Sunday, February 25, 2018

الدرس الثامن في خبر يكون جملة أو شبه جملة

# الدرس الثامن في خبر يكون جملة أو شبه جملة #

₹ إعلم أيها الحبيب أن الخبر مثلما يجيئ مفردا أو مركبا ناقصا كذلك يجيئ جملة اسمية أو فعلية أو شبه جملة.

سنذكر لكل واحد منها أمثلة وتمرينات على الترتيب :

0 أمثلة الإسمية :
1. الأستاذ تدريسه جيد.
( قولنا : تدريسه جيد جملة اسمية كما تعرف. وهي خبر لقولنا الأستاذ الذي هو مبتدأ. وقس على هذا كل مثال تال)

2. فاطمة والدها سيد المرسلين
3. الرجال السياسيون وظيفتهم غالبا رشوة قبيحة
4.المدررسات هدفهن تربية وتعليم الأطفال
5. الطالبان شهادتهما مفقودتان
6. الزميلتان نتيجتهما في الإمتحان الماضي راسبة
7. أعداء الإسلام محاولتهم فصل العقيدة عن الشريعة والإيمان

( رشوة - லஞ்சம், ; ووظيفة - அன்றாடப் பிழைப்பு ; هدف - லட்சியம் ; شهادة - சான்றிதழ் ; راسبة - பெயில் ; محاولة - திட்டம்)

@ التمرين ؛ ترجموا

1. الحديقة ازهارها جميلة
2. الجامعة بناءها شامخ
3. الفلفل طعمه حريف
4.الأرنب جريها سريع
5. المملكة العربية السعودية حكامها من أسرة واحدة
6. دولة الهند أغلبية مواطنيها هندوس
7.  الشباب أكثرهم اليوم يقلدون الحضارة الغربية
8. النساء عفتهن عدم السفور

( إن شاء الله)

Thursday, February 22, 2018

أجوبة صحيحة للأسئلة من التمرين في الأمر والنهي

# أجوبة صحيحة للأسئلة من التمرين في الأمر والنهي #

₹ الترجمة إلى لسات التاميل ₹

1. நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!

2. பார்க்க அனுமதியில்லாத இளம்பெண்ணைப் பார்க்காதே!

3. அப்துல்லாஹ் தந்தைக்குக் கடிதம் எழுதட்டும்!

4. கார்கள் ஓடும்போது சாலையைக் கடக்காதே!

5. நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே! நாட்டுக்கு உன்னால் என்ன முடியும் என்று கேட்டுக்க்கொள்!

6. குறை சொல்லாதே
காலத்தை
கவிஞன் சொன்னான் :
குறைசொல்கிறோம்
காலத்தை
குறையெல்லாம் நம்மிடம்
குறையொன்றும் இல்லை
நம் காலத்திற்கு -
நாம் தவிர!

₹  التعريب الصحيح ₹

1. اجلس واسترح ولاذهب أنا الي السوق
2. اكتر لي مركبة وليدع أحمد حمالا
3. قم تروح و جب لنا شايا حارا

( إن شاء الله)

Tuesday, February 13, 2018

التمرين في الأمر والنهي

# التمرين في الأمر والنهي #
₹ ترجموا الجمل التالية ₹

1. إذا لم تستح فاصنع ما شئت
2. لا تنظر فتاة أجنبية لا يحل لك نظرها
3. ليكتب عبدالله رسالة لوالده
4. لا تعبر الشارع حين سارت السيارات فيه
5. لا تسأل عما يمكن أن يفعله بلدك لك ولكن سل ما ذا تستطيع انت أن تفعله لبلدك
6. لا تعب زمانك - يقول شاعر -
نعيب زماننا والعيب فينا -
وما لزماننا عيب سوانا.
7. لا تلعن أحدا حتى البهائم والجمادات
8. احذر قذف الناس واتهامهم في أعراضهم فإنه من أكبر الكبائر

0 عربوا الآتية :
1. நீ அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள் ; நான் கடைவரை போக வேண்டும்.

2. நீ எனக்கு ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்து வா ;அஹ்மத் கூலி ஆளை அழைத்து வரட்டும்.

3. நீ எழுந்துபோய், நமக்கு ஒரு சூடான டீ கொண்டுவா!

( إن شاء الله)

Thursday, February 08, 2018

பொறியியல் முதல் செமஸ்டர் தேர்வில் 68%பேர் தோல்வி

# பொறியியல் முதல் செமஸ்டர் தேர்வில் 68%பேர் தோல்வி #
+++++++++++++++++++

கடந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1000_க்கு மேல் மதிப்பெண் பெற்று அதிக கட் ஆப் மதிப்பெண் அடைந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஏராளமான பேர் முதல் செமஸ்டர் தேர்வில் ஃபெயில் ஆகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் 570. இவற்றில் பிஇ, பிடெக் படிக்கும் மாணவர்களுக்கான முதலாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. தேர்வு எழுதிய 1,13,298 மாணவ மாணவிகளில் வெறும் 36,179 பேர் மட்டுமே பாஸ். இது 32% ஆகும். மீதியுள்ள 68% பேர் தேர்ச்சி பெறவில்லை.

கணிதத்தில் 49,288 பேரும், இயற்பியலில் 59,606 பேரும், வேதியியலில் 60,684 பேரும், மற்ற படங்களான இன்ஜினியர் டிராயிங்கில் 71,781 பேரும், தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் 91,117 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமான காரணம், பிளஸ் - 1 வகுப்பு பாடங்கள் நடத்தப்படாததே என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். இவ்ஙகுப்பில்தான் பொறுப்பியலுக்குத் தேவையான அடிப்படை தகவல்கள் உண்டாம்! அத்தோடு பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை முறையாக நடத்த ஆட்கள் இல்லை. எல்லாம் சேர்ந்து பொறியியலையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பல லட்சங்கள் கொடுத்து தம் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்துவிட்ட பெற்றொரில் எத்தனை பேர் செமஸ்டரில் பிள்ளை எத்தனை மார்க் வாங்கியுள்ளான் என்று கவனிக்கிறார்கள்?

Monday, February 05, 2018

# الترجمة الصحيحة للمقالة العربية بعنوان - هل انتشر الإسلام بالسيف؟ #

# الترجمة الصحيحة للمقالة العربية بعنوان - هل انتشر الإسلام بالسيف؟ #

# இஸ்லாம் வாளால் பரவியதா? #

( ரிசாலத்து அல்ஜிஹாத் - மாத இதழ்)

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும், திருக்குர்ஆன் தமக்குக் கற்றுக்கொடுத்த போதனைமூலம் ஒன்றைப் புரிந்திருந்தார்கள். நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் மூலம் கொள்கைகள் மனித மனங்களில் இடம்பிடிக்கா ; மனமாற்றத்தால் மட்டுமே இடம்பிடிக்கும் என்பதே அது.

" ( நபியே!) அறிவார்ந்த ( மெய்ப்பொருளாலும்) அழகான அறிவுரையாலும் இறைவழிக்கு ( மக்களை) அழைப்பீராக!" (16:125) என்றே அல்லாஹ் கூறுகின்றான்.

நிர்ப்பந்தம் ( அல்லது அடக்குமுறை) என்பது, மனிதனின் மாமிசத்தையும் எலும்பையும் வேண்டுமானால் பெறலாமே தவிர, மனமாற்றம் மட்டுமே அவனுடைய குருதி, நரம்பு, உணர்வு எங்கும் பரவியிருக்கும். திணிக்கப்படும் எந்தக் கொள்கையும் மனதில் கடும் விரோதத்தையே வளர்க்கும் ; அக்கொள்கையை அழிக்கவும் அதிலிருந்து வெளியேறவுமே மனிதன் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பான்.

இதனாலேயே, நிர்ப்பந்திக்கப்பட்டவரின் ஒப்பந்தங்கள் செல்லாதவை என அறிவித்தது இஸ்லாமிய ஷரீஆ ; அவ்வாறே, கொள்கைகளில் நிர்ப்பந்தம் கூடாது எனத் தெளிவுபடுத்தியது. " மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது" என்கிறது குர்ஆன்.

இறைத்தூதர் ( ஸல்) அவர்கள் தமது பரப்புரையை மக்கள் மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகக் கட்டாயப்படுத்தும் வழிகளைக் கையாண்டிருந்தால், - அல்லாஹ் காக்க வேண்டும் - தம் பொறுப்பையே அறியாதவர்களாகியிருப்பார்கள் ; தம் பணியின் எல்லைகளைத் தாண்டியவர்களாயிருப்பார்கள்.

தம் தூதுவத்தை நம்பவைப்பதற்காக இறைத்தூதர் ஒரு நபரையேனும் கட்டாயப்படுத்தினார்கள் என எந்தப் புத்திசாலியும் வாதிடமாட்டான். மாறாக, இறைத்தூதரின் இறைநம்பிக்கை, நடவடிக்கை, எதிரிகளின் தொல்லைகளைச் சகித்தது ஆகியவைதான், இந்தப் பரைப்புலையின்பால் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக இருந்தன. எல்லா வகையிலும் மனித இயல்போடு இயைந்ததாக அந்தப் பரப்புரை இருந்தது.

இறைத்தூதர் ( ஸல்) அவர்கள் சந்தித்த போர்களெல்லாம் தற்காப்பிற்கானவை. தாக்குதல்கள் போன்று அவை மேலோட்டமாகத் தோன்றும். ( சொல்லப்போனால்) போர்க் கலையில் அறியப்படுவதுபோல், சண்டையின் விசையைக் கையகப்படுத்தவும் திடீர் தாக்குதலின் சக்தியை உறுதி செய்யவும் இத்தோற்றம் தேவைதான்.

( إن شاء الله)

Friday, February 02, 2018

கார்ப்பரேட் பட்ஜெட்

#கார்ப்பரேட் பட்ஜெட் #
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பைக்  கூட்டாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியில் சலுகை செய்திருக்கிறது பா. ஜ. க. அரசு. ரூ. 250 கோடிக்குள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரியை 25 விழுக்காடு குறைத்துள்ளார் ஜேட்லி.

மத்திய பட்ஜெட்டால் 29 வகை பொருட்களின் விலை உயரப்போகிற நிலையில், 4 பொருட்களின் விலை மட்டுமே குறையுமாம். விலை குறையும் பொருட்களில் கச்சா முந்திரியும் அடக்கம்.

விலை உயரும் பொருட்களில் காய்கறிகள், பற்பசை, காலணிகள், விளக்கு, கைக்கடிகாரம், சிறு பொம்மைகள், நாற்காலி, மெழுகுவர்த்தி, பட்டம் ஆகிய பொருட்களும் அடக்கம். இந்த விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்குமா இல்லையா? இந்த விலைக் குறைப்பு ஏழைகளுக்கு உதவுமா?

குடியரசுத் தலைவர் பழைய சம்பளம் :ரூ. 1.50 லட்சம். புதிய சம்பளம் : ரூ. 5 லட்சம். குடியரசு துனைத் தலைவர் :ப - 1.25 லட்சம், பு - 4 லட்சம். ஆளுநர்கள்  ப- 1.10 லட்சம், பு - 3.5 லட்சம்.

ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் சேர்த்தபின் கவனிப்பு குறைந்துபோனது. ரூ. 1.46ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு ஒதுக்கியிருப்பதோ 53 ஆயிரம் கோடி மட்டுமே. மீதத்தை மாநில அரசு, தனியார் பங்களிப்பு, ரயில்வே துறை பார்த்துக்கொள்ள வேண்டுமாம்! கடந்த பட்ஜெட்டில் ரூ. 55ஆயிரம் கோடி நடுவண் அரசு கொடுக்கும் என்று சொல்லிவிட்டு, கொடுத்தது 40ஆயிரம் கோடி. இதற்கெல்லாம் கணக்கு வழக்கு இருக்கா?

இத்தனைக்கும் தேர்தல் கால பட்ஜெட்டாம் இது! இதுவே இப்படி என்றால், சாதாரண கால பட்ஜெட் எப்படி இருக்கும்? இதற்கு பாராட்டுகள் வேறு!

பாவம்! இவர்களின் அஜண்டாவே வேறு.