Friday, March 30, 2018

# التمرين في ترجمة المقالة العربية عن مجلة منار الإسلام #

# التمرين في ترجمة المقالة العربية عن مجلة منار الإسلام #
----------------------------------------

₹ இஸ்லாத்தில் நான் ₹
+++++++++++++++++++
நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, எகிப்தின் பிரசித்தி பெற்ற பிரமிடுகள் தொடர்பான படம் ஒன்று பார்த்தேன். படத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கையில் பாஙகொலியைச் செவியுற்றேன். பாங்கு சொன்னவரின் குரல் அழகாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தது. அது என் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும், அவர் என்ன சொல்கிறார்; எது பற்றி அறிவிப்புச் செய்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை

அதே பங்கை லண்டன் பள்ளிவாசல்களிலுருந்தும் கேட்டுள்ளேன். இந்ந பாங்கு குறித்து அறிந்துகொள்ள வேண்டுமென்ற பேரவாவில், எகிப்து மற்றும் சூடானைச் சேர்ந்த என் முஸ்லிம் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பாங்கு பற்றியும் அதன் பொருள் பற்றியும் அவர்களிடம் வினவினேன்.

இதையடுத்து, இஸ்லாம் குறித்து கூடுதலாகக் கண்டறிய வேண்டும் என்ற பிரியம் என்னைத் தள்ளியது. என் முஸ்லிம் நண்பர்கள் சில நூல்கள் கொடுத்து எனக்கு உதவினர்.

அந்நூல்கள் வாயிலாக, திருக்குர்ஆன் மனிதனின் பிரச்சினைகளுக்கும் விவகாரங்களுக்கும் தர்க்கரீதியாகவும் எதார்த்தமாகவும் தீர்வுகாண்கிறது என்பது எனக்குப் புலப்பட்டது. மேலும், இறைநம்பிக்கை கொண்ட மனிதனுக்கு பெரிய அளவில் மன அமைதியை குர்ஆன் அளிக்கிறது ;அதை அவன் நம்பும்போது.

இதுவே, பின்னால் நான் இஸ்லாத்தைத் தழுவக் காரணமாக அமைந்தது

என்கிறார், ஜமைக்ககாவைச்க் சேர்ந்த அப்துஸ் அப்துஸ் ஸலாம் இஸ்மீட் இஸ்மீட்.

****************, ********
الألفاظ الغريبة للمعاني الحديثة
1.لندن - லண்டன்
2. فيلم -   திரைப்படம்
3. مشاكل - பிரச்சினைகள்
منطقية - தர்க்கரீதியாக
4.اعتناق الإسلام - இஸ்லாத்தைத் தழுவுதல்
5. اهرامات - பிரமீடுகள்

Thursday, March 22, 2018

காலச்சுவடு இதழ் கட்டுரைக்கு நம் கடிதம

# காலச்சுவடு இதழ் கட்டுரைக்கு நம் கடிதம் #

வாசகர் கடிதம்

அன்புள்ள ஐயா!
வல்லபாய் எழுதிய ‘சில தோற்றப் பிழைகள்’ வாசித்தேன். முகத்துக்கெதிராகத் தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிவுமிக்க எழுத்தாளர்கள் இருப்பது, தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரும் பலம். சினிமாவில் கொடி நாட்டியவர்கள் எல்லாம் அரசியலிலும் நாட்டிவிடுவார்கள் என்ற பாமரத்தனமான பார்வை பரிதாபத்திற்குரியது. எம்.ஜி.ஆருக்கு அரசியல் பின்புலம் இருந்தது. சினிமாவை அதற்கான ஓர் ஊடகமாக அவர் பயன்படுத்திக்கொண்டார். காட்சிகள், வசனங்கள், பாடல் வரிகள் என ஒவ்வொன்றும் அவர் சார்ந்த அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகளுக்கு உரமூட்டுபவையாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
தனிக்கட்சி ஆரம்பித்து உயிர் வாழும்வரை முதல்வராகவே அவர் நீடிக்க அவருடைய படங்கள் மட்டும் காரணமல்ல; பாடங்களும் காரணம். அவரது அடிச்சுவட்டில் வந்த ஜெயலலிதாவும் சினிமாவில் மட்டுமன்றி, அரசியல் பள்ளியிலும் ஓரளவு பயின்றவர்தான். அதற்காக, இவர்களின் ஆட்சிகள் அப்பழுக்கற்றவை என்றோ, முன்மாதிரியானவை என்றோ நம்புவது, எதார்த்தத்தை மறுப்பதாகிவிடும்.
திரையில் ஜொலித்தவர்கள் எல்லாம் தரையிலும் ஜொலிப்பார்கள் என்றால், சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் முதல்வர்கள் ஆகியிருக்க வேண்டும்.
கமலும் ரஜினியும், ஒப்பனைகள் இனி கைகொடுக்கா என்ற உண்மை சுட ஆரம்பித்தவுடன் அரசியலில் கால் பதிக்க மேடை ஏறுகிறார்கள். நாற்பதைத் தாண்டிய ரசிகர் கூட்டமும் இப்போதாவது நேரில் பார்க்க முடிந்ததே என்ற வரட்டுத் திருப்தியிலுள்ள பொதுஜனமும் அவர்களின் மேடையை மொய்க்கலாம்! பார்த்து சலித்தபின், உட்பொருளில்லாத இந்தக் கூட்டமும் காணாமல் போகும்.
அரசியலில் ஒரு கொள்கை வேண்டும்; கோட்பாடு வேண்டும்! அதை நோக்கிய ஓர் இலக்கு வேண்டும்! அந்த இலக்கை அடையும் வைராக்கியம் வேண்டும்! அதற்காக உயிர், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்யும் துணிவு வேண்டும்!
இதில் எதுவும் இல்லாமல், ‘தெரிந்த முகம்’ என்ற ஒற்றை ஊன்றுகோலை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம் பயணிக்க முடியும் அரசியலில்? முகத்திற்காக ஒன்றுசேரும் கூட்டம், சிறிது காலத்தில் புதுமுகத்தைத் தேட ஆரம்பித்துவிடும் என்ற கசப்பான உண்மை தெரியவில்லையா இவர்களுக்கு? ‘கொள்கை’ என்றால், அதற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் உயிர் கொடுக்க தொண்டன் இருப்பான்.
இதற்கப்பால், இவ்விருவர்மீது பலருக்கு வேறொரு பார்வை உண்டு. பா.ஜ.க. வின் கைப்பாவைகளே இவர்கள் என்பதுதான் அப்பார்வை. இது மட்டும் உண்மையாக இருப்பின், கமல் என்ன? ரஜினி என்ன? தமிழ் மண்ணில் இவர்கள் ஒருபோதும் தலைதூக்க முடியாது.

                                               அன்புடன்
                   அ. முஹம்மது கான் பாகவி

Thursday, March 15, 2018

التمرين في ترجمة المقالة العربية الاجتماعية

# التمرين في ترجمة المقالة العربية الاجتماعية #

₹ تحديد النسل سلبياته كارثة ₹
+++++++++++++++++++
( عن مجلة اليمامة السياسية)

0 تقول الدكتورة ليلى إسحاق عزوز - إخصائية النساء والولادة بمكة المكرمة - عن الأسباب التي أدت إلى إنتشار موانع الحمل في العالم الحديث : -

* بدأت الحاجة تدعو إلى تحديد النسل كمنقذ وحيد من أزمة العيش وصعوبة الحياة في ظل إمكانيات مادية ومعيشة مقننة ومحدودة. ومع نجاح تجارب موانع الحمل وضماناتها الأكيدة أخذت الدول الفقيرة تقبل على حبوب منع الحمل كوسيلة وحيدة وشبه مضمونة لتنظيم النسل. وقد كانت هذه النظرة لا تعتمد على دراسة علمية لمعرفة مضار وسلبيات هذه الحبوب...

وقال الآخرون : -
كيف تحتاج دولة إلى ملايين البشر من أجل بناء وطنها ثم تقوم بتحديد النسل؟ واستخدام حبوب منع الحمل لمدة طويلة قد ينتج عنه حالة عقم لدى المرأة يصعب علاجها.. إن الأطباء لا ينصحون الشباب حديثي الزواج باللجوء إلى موانع الحمل مهما كانت الأسباب.

بدأت ظاهرة تحديد النسل في المجتمع السعودي بين الأزواج المتعلمين، ثم انتشرت الظاهرة بعد ذلك بين الآخرين. ويجب علينا كبلد مسلم أن نحارب العادات الدخيلة علينا خصوصا تلك التي تأتي إلينا في مظهر حسن، ومن أخطرها منع الحمل.

إن دعوة تحديد النسل دعوة مغرضة هدفها هدم التفوق البشري للعالم الإسلامي. ويجب على وزارة الصحة أن تعتم على مخازن الأدوية عدم صرف عقاقير منع الحمل إلا بموجب تقرير طبي سليم. ومنع الإنجاب لأسباب إقتصادية أو تربوية يحقق أهداف أعداء الإسلام في إضعاف الأمة الإسلامية.

إن بعض الزوجات يستخدمن موانع الحمل دون علم أزواجهن لأن الزوجة تخشى أن يطلقها زوجها فتتضاعف مشكلتها مع الأولاد.. وتتعاطي المرأة حبوب منع الحمل بحجة أنها إمرأة عاملة وليس لديها من يقوم على تربية أولادها.
%%%%%%%%%%%%%%%

@ المعاني للألفاظ الغربية @
1. تحديد النسل - குடும்பக் கட்டுப்பாடு
2.سلبيات - எதிர் வினைகள்
3. كارثة - அபாயகரமானவை
4. إخصائية - ஸ்பெஸலிஸ்டு
5.موانع الحمل - கற்பத் தடைகள்
6. أزمة - பிரச்சினை, சிக்கல்
7. إمكانيات مادية - பொருளாதார வாய்ப்புகள்
8. مقننة - வரையறுக்கப்பட்டது
9. حبوب منع الحمل - கற்பத் தடை மாத்திரைகள்
10.تنظيم النسل - குடும்பக் கட்டுப்பாடு
11. دراسة علمية - அறிவியல் ஆய்வு
12. ملايين البشر - லட்சக்கணக்கான மக்கள்
13. ظاهرة - பழக்கம்
14. الدخيلة - புகுத்தப்பட்டது
15. مغرضة - உள்நோக்கம் கொண்டது
16. مخازن الأدوية - மருந்து கிடங்குகள்
17.عقاقير - மருந்து மூலப் பொருட்கள்
18. تقرير طبي - மருத்துவ அறிக்கை
19. منع الإنجاب - குழந்தை பிறப்பைத் தடுப்பது
20. تربوية - பராமரிப்பு, வளர்ப்பு

( إن شاء الله)

Thursday, March 08, 2018

الإجابات للأسئلة في التمرينات السابقة

# الإجابات للأسئلة في التمرينات السابقة #
+++++++++++++++++++

1. பூங்கா, அதன் மலர்கள் அழகானவை.
2. இக்கல்லூரி, அதன் கட்டடம் உயரமானது
3. மிளகாயின் சுவை காரம்.
4. முயலின் ஓட்டம் விரைவானது.
5. சவூதி அரேபியா நாட்டின் ஆட்சியாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
6. இந்திய நாட்டின் பெரும்பான்மை குடிமக்கள் இந்துக்கள் ஆவர்.
7. பெரும்பான்மையான இன்றைய இளைஞர்கள் மேற்க்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர்.
8. பெண்களின் கற்பொழுக்கம் கண்டபடி வெளியே சுற்றாமல் இருப்பதில்தான் உண்டு.

( إن شاء الله)