Thursday, June 18, 2015

புனித மாதத்தில் புண்ணியம் தேடுங்கள்!

-    கான் பாகவி

றைவன் படைத்த எல்லா நாட்களும் 24 மணி நேரம் கொண்ட ஒரே நாள்தான்; எல்லா ஆண்டுகளும் 12 மாதங்களைக் கொண்ட ஒரே ஆண்டுதான். நாளிலும் மாதத்திலும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. ஆயினும், ஒரு நாளில், அல்லது ஒரு மாதத்தில் நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சியைப் பொறுத்து அந்த நாளுக்கோ மாதத்திற்கோ முன்னுரிமையும் முதலிடமும் கிடைப்பதுண்டு.

நீங்கள் பிறந்த நாளை உங்களால் மறக்க முடியுமா? உங்கள் தாய், அல்லது தந்தை மறைந்த நாள் கண்களைவிட்டு மறையுமா? நீங்கள் மணமுடித்த அந்த நேரத்தை உங்களால் எளிதில் புறந்தள்ள இயலுமா? உங்களுக்கு வேலை, அல்லது விசா கிடைத்த நாள், உங்கள் சகோதரன், அல்லது நண்பன் பிரிந்த நாள், உங்களுக்கு முதல் குழந்தை பிறந்த நாள்இப்படி வாழ்க்கையில் நம்மால் அலட்சியப்படுத்த முடியாத தருணங்கள் நிறைய உண்டு. அப்படித்தானே!

புனித ரமளான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவில் (லைலத்துல் கத்ர்), உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது, இப்பூவுலகிற்குக் கிடைத்த ஒப்பற்ற புண்ணியம்; நிகரற்ற புனிதம்; மனிதர்களைப் புனிதர்களாக்க நிகழ்ந்த அற்புதம்; மனிதகுல வரலாற்றில் அதற்குமுன் நடந்திராத அதிசயம். அதுமட்டும் நிகழ்ந்திராவிட்டால், மனித இனமே மிருக இனமாக மாறியிருக்கும். நாமெல்லாம் நாகரிகமே தெரியாத காட்டுமிராண்டிகளாக இருந்திருப்போம்; மனிதம் கொல்லப்பட்டிருக்கும். நல்ல வேளையாக அது நடந்தது.

ஆம்! அந்தப் புனித இரவில் இறுதித் தூதர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஹிராகுகையில் இறைச் சிந்தனையில் லயித்திருந்த வேளையில், வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கே வருகை புரிந்தார்கள். ஓதியே பழக்கப்பட்டிராத அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதை நோக்கி ஓதுவீராக!’ (இக்ரஉ) என்றார்கள். அப்துல் முத்தலிபின் பேரர் முஹம்மதோ, நான் படித்தவனல்லவே! என்று வியப்போடு விடையளித்தார்கள்.

இறுதியாக இதழ்கள் விரிந்தன; இறைமறையின் முதல் வசனம் அவ்விதழ்களில் ஒலித்தது. அப்துல்லாஹ்வின் புதல்வர், அல்லாஹ்வின் தூதர் ஆனார்கள். அத்தருணம் புல்லரிப்பையும் சிலிர்ப்பையும் தரவல்லது. நினைக்கும்போது அக்காட்சி கண்களில் விரிய, சிறகு முளைத்து விண்ணில் பறப்பதைப் போன்ற உணர்வு மிகுகிறதல்லவா? அந்த மாதம்தான் புனித ரமளான்; அந்த இரவுதான் லைலத்துல் கத்ர். அந்த இரவின் விடியலில்தான் ஆதமுடைய மக்களுக்கு விமோசனம் பிறந்தது.

தி
ருக்குர்ஆன் அருளப்பெறத் தொடங்கிய அப்புனித மாதத்தில் நோன்பிருந்து, நின்று வழிபட்டு, திருமறை ஓதி, இறையைப் போற்றிப் புகழ்ந்து அனைவரும் தனக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென அல்லாஹ் விரும்பினான்போலும்! இம்மாதத்தில் நோன்பைக் கடமையாக்கிவிட்டான்.

மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொடக்கத்தில் மாதந்தோறும் 3 நாட்கள் நோன்பு நோற்றுவந்தார்கள். அத்துடன் ஆஷூரா’ (முஹர்ரம் – 10ஆம்) நாளன்றும் நோன்பு நோற்றதுடன், மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் ரமளான் மாத நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். ஆயினும், சக்தியுள்ளவர்கள்கூட நோன்பு நோற்காமல், ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டது (2:184).

பிறகு ரமளான் மாதத்தில் உடல் ஆரோக்கியத்தோடு உள்ளூரில் தங்கியிருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டது. பயணத்தில் இருந்தாலோ நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ அம்மாதத்தில் நோன்பு நோற்காமல், வேறு நாட்களில் நோற்றுக்கொள்ளலாம். இறுதிவரை நோன்பு நோற்கவே முடியாத அளவுக்கு முதுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நோன்பைக் கைவிட்டுப் பரிகாரம் செய்யலாம். அதாவது ஒருநாள் நோன்புக்கு ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

புனித ரமளானில் எல்லா நன்மைகளையும் ஆர்வத்தோடு செய்வதில் முந்திக்கொள்ள வேண்டும். ரமளானின் முதலாம் இரவு வந்துவிட்டால், பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துவிடு!என்று அறிவிக்கிறார்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

இப்படிப் பொதுவாக எல்லா நன்மைகளையும் நோக்கி முன்னேற வேண்டும் இப்புனித மாதத்தில். குறிப்பாக 7 ‘அமல்களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கலாம்.

1.   நோன்பு: இதன் கடமையை ஒப்புக்கொண்டு, நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். ரய்யான்எனும் சொர்க்கவாசலில் நுழைகின்ற பெரும்பேறு கிடைக்கும். நோன்பாளியின் வேண்டுதல் (துஆ) ஏற்கப்படும். நோன்பாளிக்காக, நோன்பு மறுமை நாளில் பரிந்துரைக்கும். மேலும் பல சிறப்புகளும் புண்ணியங்களும் நோன்பாளிக்கு உண்டு.

2.   தொழுகை: ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் கூட்டாக நிறைவேற்ற வேண்டும். இரவுத் தொழுகையை ஈடுபாட்டுடன் தொழ வேண்டும். இதனாலும் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தஹஜ்ஜுத்தொழுகையும் இம்மாதத்தில் தவறாமல் தொழுதுவாருங்கள்! இது இறைவனுக்கு மிகவும் உவப்பான அமலாகும்.

3.   திக்ர் மற்றும் இஸ்திஃக்ஃபார்: அல்லாஹ்வை நாவாலும் மனத்தாலும் நினைவுகூர்வதால் இதயங்களுக்கு அமைதி கிடைக்கிறது. யோகாவே தேவையில்லை; ஒழுங்காக நாள்தோறும் திக்ர் செய்து வந்தாலே மனதுக்கு நிம்மதியும் சுகமும் கிடைத்துவிடும். அடுத்து பாவமன்னிப்புக் கேட்பது மிகமிக முக்கியம். அடியான் அல்லாஹ்வை நெருங்க முடியாமல் போவதற்கும் அவன் கேட்கும் துஆ ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படுவதற்கும் அடிப்படை காரணமே, அடியானின் பாவங்களும் கறைபடிந்த கரங்களும்தான்.

இப்பாவங்களுக்கு அழுது மன்றாடி இறையிடம் மன்னிப்பு வாங்கிவிட்டால், அதைப் போன்றதொரு அருட்கொடை வேறு இருக்க முடியாது.

4.   துஆ - பிரார்த்தனை: நம் தேவைகளுக்காகவும் மறுமையின் வசந்தத்திற்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நோன்பாளியின் துஆ ஏற்கப்படுவதைப் போன்றே, ரமளான் இரவுகளில் செய்யப்படும் துஆவும் ஏற்கப்படுகிறது. தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு, அந்த நடுநிசியில் நிசப்தம் நிலவும் அமைதியான நேரத்தில் கேளுங்கள்! தரப்படும். நாமாக சில துஆக்களைக் கேட்பதைவிட, குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள துஆக்கள் சிறப்பானவை. அவ்வாறே, லைலத்துல் கத்ர் இரவில் கேட்க வேண்டிய துஆக்களை முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அவற்றையும் கண்டறிந்து கேட்க வேண்டும்.

இறைவனிடம் கையேந்துங்கள்
(இந்த துஆக்கள் அனைத்தும் அரபி மூலத்துடனும் மொழிபெயர்ப்புடனும் கிடைக்கின்றன. நான் மொழிபெயர்த்த ஒரு புத்தகமும் உண்டு. தேவைப்படுவோர்: 91718 46184; 96001 25000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் அனுப்பிவைப்பார்கள்.)

5.   குர்ஆன் ஓதுதல்: புனித ரமளானில் புண்ணியம் தேட அதிகமதிகம் குர்ஆன் ஓதுங்கள். ஒரு நாளைக்கு 3 ஜுஸ்உகள் வீதம் ஓதிவந்தால் ரமளானில் 3 முறை குர்ஆனை ஓதிவிடலாம். அதற்கேற்றவாறு நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்! மறுமை நாளில் குர்ஆனும் நமக்காக அல்லாஹ்விடம் மன்றாடும்; பரிந்துரை செய்யும்.

6.   தர்மங்கள்: ஸகாத், ஸதகா ஆகிய தர்மங்கள் எப்போது செய்தாலும் நன்மைதான். புனித ரமளானில் செய்யும்போது கூடுதல் நன்மை கிடைக்கும். உறவுக்காரர்களில் உள்ள ஏழை எளியோருக்கு இத்தருமங்களை வழங்கினால் இரட்டை நன்மை கிடைக்கும். தர்மத்திற்கான நன்மை ஒன்று; உறவைப் பேணியதற்கான நன்மை மற்றொன்று.

7.   இந்த எல்லா அமல்களையும் அல்லாஹ்வுக்கென்றே விளம்பரம், சுயநலம் ஏதுமின்றி- தூய எண்ணத்தோடு நிறைவேற்றுவதுடன், நாவைக் கட்டுப்படுத்துவதும் முக்கியமான அம்சமாகும். பொய், புறம், கோள், குழப்பம், சாபம், ஏச்சு, பிறர் மனம் புண்படும்படி நடத்தல் ஆகிய சாபக்கேடுகளிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

பொய்யான பேச்சையும் வீணான செயலையும் கைவிடாதவரின் பசியும் தாகமும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரீ)

Thursday, June 11, 2015

நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக…


நா
ன் மத்ரசாக்களில் ஆசிரியராக இருந்த வரைபெரும்பாலும் எனக்கு ஒதுக்கப்பட்ட பாடங்கள் என்று பார்த்தால்அரபி இலக்கணம்இலக்கியம்தர்க்கவியல்கிரேக்கத் தத்துவம் போன்ற துறைகளாகவே இருக்கும்அதிலும் தத்துவம் மற்றும் தர்க்கவியல் பாடங்கள் புரிவதும் புரியவைப்பதும் எளிதல்லஉயிரைக் கொடுத்துகுரல் உயர்த்திவியர்க்கவிறுவிறுக்கச் சிரமப்பட்டு பாடத்தை விளக்கி முடிப்பேன்.

பத்தில் நான்கு மாணவர்களாவது விளங்கியிருப்பார்கள்ஆறு மாணவர்கள் விரக்தியின் உச்சியில் நிற்பார்கள்விரக்தி வெறுப்பாக மாறி, வகுப்பையும் வகுப்பாசிரியரையும் கடித்துக் குதறிவிடும் நிலையை அடைந்திருப்பார்கள். பாடம் புரிந்திருக்காது. அல்லது புரிந்தும் புரியாதிருக்கும். அல்லது புரிந்தாலும் இதனால் என்ன புண்ணியம் என்று யோசிக்கவைக்கும்.

நானும் படித்துக்கொடுத்து முடித்தபின், இப்பாடங்களால் இம்மைக்கோ மறுமைக்கோ என்ன பலன் என யோசிப்பேன். கிரேக்கத் தத்துவங்களைச் சொல்லிக்கொடுத்தபின், அதனால் நேர விரயமும் மூச்சு வீணானதும்தான் மிச்சம் என்று மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டியதுண்டு. அணுவைப் பிளக்க முடியுமா?” என்றொரு விவாதம் கிரேக்கத் தத்துவத்தில் உண்டு. முடியும் என்ற கருத்தாளர் தங்கள் வாதங்களையும் முடியாது என்போர் தம் வாதங்களையும் முன்வைத்து அடித்துக்கொள்வார்கள் பாருங்கள்பிராணன் போய்விடும்!

இயற்பியலில் அணு என்பது, வேதியியல் மாற்றத்துக்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு (Atom) ஆகும்அணுவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குண்டுதான்பேரழிவை உண்டாக்கும் அணுகுண்டு (Atom Bomb). சொல்லப்போனால்அணுக்கரு பிளவுதான் அணுகுண்டின் அடிப்படைத் தத்துவமேஅணு பிளக்கப்பட்டுஅதனால் பேரழிவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில்அணுவைப் பிளக்க முடியுமா என்று வாக்குவாதம் செய்துகொண்டிருப்பது எவ்வளவு நகைப்புக்குரியது!

றத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் –கிரேக்கத் தத்துவங்கள் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு காலத்தில்சிலர் இஸ்லாமியக் கொள்கைகளை விமர்சித்தபோது,கிரேக்கத் தத்துவ அடிப்படையில் குறைசொல்லிக் கொண்டிருந்தார்கள்அதனால் அன்றைய சூழலில் இஸ்லாமிய நூல்கள் எழுதியவர்கள் –குறிப்பாக இறையியல் நம்பிக்கை சார்ந்த நூல்கள் எழுதிய அறிஞர்கள்கிரேக்கத் தத்துவ அடிப்படையிலேயே எதிரிகளுக்குப் பதிலடி கொடுத்துவந்தார்கள்இந்த அடிப்படையில்தான் அன்று இந்தத் தத்துவம் இஸ்லாமிய நூல்களுக்குள்ளும் புகுந்ததுஆனால்வெறும் வாதப் பிரதிவாதத்தை மட்டுமே நம்பியிருந்த கிரேக்கத் தத்துவம்என்றோ செல்வாக்கிழந்து மடிந்தும் போய்விட்டதுஇன்றைக்கு இது தேவைதானா?

இப்போதுகூடச் சிலருக்குஇதுபோன்ற இயல்களில் திறமையை வளர்த்துக்கொண்டுவிட்டாலேமற்ற இயல்கள் –குர்ஆன்ஹதீஸ் உள்படஎளிதாக விளங்கிவிடும் என்ற புனைவு உண்டுஆனால்திருக்குர்ஆனின் தத்துவங்களும் நபிமொழி கருத்துகளும் கடல் ஆழத்தைத் தொடக்கூடியவைஓயாத அலைகள்போல் தொடரக்கூடியவை.

திருக்குர்ஆனில் லுக்மான்அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதைப் பாருங்கள்இந்தப் பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும் இக்கடலும் அதற்குமேல் இன்னும் ஏழு கடல்களும் மையாகவும் இருந்தால்கூட அல்லாஹ்வின் சொற்கோவை (எழுதிமுடிந்துபோகாது. (31:27)

ஆகதிருக்குர்ஆன் விளக்கவுரையோ நபிமொழிப் பாடங்களோ சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு மிகமிக அரிதாகவே எனக்குக் கிடைத்ததுஇப்பாடங்கள் கிடைத்திருப்பின் அல்லாஹ்வின் பெயரையும் அல்லாஹ்வின் தூதர் பெயரையும் அடிக்கடி உச்சரிக்கின்ற வாய்ப்பாவது கிடைத்திருக்கும்நானும் ஒரு கட்டத்தில் தத்துவப் பாடத்தைப் பெரிதென நினைத்ததுண்டுநாளடைவில் விரக்தியே எஞ்சியது.

தாயார் ரஹ்மத் அம்மாள்

ந்நிலையில்தான்நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீஸஹீஹ் முஸ்லிம்ஜாமிஉத் திர்மிதீதிருக்குர்ஆனின் பிரபல விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீர் போன்ற பெருநூல்களை -இல்லைகிடைப்பதற்கரிய கருவூலங்களைஆய்வு செய்யவும் மொழிபெயர்ப்பைச் சீராக்கவும் விளக்கவுரைகளைப் படித்து அவற்றின் சாரத்தை அடிக்குறிப்புகளாக வரையவும் ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததுஇதன்மூலம்பிறந்த பலனை அடைந்த ஆனந்தமே மேலிட்டதுஇதற்காகச் சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர்களான M.A. முஸ்தபா பாய், M.A. தமீம் பாய் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

தந்தை அப்துல் காசிம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் காஸிம் ரஹ்மத் அம்மாள் தம்பதியருக்கு 9 குழந்தைகள். அவர்களில் ஏழாவதாகப் பிறந்தவரே M.A.முஸ்தஃபாஒன்பதாவதாகப் பிறந்தவர் M.A. தமீம்இச்சகோதரர்கள் சிங்கப்பூரில் நீண்ட காலமாகத் தொழில் செய்பவர்கள்தொழில் நுணுக்கமும் கடின உழைப்பும் அவர்களுக்குக் கை கொடுத்தனமளமளவென்று வளர்ந்தார்கள்தொழிலதிபர்கள்தானே தவிரமார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் பொதுச் சேவைகளுக்கு வாரி வழங்குவதிலும் முனைப்புக் காட்டக்கூடியவர்கள்தங்கள் தாயார் பெயரில் ஓர் அறக்கட்டளை தொடங்கிஏதேனும் நல்லறம் புரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

என்ன பணி செய்யலாம் என்று பலரிடமும் யோசனை கலந்தபோதுமார்க்கம் படித்த சமூக ஆர்வலர்கள் சிலர் புண்ணியமான ஒரு திட்டத்தை முன்வைத்தார்கள்அதுதான் இன்று செயல்படுத்தப்பட்டுவருகிறதுஇஸ்லாத்தின் மூலாதாரங்களில் இரண்டாம் இடம் வகிக்கும் நபிமொழித் தொகுப்புகளில் முதலிடத்தில் உள்ள ‘ஸஹீஹுல் புகாரீஎனும் பிரசித்தி பெற்ற நூலை அரபி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதே முதல் திட்டம்அதற்காகத் தமிழகத்தின் தலைநகர் சென்னையின் இதயப் பகுதியில் ஓர் அலுவலகத்தை உருவாக்கினார்கள். அதில் அமைதியாக அமர்ந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வதற்கு வேண்டிய எல்லா நவீன வசதிகளையும் செய்தார்கள். 18.11.1991இல் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் 17.07.1994இல் வெளியானது.

அன்றிலிருந்து இன்றுவரை ஆண்டுக்கு ஒரு பாகம் என்ற விகிதத்தில் 20 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகம் (வடிவ மாற்றத்திற்குப்பின் 5), ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகம், ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் 3 பாகம், தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் 6 பாகம் என 20 பாகங்கள் வெளிவந்து தமிழ்கூறும் நல்லுலகின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. மற்றப் பாகங்களின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்கிறது. ரஹ்மத்தின் வெளியீடுகளுக்கு ஒரு வாசகர் வட்டமே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது. அதனால்தான், அடுத்த பாகம் எப்போது என்று முஸ்தஃபா பாய் கேட்கிறாரோ இல்லையோமக்கள் தொலைபேசியிலும் கடிதத்திலும் கேட்டு நச்சரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவ்வளவு ஆர்வம்அல்ஹம்து லில்லாஹ்!

மூகத்தில் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை, ரஹ்மத் வெளியீடுகள் ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. மார்க்க அறிஞர்களுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் நல்ல துணை எனலாம்பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மேற்கோள்காட்டி ஆதாரத்தோடு பேசவும் எழுதவும் இவை வகை செய்திருக்கின்றன. மத்ரசா மாணவ மாணவிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றன. எல்லாவற்றையும்விடப் பொதுமக்களின் கரங்களுக்கு மார்க்கத்தின் மூலாதாரங்கள் அவர்களின் தாய்மொழியிலேயே- கிடைத்திருப்பது மாபெரும் கொடையாகும் எனலாம்! சாமானியர்களையும் சென்றடைந்தால்தானே வேதம் வந்ததன் முழுப்பயன் கிடைக்கும்! அவர்களும் இறைவாக்கையும் இறைத்தூதர் வாழ்க்கையையும் வாசித்துசுவைத்துசொந்தமாக அறிகின்ற பெரும்பேறு வாய்த்துள்ளதுஅறிவு மறுமலர்ச்சியும் சிந்தனைப் புரட்சியும்தான் மனிதனை உயரத்திற்குக் கொண்டுசெல்லும்.

முஸ்தபா - தமீம் சகோதரர்கள்
இந்த மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லைஇதற்கு வித்திட்டுஇலாபம் கருதாமல் தொடர்ந்து உரமிட்டு வளர்த்துவரும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தங்களுக்கு மட்டுமன்றி தங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்சிலருக்கு ஊரால் சிறப்பு என்றால்சிலரால் ஊருக்குச் சிறப்புவணிகர்களான M.A. முஸ்தபா, M.A. தமீம் தங்கள் வட்டத்தில் முன்பு பேசப்பட்டிருக்கலாம்ஆனால்இன்று சகலருக்கும் அறிமுகமான ஆளுமைகளாக அவர்கள் இருப்பதற்கு இந்த அரும்பெரும் சேவையே காரணம் என்பதுதான் உண்மை!

இப்பணியைப் பற்றி ஒருமுறை சிலாகித்துக் கூறிய முஸ்தஃபா பாய் அவர்கள், “இதுதான்மறுமையில் எங்களின் அடையாள அட்டை (ID)” என்று சொன்னது பொருத்தமான ஒப்பீடுஎண்ணம் தூய்மையாக இருக்கும்போது இச்சேவையால் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நற்பலன் கிட்டும் என்பதை அவர் உணர்ந்திருப்பதற்கு இது அடையாளம்!

செ
ன்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்புப் பிரிவான ரஹ்மத் பதிப்பகத்தில் மூன்று வகைப் பணிகள் நடக்கின்றன. 1. திருக்குர்ஆன் விரிவுரைஅல்லது நபிமொழிகளை மொழிபெயர்ப்பது. 2. அதனைக் கணினியில் தட்டச்சு செய்துபிரதி எடுத்துக் கொடுப்பதுதிருத்தங்களை ஏற்றுவதுஇறுதிப்படி திருத்தம் ஏற்றியபின் குருந்தகட்டில் பதிவேற்றி அச்சகத்தில் ஒப்படைப்பது (நூல் வடிவமைப்பு). 3. மொழிபெயர்ப்புப் படியை ஆவணப்படுத்தி, திருத்தங்கள் செய்து, அடிக்குறிப்பு விளக்கம் எழுதி முழு உருவம் கொடுப்பது. இவ்வாறு நான்கு முறை சரிபார்த்த பின்பே அச்சுக்கு அனுப்பப்படும்.

மொழிபெயர்ப்பாளர் குழுவினர்
அரபி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது அவ்வளவு இலகுவன்று, இரு மொழிகளிலும் சரளமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டின் அகராதி, இலக்கணம், இலக்கியம், மரபுச் சொல், மூலத்தின் பின்னணி, எளிய சொல்லாட்சி, புதிய சொற்களை உருவாக்கும் சொல்லாக்கம், சம்பந்தப்பட்ட இயல்கள்... எனப் பல்துறை ஞானம் அமையப்பெற்ற ஒருவராலேயே ஒழுங்காக மொழிபெயர்க்க முடியும். அதிலும் குர்ஆன், ஹதீஸ் எனும்போது எழுதுகோலை அடக்கித்தான் ஆள வேண்டும்.

முஸ்தபா அவர்களுடன் குழுவினர்
இத்துணை தகுதிகளும் ஒருசேரப் பெற்றவர்களைக் கண்டு வேலைவாங்குவது, கயிறே இல்லாமல் மலைச் சிகரத்தைத் தொடுவதற்குச் சமம். அரபியில் வல்லவர்தான்;ஆனால்தமிழ் தெரியாதுதமிழில் ஞானிதான்எனினும்அரபி தெரியாதுஇரண்டும் இருந்தால்பிற கலைகள் தெரியாதுகுர்ஆன்ஹதீஸைத் தீர்க்கமாக அறியவும் அறிந்ததை எழுத்தில் வடிக்கவும் அறிவியல்மருத்துவம்வானவியல்பூகோளம்இயற்பியல்விலங்கியல்வரலாறு எனப் பல்கலைகளில் பரிச்சியம் இருக்க வேண்டும்.இல்லையேல்கொம்புத் தேனுக்கு முடவன் ஆசைப்பட்ட கதையாகிவிடும்.

பெ
ரும்பாலும் அரபிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள்தான் இங்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்பணியாற்றிவருகின்றனர்.அவர்களால்தான் அரபிமொழி விளக்கவுரைகளைப் படிந்தறிந்து சரியான மொழிபெயர்ப்பை எழுத முடியும்அல்லது மொழிபெயர்ப்புப் பணியில் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த வகையில் காஞ்சி மௌலவி, R. அப்துர் ரவூப் பாகவி, மேட்டுப்பாளையம், சா. அப்துந் நாஸிர் பாகவி, தக்கலை . ஜாகிர் ஹுசைன் பாகவி, அய்யாபுரம், கா. ஹுசைன் கனி பாகவி, வடகரை ஷாஹுல் ஹமீத் பாகவி, ஆயங்குடி அன்வருத்தீன் பாகவி ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். தற்போது மேலப்பாளையம், சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி, மேலூர் பூதமங்கலம் எஸ். அப்துல்லாஹ் பாகவி ஆகியோர் பல்லாண்டுகளாகப் பணியாற்றிவருகின்றனர். இவ்விருவரும் பல வருடங்கள் அரபிக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள், அரபி-தமிழ் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள்பல்கலைக் கழகப் படிப்புகளில் தேறியவர்கள். யூசுப் சித்தீக் மிஸ்பாஹி நல்ல பேச்சாளர், எழுத்தாளர்.

குழுவாக இருந்து செயல்படுவதால் நிறைய பலன்கள் உண்டு. மொழிபெயர்ப்பில் ஏற்படும் ஐயங்களை உடன் இருப்பவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற முடியும். அரபிச் சொல் ஒன்றுக்கு, வழக்கொழிந்த பொருளுக்குப் பதிலாகப் புதிய பொருளைக் கண்டறிதல், பொருளே குறிப்பிடாமல் அரபிச் சொல்லையே மொழிபெயர்ப்பிலும் கையாள்வதைத் தவிர்த்து, ஒரு பொருளை ஆய்வு செய்தல், அறிவியல், பொது அறிவு, வரலாற்றுத் தலங்கள், உலக நாடுகள், தாவரவியல்... போன்ற இயல்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு இணையதளத்தில் தேடி முடிவு காணல் முதலான ஆய்வுகளுக்குக் கூட்டு முயற்சியே துணைபுரியும். தனியாக உட்கார்ந்துகொண்டு இதையெல்லாம் சாதிப்பது சாத்தியமாகாமல் போகலாம்!

கவிக்கோ அப்துர் ரஹ்மான்
இங்கே இன்னொருவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்அவர்தான் கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள்அவருக்கும் ரஹ்மத்திற்கும் நீண்ட நெருங்கிய உறவு உண்டு.எங்கள் அலுவலகத்தின் முதல் மாடியில் தொடங்கியுள்ள அரங்கிற்கு ‘கவிக்கோ மன்றம்’ என்ற பெயரையே முஸ்தபா பாய் சூட்டியிருப்பதுகவிக்கோவின் தமிழ் தொண்டிற்கு –அவர் வாழ்நாளிலேயேசெய்யும் மரியாதையாகும் என்பதில் சந்தேகமில்லைகவிக்கோவை நாங்கள் அன்போடு ‘அண்ணன்’ என்றே அழைப்போம்!

மொழிபெயர்ப்புதிருத்தங்கள்மேலாய்வு என எல்லாம் முடிந்துஇறுதிப் பார்வைக்காகப் படிகள் கவிக்கோ அவர்களிடம் அனுப்பிவைக்கப்படும்தமிழ் சொற்கள்வாக்கிய அமைப்புநடை ஆகியவற்றில் அண்ணன் சில திருத்தங்களையும் யோசனைகளையும் வழங்குவார்தொடக்கத்தில் இது சற்று கூடுதலாக இருந்தது எனலாம்அவர் தரும் திருத்தங்களில் பொருத்தமானவற்றை நாங்கள் ஏற்று நடைமுறைப்படுத்தத் தொடங்கியபின்சிற்சில இடங்களில் மட்டும் இப்போது திருத்தங்கள் தருகிறார்ஆக,தமிழாக்கத்தைச் செம்மைப்படுத்திக்கொள்ள கவிக்கோ அவர்களின் வழிகாட்டல் துணைபுரிந்தது என்பதை நன்றியோடு குறிப்பிட வேண்டும்.

தெரியாததைத் தெரிந்துகொள்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கலாகாதுநாம் ஒரு துறையில் வல்லுநராகவே இருக்கலாம்அதற்காக எல்லாத் துறைகளிலும் எனக்கு அறிவு உண்டு என எவரும பெருமை பேசிக்கொள்ள முடியாது. “நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்அறிவுடையோரிடம் கேட்டு (அறிந்து)கொள்ளுங்கள்” எனத் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் ஆணையிடுகின்றான் (16:43; 21:7). அப்படி கேட்டோபடித்தோபட்டோ அறிந்துகொண்ட அறிவுகள் ஏராளம்கூச்சத்தாலும் சிலர் தயங்குவதுண்டுஅதுவும் இழப்புதான்தீமை செய்வதற்கே வெட்கப்பட வேண்டும்அறியாமையை அகற்றல் ஒரு சிறந்த செயல் மட்டுமல்லவழிபாடும்கூட. ஒரு சிறு ஹதீஸை அறிந்துகொள்வதற்காகப் பல மைல்கள் பயணம் செய்திருக்கிறார்கள் நபித்தோழர்கள். இல்லையா? பிறகு ஏன் கூச்சம்? தயக்கம்?

ங்கே என் பணி மேலாய்வுஎன முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்பணியை ஏற்றபிறகுதான், திருமறையையும் திருநபி வாக்குகளையும் கற்பதாக உணர்கிறேன். விளக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன. விரிவுரைகள் நிறைந்திருக்கின்றன. அள்ளுவதற்குத்தான் ஆளில்லைஅறிந்துகொள்வதற்குத்தான் ஆயுளில்லை.ஆனால்நம் நேரங்கள் எதிலெதிலோ வீணாகக் கரைகின்றனஇறைவன் கொடுத்த எல்லா உறுப்புகளையும் தேவைக்கதிகமாகவே பயன்படுத்தும் மனிதன்மூளையை மட்டும் அதிகம் செலவழிப்பதில்லைபிறரை ஆராய்வதை நிறுத்திவிட்டாலேநிறைய நேரங்கள் மிஞ்சும்பயனுள்ள வழியில் அவற்றைச் செலவிடலாம்!

மொழிபெயர்ப்பாளர் தவறாகப் புரிந்துகொண்டு மொழிபெயர்த்திருப்பார்அத்தவற்றைக் கண்டுபிடித்துத் திருத்துவதே மேலாய்வாளருக்குரிய தலையாய பணியாக இருக்கும்.அரபிமொழியைப் பொறுத்தவரை வினைச் சொற்களோடு சேர்ந்துவரும் மின்இலாஅலா போன்ற முன்னிடைச் சொற்களுக்குத் தக்கவாறு வினைச்சொல்லின் பொருள் மாறும்அதைக் கவனிக்கத் தவறக் கூடாதுஅரபிச் சொல் ஒன்றுக்குப் பல பொருள்கள் இருக்கும்அவற்றில் எது அவ்விடத்திற்குப் பொருத்தம் என ஆய்ந்து அறிய வேண்டும்ஒரே பொருள் கொண்ட பல சொற்கள் அடுக்குமொழியாக ஓரிடத்தில் குவிந்திடலாம்தமிழிலும் அந்த ஒரே பொருள் கொண்ட பல சொற்களைத் தேடிக் கண்டுபிடித்து இடம்பெறச் செய்ய வேண்டும்.

அடுத்து சொல்லாடல், அல்லது வாக்கிய அமைப்புமூலத்தில் இருக்கும் வாசகத்திற்கு மொத்தத்தில் பொருள் வந்திருக்கலாம்ஆயினும்ஒரு வாக்கியத்தில் முதலில் எச்சொல் இடம்பெற வேண்டும்அடுத்து அதையடுத்து எது இடம்பெற வேண்டும் என்பதை ஒன்றுக்கு இருமுறை வாசித்துப் பார்த்து அறிய வேண்டும்சில நேரங்களில் வார்த்தை இடம்மாறி இடம்பெறும்போது தவறான பொருள் மயக்கம் ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லைஎடுத்துக்காட்டாகமுன்பு இழைத்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடுகிறது (முஸ்லிம்). (அதாவது ஒருவர் முஸ்லிமாவதற்கு முன்பு செய்த பாவங்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம் மன்னிக்கப்பட்டுவிடும்.) இதையே, “இஸ்லாம் முன்பு இழைத்த பாவங்களை அழித்துவிடுகிறது” என்று குறிப்பிடுவீர்களானால்ஏதோஇஸ்லாமே முன்பு பாவம் இழைத்ததைப் போலவும் அதை ஏதோ ஒன்று அழிப்பதுபோலவும் பொருள் மயக்கம் ஏற்படலாம்!

அவ்வாறேஒரேயோர் அரபி வாக்கியத்தைத் தமிழில் ஒரே வாக்கியமாகவோ இரண்டு வாக்கியங்களாகப் பிரித்தோ மொழிபெயர்க்கலாம்தவறில்லைஎகா: “ஏழைகளை விட்டுவிட்டுசெல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும்” (புகாரீ). இதையே, “உணவுகளில் மிகவும் தீயது ஒரு மணவிருந்தாகும்அதற்குச் செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர்ஏழைகள் விடப்படுகின்றனர்” என வாக்கியங்களைப் பிரித்து மொழிபெயர்த்தாலும் சரிதான்!

குர்ஆன் அருளப்பெற்ற நிலையில் நபி (ஸல்அவர்கள் மக்காவில் 10 (13-3=10) ஆண்டுகள் வாழ்ந்தார்கள்மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்” (புகாரீ). இதைப் பிரித்தால் தவறான பொருள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. “நபி (ஸல்அவர்கள் மக்காவில் 10 ஆண்டுகள் வசித்தார்கள்அவர்களுக்கு குர்ஆன் அருளப்பெற்றுவந்தது.மதீனாவில் 10 ஆண்டுகள் வசித்தார்கள்”. இப்படி வாக்கியங்களைப் பிரித்தால், “நபியவர்கள் மக்காவில் வாழ்ந்ததே மொத்தம் 10 வருடங்கள்தான் என்ற தவறான பொருளுக்கு இடமேற்பட்டுவிடும்.

அவ்வாறேஇரு பொருள்கள் தரும் இடங்களில் எச்சரிக்கை தேவைதிருக்குர்ஆனில் 23:68ஆவது வசனம் ஓர் உதாரணம். 1. முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்றல்லவா அவர்களிடம் வந்துள்ளது? 2. முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்றா அவர்களிடம் வந்துவிட்டது? 3. முன்சென்ற அவர்களின் மூதாதையரிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதாஅதாவது குறைஷியர் இந்த மறையை எப்படி மறுக்க முனைந்தார்கள்அவர்களின் முன்னோருக்குக் கிடைக்காத ஒரு பாக்கியமல்லவா இவர்களுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது? –என இவ்வசனத்தில் இறைவன் வினா தொடுக்கின்றான்.

இப்பொருளைப் பிரதிபலிக்க முதலாவது மொழிபெயர்ப்பே உகந்தது. பிந்திய இரண்டும் வேறு பொருளைத் தருகின்றன. முன்னோருக்கு வந்த வேதம்தானே இவர்களுக்கும் வந்துள்ளதுபிறகு ஏன் மறுக்கிறார்கள்என்ற பொருளைத் தந்துவிடும்இது, இங்கு இறைவனின் நோக்கமன்றுஅரபி வாசகம் இவ்விடத்தில் மூன்று மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்துவதைப்போல் அமைந்துள்ளதுவிரிவுரையாளர் இப்னு கஸீர் (ரஹ்அவர்கள் முதலாவது பொருளையே குறிப்பிடுகிறார்கள்.

இப்படிமொழிபெயர்ப்புத் துறையில் சந்திக்கும் சவால்கள் நிறைய உள்ளனஎனவேதான்குர்ஆன் மற்றும் ஹதீஸை மொழிபெயர்ப்பவர்களுக்கு மொழியாற்றல் மட்டும் போதாதுதுணைத் துறைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறோம்.


(இன்ஷா அல்லாஹ் ரமளானுக்குப்பின் அடுத்த தொடர்)