Wednesday, July 13, 2011

அரபுச் செம்மொழி


. முஹம்மது கான் பாகவி
உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதியே மொழி அல்லது பாஷை ஆகும். உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விதத்தில் சிறப்பு உண்டு. எல்லா மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே. மொழிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வோ பாகுபாடோ பாராட்டக் கூடாது.
இருப்பினும்சில மொழிகளுக்குத் தனிச் சிறப்பும் வளமான வரலாறும் இருப்பதை மறுப்பதற்கில்லை. உலக மொழிகளில் சிலதோன்றிய வேகத்தில் எழுத்து வடிவம்கூட பெறாமல் மறைந்துபோனதும் உண்டு. வேறுசில,குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்து இறந்துபோனதும் உண்டு. ஆட்சியதிகாரத்தின் துணையால் செல்வாக்குப் பெற்று விளங்கிய சில மொழிகள்அந்த ஆட்சி ஒழிந்ததோடு காணாமல் போனதும் உண்டு.
ஒரு மொழி மக்கள் நாவுகளில் தவழத் தொடங்கியதிலிருந்துபடிப்படியாக வளர்ந்துஇலக்கணம் கண்டுஇலக்கியம் படைத்துகாப்பியங்கள் பல உருவாக்கிவேதமொழியாக பரிணமித்துக் காலத்தால் அழியாமல் இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால்அம்மொழி முதன்மை மொழி என்ற தகுதியைப் பெறுவது இயற்கைதாú!
இந்த வகையில்இன்று உலகில் ஆறாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் மக்களால் பேசப்படுகின்றனஅவற்றில் ஆறு மொழிகளே செம்மொழி என்ற தகுதியை ஆரம்பமாகப் பெற்றனசிலர் சீனம்பாரசீகம் ஆகியவற்றைச் சேர்த்து எட்டு மொழிகள் செம்மொழிகள் என்பர். செம்மையான -அதாவது பண்பட்டதும் சிறப்பும் உயர்வும் பெற்றதுமான-மொழியே செம்மொழி (ஈப்ஹள்ள்ண்ஸ்ரீஹப் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) எனப்படுகிறது.
1. அரபி 2. தமிழ் 3. சமஸ்கிருதம் 4. ஹீப்ரு 5. லத்தீன் 6. கிரேக்கம் ஆகிய ஆறு செம்மொழிகளில் சமஸ்கிருதமும்,எபிரேயு என்ற ஹீப்ரும் வெறும் வேத மொழிகளாக மட்டுமே விளங்குகின்றனலத்தீன்இத்தாலி மொழியாக மருவிவிட்டது. கிரேக்கம்கிரேக்க நாட்டில் மட்டும் சுருங்கிவிட்டது.
தமிழ்ச் செம்மொழிஉலகில் ஏழரைக் கோடி மக்களால் பேசப்படும் மொழியாகத் திகழ்கிறது. உலகில் எண்பது நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். தொன்மையும் இலக்கண இலக்கியத் தகுதிகளும் செம்மொழித் தமிழுக்கு நிறையவே உண்டு. தமிழுக்குச் செம்மொழித் தகுதி இந்த நூற்றாண்டில்தான் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்தது என்றாலும்அத்தகுதி தமிழுக்கு என்றும் உள்ளது.
இந்நிலையில்அரபுச் செம்மொழி பற்றி ஆய்வு செய்வதும் அதன் பழமைஇலக்கிய வளம் உள்ளிட்ட செம்மொழிக் கூறுகள் குறித்து ஆராய்வதும் மொழியியல் ஆர்வலர்களுக்கு அவசியமாகிறது. இந்த ஆய்வுமொழியியல் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
செம்மொழிக்கு என் தகுதிகள் வேண்டும் என்பது தொடர்பாக மொழி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும்முக்கியமான தகுதிகள் எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம். 1. தொன்மை. உலக மொழிகளிலேயே அரபு மொழி மிகவும் பழைமையானது என்பதை நிறுவ முடியும். 2. இலக்கிய வளம். அரபு மொழி இலக்கியம் பார் போற்றும் அளவுக்கு வளமானதுவனப்பு மிக்கது. 3. சொல் வளம். 4. இலக்கண விதிகளும் இலக்கிய விதிகளும் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். 5. மக்கள் வழக்கில் வாழும் மொழியாக இருக்க வேண்டும்.
தொன்மையான மொழி
அரபு மொழி தொன்மையானது என்பதை ஆதாரத்துடன் காணலாம். இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்கள், "ஜுர்ஹும்என்ற யமன் (ஏமன்) நாட்டினரிடமிருந்து அரபு மொழியைக் கற்றுக்கொண்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரீஹதீஸ் - 3364)
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) - ஹாஜர் (அலை) தம்பதியருக்குப் பிறந்தவரே இஸ்மாயீல் (அலை) அவர்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் (ஆப்ரகாம்) கி.மு. 2160ல் கல்தானியா (இராக்) நாட்டில் "ஊர்' (மத) எனும் ஊரில் பிறந்துகி.மு. 1985ல் மறைந்தார்கள். வயது: 175. மொழி: ஹீப்ரு. அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (ஹாகர்),எகிப்தில் "ஹஃப்ன்எனும் ஊரில் பிறந்தார்கள். மொழி: சிரியாக். அரபுகளின் தந்தை என அழைக்கப்படும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் (இஸ்மவேல்)கி.மு. 2070ல் எகிப்தில் பிறந்துசஊதியில் உள்ள மக்காவில் வாழ்ந்து கி.மு. 1933ல் மறைந்தார்கள். (ஃபத்ஹுல் பாரீதஃப்சீர் மாஜிதீ)
இதனால்தான்அன்னை ஹாஜர் (அலை) அவர்களை அரபியரின் அன்னை என நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வர்ணித்தார்கள் (புகாரீஹதீஸ் - 3358). இதிலிருந்துகி.மு. இரண்டாயிரத்திற்குமுன் வாழ்ந்த இஸ்மாயீல் (அலை) அவர்கள் யமனியரான ஜுர்ஹும் குலத்தாரிடம் அரபு மொழியைக் கற்றார்கள் என்பது உறுதியாகிறது.
இந்த ஜுர்ஹும் குலத்தார் யார்ஜுர்ஹும் பின் கஹ்த்தான் பின் ஆமிர் பின் ஷாலக் பின் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ். அதாவது நபி நூஹ் (அலை) அவர்களின் (நோவா) ஆறாவது தலைமுறையில் பிறந்த ஜுர்ஹும் என்பாரும் அவருடைய சகோதரர் கத்தூரா என்பவரும்தான் முதலில் அரபி மொழியில் பேசியவர்களாவர். (ஃபத்ஹுல் பாரீ)
நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்முதலில் அரபு மொழி பேசியவர் இறைத்தூதர் ஹூத் (அலை) அவர்கள் ஆவார் என்று தெரிவிக்கிறார்கள் (அத்துர்ருல் மன்ஸூர்). நபி ஹூத் (அலை) அவர்கள்நூஹ் (அலை) அவர்களின் நான்காவது தலைமுறை ஆவார். அவரது வமிசப் பரம்பரையை விவிலியம் பழைய ஏற்பாடுநோவா - சேம் - அர்பக்சாத் - சாலா - ஏபேர் (ஹூத்) எனப் பட்டியலிடுகிறது.
நபி ஹூத் (அலை) அவர்கள் கி.மு. 2538ல் பிறந்தார்கள்பழங்கால அரபுச் சமூகத்தாரான "ஆத்கூட்டத்தாருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அன்னாருடைய மக்களில் "கஹ்த்தான்என்பவரே யமனியரின் தந்தை ஆவார் (அத்துர்ருல் மன்ஸூர்). இதிலிருந்து அரபு மொழி கி.மு. 2500க்கு முன்பே தோன்றிவிட்டதென அறிய முடிகிறது.
அரபியரை மூன்று வகையினராக வரலாற்றாசிரியர்கள் இனம் கண்டுள்ளனர். 1. பழங்குடி அரபியர் (அல்அரபுல் ஆரிபா). இவர்கள்தான்ஆத் மற்றும் ஸமூத் கூட்டத்தார். பஹ்ரைன்யமாமா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தஸ்ம்,ஜதீஸ் ஆகிய கூட்டத்தாரும் இவர்களில் அடங்குவர். 2. கலப்பு அரபியர் (அல்அரபுல் முதஅர்ரிபா). "கஹ்த்தான்'குலத்தாரைப் போன்று கலப்பு அரபி பேசியோர். 3. தூய அரபியர் (அல்அரபுல் முஸ்தஅரிபா). இவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழிவந்த கலப்பில்லாத அரபி பேசியோர்.
இதிலிருந்து மேற்சொன்ன இரு தகவல்களும் சரியானவையே என்பதையும்கி.மு. மூவாயிரமாவது ஆண்டிலேயே அரபு மொழி பிறந்துவிட்டது என்பதையும் அறியலாம். மொத்தம் ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்கப் பழமையானமொழி அரபு மொழி ஆகும்.
இலக்கிய வளம்
இலக்கியத்தில் கவிதை முதலிடம் பெறும். ஒரு மொழியில் வெளிவந்துள்ள கவிதை நூல்கள் அதன் செம்மொழித் தகுதிக்குச் சிறந்த சான்றாகும்.
அரபு மொழிக் கவிதைகளை -அதன் கால அளவை முன்னிட்டு- ஏழு அணிகளாக (தபகா) வகைப்படுத்துவர். ஒவ்வோர் அணியிலும் ஏழு கவிஞர்கள் இடம்பெறுகின்றனர்.
முதல் அணியினர்: இஸ்லாத்திற்குமுன் பிரபலமாக விளங்கிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் (அஸ்ஸப்உல் முஅல்லகா). இக்கவிதைகள் திருமக்காவில் கஅபா ஆலயத்தில் தொங்கவிடப்பட்டுமொழி ஆர்வலர்களின் அங்கீகாரம் பெற்றவை ஆகும்.
1. கவிப்பேரரசர் இம்ரஉல் கைஸ். இவர் கி.பி. 500ல் நஜ்த் பகுதியில் பிறந்து "அன்கரா'வில் கி.பி. 540ல் மறைந்தார். இம்ரஉல் கைஸ் பின் ஹஜர் பின் அல்ஹாரிஸ் என்பது இவரது முழுப் பெயர். இவரது 1736 ஈரடிப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
2. ஸுஹைர் பின் அபீசல்மா. 1864 ஈரடிப் பாடல்கள். 3. நாபிஃகா (கி.பி. 604). அரபுக் கிறித்தவரான இவர் 2804 ஈரடிப் பாடல்களை இயற்றிவர். 4. அஃஷா பக்ர் பின் வாஇல். 2330 ஈரடிப் பாடல்கள். 5. லபீத் பின் ரபீஆ (கி.பி. 560-661). 2061ஈரடிப் பாடல்கள். 6. அம்ர் பின் குல்ஸூம். ஆறாம் நூற்றாண்டு அரபுக் கவிஞரான இவர் ஒரு கிறித்தவர். சமூக மற்றும் வரலாற்றுப் படிவமாக விளங்கும் இவரது கவிதைத் தொகுப்பு 2862 ஈரடிப் பாடல்களைக் கொண்டதாகும்.
7. தரஃபா பின் அல்அப்த் (கி.பி. 543-659). பஹ்ரைனில் பிறந்த இவரது தொகுப்பில் 1531 ஈரடிப் பாடல்கள் உண்டு. இவரது கவிதைத் தொகுப்பு ஒன்று 1951ல் பாரிசில் மாக்ஸ் என்பவரால் அச்சிடப்பட்டது.
இரண்டாவது அணியினர்: ஏழு வெகுஜன கவிஞர்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் கால கவிஞர்களானஇவர்களின் தொகுப்புகளை "முஜம்ஹராஎன்பர்.
1. உபைத் பின் அல்அப்ரஸ். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் கி.பி. 554ல் கொல்லப்பட்டார். 2. அஷ்ரா பின் ஷத்தாத் (கி.பி. 525-615). 3. அதீ பின் ஸைத் (கி.பி. 587). 4. பிஷ்ர் பின் அபீகாஸிம் 5. உமய்யா பின் அபிஸ்ஸல்த் (கி.பி.630). அறியாமைக் கால கவிஞராக இவர் இருந்தாலும்ஏகஇறைக் கொள்கையைத் தம் கவிதைகளில் முன்னிலைப்படுத்தினார். இவருடைய கவிதைகள் 1911ல் பிரசுரமாயின. 6. கதாஷ் பின் ஸுஹைர். 7. நிம்ர் பின் தவ்லிப்.
மூன்றாவது அணியினர்: அறியாமைக் கால கவிஞர்களான இவர்களின் கவிதைகள்செவ்வரபு மொழிக் கவிதைகள் (முன்தகயாத்) என அறியப்படுகின்றன. 1. முசய்யப் பின் அலஸ். 2. மர்கஷ் 3. முத்தலம்மிஸ் 4. உர்வா பின் அல்வர்த் 5.முஹல்ஹில் பின் ரபீஆ 6. துரைத் பின் அஸ்ஸம்மா 7. முத்தனக்கில் பின் உவைமிர்.
நான்காவது அணியினர் (இஸ்லாத்திற்குப் பிந்தியோர்). இவர்கள் சமயப் புலவர்கள் (மத்ஹபாத்) எனஅறியப்படுகின்றனர். 1. ஹஸ்ஸான் பின் ஸாபித் 2. அப்துல்லாஹ் பின் ரவாஹா 3. மாலிக் பின் அஜ்லான் 4. கைஸ் பின் அல்கத்தீம் 5. உஹைஹா பின் அல்ஜலாஹ் 6. அபூகைஸ் பின் அல்அஸ்லத் 7. அம்ர் பின் இம்ரஉல் கைஸ்.
ஐந்தாவது அணியினர்இரங்கற்பாக்களையும்ஆறாவது அணியினர் மதச்சார்பற்ற கவிதைகளையும்ஏழாவது அணியினர் வீரக் கவிதைகளையும் புனைந்தனர்.
இவையன்றிதீவானு ஹமாசாதீவானு முத்தனப்பிதீவானுல் மஆனீ போன்ற கவிதைத் தொகுப்புகளும் பிரபலமானவை ஆகும். இவற்றில் பல்வேறு கவிஞர்கள் இயற்றிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
செம்மறை

திருக்குர்ஆன் ஒரு செம்மறை ஆகும். அதன் நடை கவிதையும் அல்லசாதாரண வசன நடையும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு புது நடை ஆகும். ஆறாம் நூற்றாண்டில் (கி.பி. 610-632) அருளப்பெற்ற திருக்குர்ஆனில் சொல் வளம்பொருள் செறிவுஇலக்கணம்இலக்கியம்பண்பாடுநாகரிகம்வரலாறு என எல்லா செம்மொழிக் கூறுகளும் ஒருங்கே அமைந்துள்ளனஎல்லாவற்றுக்கும் மேலாக அது ஓர் இறைமறை என்பதே அதற்குரிய உயர் தகுதியாகும்.
திருக்குர்ஆனின் இலக்கிய நயத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். உவமைகள் கூறுவதில் திருக்குர்ஆனை விஞ்ச எதுவுமில்லை. நரகம் மிகப் பெரியதுஎத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அதில் இடம் இருக்கும்அவ்வளவு பிரமாணடமானதுவிசாலமானது. இதைத் திருக்குர்ஆன் சொல்லும் அழகைப் பாருங்கள்.
நாம் நரகத்திடம்கேட்போம்!வயிறு நிரம்பிவிட்டதா?அது கேட்கும்இன்னும் இருக்கிறதா? (50:30)
நபி (ஸல்) அவர்களுக்கு மனவேதனை அளிப்பதற்காகவே, "அவர் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் ஓர் அப்பாவி'என்று எதிரிகள் நகைத்தனர். இது குறித்து குர்ஆன் சொல்லும்:
அவர் ஒரு "காது' (ஹுவ உதுனுன்) என்கின்றனர்;ஆம்! உங்களுக்கு நன்மை தரும் காது. (9:61)
சொல்வளம்
அரபு மொழியின் சொல் வளம் வியப்பூட்டக்கூடியது. சொல் சுருக்கம்பொருள் விரிவு அரபுச் செம்மொழியின் தனிச் சிறப்பாகும். எந்தப் பொருளையும் பிறமொழி கலக்காமல் தூய அரபியில் தெரிவிக்க முடியும். ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள்ஒரே பொருளுக்குப் பல சொற்கள்ஒரே சொல்லுக்கு எதிரெதிர் பொருள்கள் எனச் செம்மொழிக்கான எல்லாத் தகுதிகளும் அரபிக்கு உண்டு.
"ளாத்எனும் எழுத்து அரபு மொழிக்கே சொந்தம். இதனாலேயே அதை "ளாத் மொழி' (லுஃகத்துள் ளாத்) என்றழைப்பர் அரபியர்.
வாழும் மொழி
அரபுச் செம்மொழி வேத மொழியாக மட்டும் இல்லாமல்வழக்கில் வாழும் நவீன மொழியாகவும் விளங்குகிறது. கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற அரபு மொழி பல கோடி மக்களின் தாய்மொழி ஆகும்.
அரபு மொழி ஆசியாஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமாகப் பேசப்படும் மொழியாகும். எகிப்துசூடான்மொராக்கோ போன்ற ஆப்பிரிக்கா நாடுகள்சஊதிஅரபு அமீரகம்அரபு வளைகுடா போன்ற அரபு நாடுகள் என 24 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியாக அது விளங்குகிறது. அமெரிக்காஐரோப்பா நாடுகளிலும் அரபு மொழி புழக்கத்தில் உள்ளது.
அரபு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 34 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரத்து 830. இது 2009 நவம்பர் நிலவரமாகும். இவர்களில் முஸ்லிம்கள்கிறித்தவர்கள்யூதர்கள் எனப் பல மதத்தாரும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் (680 கோடி) 23 சதவீதமாக உள்ள 157 கோடி முஸ்லிம்கள் தங்களின் வேத மொழி என்ற முறையில் அரபு மொழி அறிந்துள்ளனர்.
உலகில் உள்ள 5 கண்டங்களில் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி வாழும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகை,ஹஜ்துஆ போன்ற வழிபாடுகளில் அரபு மொழி குர்ஆன் வசனங்களையும் துதிகளையும் ஓதிவருகின்றனர்.
இலக்கண இலக்கிய விதிகள்
அரபு இலக்கணம்அரபு இலக்கியம் தொடர்பான சட்ட விதிகள் முறையாக வகுக்கப்பட்டுஆறாம் நூற்றாண்டின் இறுதியிலேயே நூல் வடிவம் பெற்றுவிட்டனஇலக்கணம்இலக்கியம்கதைகவிதைகாப்பியம் எனச் செம்மொழியின் விரிவான ஆக்கங்கள் இலட்சக்கணக்கில் அரபி மொழியில் உண்டு.
ஆறாம் நூற்றண்டைச் சேர்ந்த திருக்குர்ஆú அரபு இலக்கணத்திற்கும் அரபு இலக்கியத்திற்கும் ஒரு முன்úனாடி நூலாகும். அரபு இலக்கணம் மற்றும் இலக்கியத்தைச் சொல்லும் செய்யுள்களும் பாடல்களும் பல உள்ளன.இவையெல்லாம் இன்றளவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.
காதல் காவியம்
லைலா - மஜ்னூன் போன்ற ஏராளமான காதல் காவியங்களும் 13ஆம் நூற்றாண்டு அல்ஃப் லைலா (ஆயிரம் இரவுகள்)ஏழாம் நூற்றாண்டு கலீலா வ திம்னா போன்ற அரபுக் கதைகளும் செம்மொழி அரபிக்கு அழகு சேர்க்கும் அணிகளாகும்.
யமன் நாட்டைச் சேர்ந்த "பனூ உத்ராஎன்ற குலத்தார் காதல் மன்னர்கள். இவர்கள் காதலுக்கு முன்னுதராணமாக விளங்கியவர்கள். காதலுக்காக உயிரையே துறக்கவும் தயங்காத மக்கள். அவர்களில் ஓர் இளைஞனின் காதல் காவியம் இதோ!
அரபு மொழி அறிஞரான அஸ்மயீ அபூசயீத் அப்துல் மலிக் (கி.பி. 740-828) ஒருமுறை யமன் சென்றிருந்தார். பனூ உத்ரா கூட்டத்தார் வசிக்கும் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் ஒரு கல்லில் ஒரு கவிதை எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்:
காதலர்களே!இறைமீது ஆணை!சொல்லுங்கள்காதல் வயப்பட்டகாளைஎன்ன செய்ய வேண்டும்?
இந்த வரிகளுக்குக் கீழே அஸ்மயீ இப்படி எழுதினார்:
காதலைஅவன் கையாள்வான்மென்மையாக!மறைப்பான்இரகசியத்தை!எல்லாக் கட்டங்களிலும்காப்பான்பொறுமைகாட்டுவான்பணிவு!
மறுநாள் அஸ்மயீ வந்து பார்த்தார். தம் வரிகளுக்குக் கீழே வேùறாரு பாடல்:
மென்மையா?எப்படி முடியும்?காதலோஅவனைக் கொல்கிறதுஉயிரோஒவ்வொரு நொடியும்பிரிகிறது!
இதற்குக் கீழே அஸ்மயீ எழுதிவைத்தார்:
பொறுமை காக்க
இரகசியம் மறைக்க
முடியாவிட்டால்,
ஒரே வழி
சாவுதான்!
மறுநாள் வந்து அஸ்மயீ பார்த்தபோதுஅந்தக் கல்லில் தலைவைத்து இளைஞன் ஒருவன் செத்துக் கிடந்தான். கல்லில் இப்படி எழுதியிருந்தான்:
கேட்டோம்பணிந்தோம்பின்பு இறந்தோம்!இணைய முடியாமல்போனஅவளுக்குசொல்வீர்என் சலாம்!

No comments:

Post a Comment