Monday, July 19, 2021

Monday, July 05, 2021

காலச்சுவடு இதழுக்கு கான் பாகவியின் மடல்

காலச்சுவடு இதழுக்கு             
கான் பாகவியின் மடல்
---------------------------------------------

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, 'வரலாற்றில் பெயர் நிலைக்க...' எனும் தலையங்கம் கண்டேன்.

மகிழ்ச்சி அளிக்கும் தலையங்கம். அதே நேரத்தில், சார்பற்ற நடுநிலை தலையங்கம். பாராட்டுகள்.

கருணாநிதி மகன் என்ற அளவிலேயே அரசியல் தலைவராக அறியப்பட்டிருந்த ஸ்டாலின், அரிசியல் வியூகம், நிர்வாகத் திறமை, தந்தையை மிஞ்சிய சாணக்கியம், தற்புகழ் துறந்த உயர்ந்த நிலைப்பாடு, மாநில முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு, எதிர்க் கட்சிகளையும் அரவணைக்கும் நளினமான நிர்வாகம் ... எனப்  பன்முகம் கொண்ட சிறந்த முன்மாதிரியான தலைவராக இப்போது அறியப்படேகிறார்.

இது பலரும் எதிர்பார்த்திராத திருப்பம் என்றுதான் நினைக்கிறேன். அரசியல் பாலபாடம் படிக்க வேண்டிய அரசியல் மாணவர் என்றே பலரும் எடைபோட்டிருந்த நிலையில் , இல்லை; நான் அரசியல் ஆராய்ச்சியாளன் என்பதைத் தம் திட்டங்களாலும் நடவடிக்கைகளாலும் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.

துறை சார்ந்த அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றே அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள் ; என்றாலும் நிபுணர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களை இனம் கண்டு ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுய அறிவு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

செயல்திறன் மிக்க அதிகாரி இறையன்பு போன்றவர்கள் முந்தைய ஆட்சியிலும் இருக்கத்தானே செய்தார்கள்! எல்லாவற்றையும் விட, வீண் பந்தாக்களை ஸ்டாலின் புறக்கணித்து வருவது அவரது  மதிப்பைக் கூட்டியுள்ளது.

அன்புடன் உங்கள்
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை