~~~~~~~~~~~~~~~~~~
பாதிக்கப்பட்டவர்களுக்குப்
பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~
அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல் துறை.இரண்டும் முறையாகச் செயல்பட்டால், அந்த அரசு தலைசிறந்த அரசாகப் போற்றப்படும்.
மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்வோர் உதவி ஆய்வாளர்கள்தான். அந்த வகையில் முக்கியமான கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.
காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறை, தண்டனை வாங்கித்தரும் துறை என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும் என்பது என் ஆசை.
மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத் தான். அந்த அமைதியை உருவாக்கும் கடமை காவல் துறைக்கு உண்டு. பயிற்சி முடிந்து நீங்கள் செயல்படத் தொடங்கும்போது அமைதியான தமிழகத்தை உருவாக்க சூளுரைக்க வேண்டும்.
அநியாயத்தைத் தடுக்க எப்போதும் தயங்காதீர்கள். நியாயத்திற்காக எப்போதும் நில்லுங்கள். உங்கள் பகுதியைக் குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்.இவற்றையெல்லாம் சட்டபூர்வமாகச் செய்யுங்கள்.
குறிப்பு: உரை நாள் +1.9.2021
நிகழ்ச்சி: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழா.
* முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய தத்துவப் பாடல்களை இவ்வுரை விஞ்சி விட்டது.
No comments:
Post a Comment