Thursday, May 16, 2019

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர்

# சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர்#
----------------------------------------
ஐ.எஸ்.ஐ. பற்றியும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி பற்றியும் நாங்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததை நம் இளைஞர்கள் பலர் நம்பவில்லை.அந்த ஆளை தம்பி இன்னும் பலர் தம் வாழ்க்கையையும் மார்க்கத்தையும் தொலைத்துவிட்டு ,ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதன் விளைவுதான் இலங்கை கொடுமைகள்.

எங்கோ ஐரோப்பாவில் பள்ளிவாசலில் நடந்த கொடுந்தாக்குதலுக்கு இலங்கை தேவாலயங்களில் நடந்த தற்கொலை தாக்குதல் (அதுதான் காரணமாக இருப்பின்) எப்படி பதிலடியாக அமையும்?அந்த அப்பாவி கிறித்தவர்களும் மற்ற பொதுமக்களும் அநியாயமாகக் கொல்லப்பட்டது எந்த வகை நாயம்?

இதுதான் சாக்கு என்று ஏதோ காத்துககொண்டிருந்ததைப் போல பெளத்த தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களை அடித்துக் கொல்வது எப்படி நியாயமாகும் ?

இப்போது தெரிகிறதா இளைஞர்களே!இந்த ஐ.எஸ்ஸும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி என்பாரும் யார்;அந்த அமைப்பின் திட்டமென்ன?யாருடைய தயாரிப்பு?இனியாவது அந்தக் கொலைகார அமைப்பிடமிருந்து தப்பித்து உண்மையான முஸ்லிம்களாக வாழ முன்வாருங்கள்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தயாரிப்பே இந்த ஐ.எஸ்.இந்த பக்தாதி சிறையில் இருந்தபோது உருவாக்கப்பட்ட நயவஞ்சகன்.

முழு தகவல் அறிய கீழ்க்கண்ட எமது பழைய கட்டுரை வாசியுங்கள்.உங்களையும் நண்பர்களையும் காப்பாற்றுங்கள்.

இராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ். இயக்கம் உண்மையில் யாருடையது; அதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்? இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்களைப் போன்றே நாமும் குழப்பத்தில்தான் இருந்தோம்.

இந்நிலையில், குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஓர் ஆய்வுக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர், ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார். ‘இராக் கிறித்தவர்களும் இனப் படுகொலை பற்றிய ஊகங்களும்’ என்பது கட்டுரையின் தலைப்பு.

கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கத்தை அப்படியே கீழே தருகிறோம். (இதில் நமது சொந்தக் கருத்து எதுவும் இல்லை.) நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:

ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.

பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர். அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை சியோனிஸ மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர் கடந்துவந்துள்ளார். இதுவெல்லாம் எதற்காக? அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமியச் சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும்; அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.

இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.

அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும்.

உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும் படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.

இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப் பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும்.

யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்துவருகிறது.

சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக ‘பிளாக் வோட்டர்’கள் மூலம் அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.

No comments:

Post a Comment