~~~~~~~~~~~~~~~~~~~~
சுகாதாரத் துறை அமைச்சரின்
அருமையான அறிவுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கர்ப்பிணி பெண்கள் விரும்புகின்றனர்.இது தவறானது. இந்த முடிவை பெண்கள் கைவிட வேண்டும்.
சிசேரியன் மூலம் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.எனவே, குழந்தையை முழுமையாக வளரவிட்டு , சுகப்பிரசவத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்குமாறு , சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நேற்று -22.09.2021- தெரிவித்தார்.
இந்த வேண்டுகோளில் தாய்மை வெளிப்படுகிறது.