு நகரில் புதிய பள்ளிவாசல் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டியபோது இவ்வாறு சொன்ன அவர் மேலும் கூறியதாவது:
இந்நகரில்
ஏற்கெனவே ஒரு பள்ளிவாசல் இருந்துவருகிறது. இப்பள்ளிவாசல்
தூபி (Dome). 28 மீட்டர் கொண்ட மனாரா ஆகியவற்றுடன் இருந்தாலும்
இதுவரை அங்கு பாங்கொலி கேட்டதில்லை. இந்நிலையில் இந்தப் புதிய
பள்ளிவாசல் எழுப்பப்படுவதானது, ஜெர்மனியில் குடியேறிய முஸ்லிம்கள்
ஜெர்மனி சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதற்குத் தெளிவான
அத்தாட்சியாகும்.
இதன் தொடர்ச்சியாக, வடக்கு ரீன்வெஸ்ட்ஃபாலி மாநிலத்தில் ‘பாகூம்’
நகரில் ‘புனிதர் எலிஸபெத்’ கத்தோலிக்க மருத்துவமனையில், நாட்டிலேயே முதலாவது தொழுகைத்
தலம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெற
வரும் முஸ்லிம்கள், அவர்களைச் சந்திக்கவரும் முஸ்லிம் பார்வையாளர்கள்
ஆகியோர் தம் தொழுகைக் கடமையை நிறைவேற்ற இத்தலம் உதவும். நகர மக்களின்
கோரிக்கையின்பேரில் பாகூர் நகர்மன்ற உறுப்பினர் மேர்ஸ்லாவ்டோரக் மற்றும் பள்ளிவாசல்
மேலாளர் ஆகியோரின் முன்முயற்சியால் இத்தொழுகைத் தலம் அமைக்கப்படுகிறது.
மருத்துவமனையில்
இருந்த சிறிய தேவாலயமே தாற்காலிகத் தொழுகைத் தலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இதே இடத்தில் முஸ்லிம்களுக்கெனத் தனிப் பள்ளிவாசல்
கட்டப்படும்.
பெல்ஜியத்தில் பெருகும் முஸ்லிம்களின் எண்ணிக்கை
பெ
|
ல்ஜியம் தலைநகர்
பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய முஸ்லிம் மகளிர் மன்றக் கூட்டத்தில், பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்து விரிவாகப்
பேசப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மன்றம் உலக முஸ்லிம்களுக்கு
விடுத்த அறிக்கையில், “முஸ்லிம் மகளிருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள
உரிமைகளை முஸ்லிம்கள் வழங்கிட வேண்டும். அப்போதுதான் சமூக நீதி
நிலைபெறும்; முஸ்லிம் பெண்களின் நிலை உயரும்” என்று வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக
பெல்ஜியம் இமாமும் சமூக ஆர்வலருமான நூருத்தீன் தவீல் கூறியதாவது: ஃப்ளாமென்க் பகுதியில் வாழும் பெல்ஜிய மக்களிடையே இஸ்லாம் வேகமாகப்
பரவிவருகிறது. குறிப்பாகப் பெண்கள் அதிகமாக இஸ்லாத்தில் இணைகின்றனர்.
ஆயினும், பெரிய நகரங்களில் வாழ்வோர் இஸ்லாத்தில் இணைவதாகத் தெரியவில்லை.
முஸ்லிம்களுடன் கலந்து வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. சமூகத் தொடர்புச் சாதனங்களுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கிறது.
இளைஞர்கள், முதியோர் எனப் பல வயதினரும் இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர்.
இருப்பினும் பெண்களின் சதவீதமே அதிகம். குறிப்பிட்ட
எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், இஸ்லாத்திற்கு
மாறுவோர் மனஅமைதியைத் தேடியே வருகின்றனர் என்பது மட்டும் உறுதி. புதிதாக இஸ்லாத்தில் இணைந்த பெண்களுக்கென ஒரு மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது.
குறுகிய காலத்தில் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 700ஐ எட்டியது என்று இமாம் நூருத்தீன் விவரித்தார்.
ஜப்பான் விமான நிலையத்தில் முஸ்லிம் பயணிகள் தொழுவதற்கு ஏற்பாடு
ஜ
|
ப்பான் நாகோயா
நகரில் ஷோபோ விமான நிலையம் உள்ளது. ஒஸாகா
வளைகுடாவின் நடுவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுக்குமேலே இவ்விமான நிலையம் அமைந்துள்ளது.
முஸ்லிம் பயணிகளின் தேவையை முன்னிட்டு தனியான தொழுகை அறைகள்,
ஹலால் உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக விமான நிலைய நிர்வாகம்
அறிவித்துள்ளது.
முஸ்லிம் பயணிகளின்
வேண்டுகோளை அடுத்து ஷோபோ – மலேசியா இடையிலான
புதிய ஏர்லைன்ஸ் ஒன்றை இந்த விமான நிலைய நிர்வாகம் அண்மையில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்
தக்கது. மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட
கிழக்காசிய நாடுகளிலிருந்து அதிகமான முஸ்லிம் சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் வருகிறார்கள்.
2020இல் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஜப்பான் தயாராகிவருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு முஸ்லிம்களுடனான நல்லுறவு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம்
ஜப்பானுக்கு உண்டு. 1930இல் ஜப்பானில் முஸ்லிம் மக்கட்தொகை வெறும்
ஆயிரமாக இருந்த நிலையில், இப்போது அங்கு 1,20,000 முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தென்கொரிய முஸ்லிம்கள் கோபம்
தெ
|
ன்கொரியாவில்
இசைஆல்பம் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் சிலர் சேர்ந்து வெளியிட்டுள்ள அந்த ஆல்பத்தில், குர்ஆனின் சில வசனங்கள் பாடல்வரிகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, ‘அந்நபஉ’ அத்தியாயத்தில்
(78) வசனங்கள் சில, பாடல் வரிகளில் சேர்க்கப்பட்டு,
இசையோடு வெளிவந்துள்ளது இந்த ஆல்பம். தென்கொரிய
முஸ்லிம் யூனியன் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன், வசனங்களை ஆல்பத்திலிருந்து அகற்ற வேண்டுமென்று கோரியுமுள்ளது. ஆல்பம் தயாரித்த நிறுவனம் அந்தச் சொற்களை அகற்றிவிடுவதாக உறுதியளித்துள்ளது.
அவ்வாறே, ஜப்பானின் தயாரிப்பான ‘அல்ட்ரா மேன்’
என்ற வீடியோ விளையாட்டிற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதில் வரும் விளையாட்டு வீரனுக்கு ‘அல்லாஹ்’ என்பதைப் போன்று ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர். இது முஸ்லிம்கள்
புனிதமாகக் கருதும் பெயரோடு தொடர்பு கொண்டிருப்பதால், விளையாட்டைக்
காணும் குழந்தைகளின் சமய நம்பிக்கையை இது கெடுத்துவிடும்; சட்ட
ஒழுங்கும் பாதிக்கப்படும் என்று மலேசியா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட
இந்த வீடியோகேமை யார் விற்றாலும் 3 ஆண்டுக்குக்
குறைவில்லாத சிறைதண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் முதலாவது இஸ்லாமிய அருங்காட்சியகம்
ஆ
|
ஸ்திரேலியா
நாட்டிலேயே முதலாவது இஸ்லாமிய அருங்காட்சியகம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் திறப்பு விழாவில் ஆஸ்திரேலியா நிதியமைச்சர் ஜோய்ஹாக்கி,
பன்முகக் கலாசாரத் துறை அமைச்சர் நகோலாஸ், ஆஸ்திரேலியா
தபால்துறை பொது மேலாளர் அஹ்மது ஃபாஹோர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா தபால்துறை நிர்வாகமே இந்த அருங்காட்சியத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
திறப்பு விழாவில்
பேசிய அஹ்மது ஃபாஹோர், “அருங்காட்சியகம் திறக்கப்படுவதற்கு
முன்பே, அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பார்வையாளர்கள் முன்பதிவு
முடிந்துவிட்டது. அருங்காட்சியகம் வெறும் வரலாற்றை மட்டும் கூறுவதாக
இருக்காது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் வேண்டிய
தகவல்களைப் பார்வையாளர்களுக்கு அளிக்கும்; இஸ்லாமியக் கலாசாரம்,
பண்பாடுகளைக் காட்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர்
கூறியதாவது: ஆஸ்திரேலியர்களின் மனதில் உருவாகியுள்ள
இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களையும் உண்மைக்குப் புறம்பான தீர்மானங்களையும் களைவதில்
அருங்காட்சியகம் இயன்றவரை பங்காற்றும். கல்வி, கலாசாரம் இரண்டையும் போதிக்கும் மையமாக இது விளங்கும். இத்திட்டத்திற்குத் தாராளமாக நிதியுதவி செய்த முஸ்லிம் சமுதாயம் பாராட்டுக்குரியது.
சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்ட அமைச்சர் ஹாக்கி தமது உரையில், “சிறப்பான முறையில் இந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அனைவரையும்
வாழ்த்துகிறேன். அருங்காட்சியத்தைத் திறந்துவைப்பதில் உவகை கொள்கிறேன்”
என்று குறிப்பிட்டார். அருங்காட்சியகத்தின் நுழைவு
வாயிலில் ஆப்கானிய ஒட்டக உருவம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில்
இஸ்லாம் பரவுவதற்கு ஆப்கன் முஸ்லிம்கள் அளித்த பெரும் பங்கினை நினைவுகூரும் முகமாகவே
இந்த ஏற்பாடு. 18ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள்
ஆஸ்திரேலியா வந்தார்கள் என்றும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
No comments:
Post a Comment