Thursday, July 04, 2013

சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...


2050இல் ரஷியாவில் முஸ்லிம்கள் ஆட்சி

லக முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் டிரஸ்டிகள் கமிட்டி உறுப்பினரும் இஸ்லாமியச் சிந்தனையாளருமான டாக்டர் முஹம்மது அமாரா அண்மையில் தமது ஆய்வு ஒன்றை வெளியிட்டார்.

ரஷியா ஒன்றியத்தின் மக்கட்தொகை கணக்கெடுப்பு ஓர் உண்மையை வெளியிட்டுள்ளது. ரஷியாவை முன்பு தாத்தாரியர்கள் ஆட்சி செய்ததைப் போன்று 2050இல் முஸ்லிம்கள் ஆட்சி செய்வார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

துருக்கி ஐரோப்பாவைச் சுமக்கிறது; ஐரோப்பா இஸ்லாத்தைச் சுமக்கிறது. அப்படியானால், எதிர்காலம் இஸ்லாத்திற்கே! என்று டாக்டர் அமாரா குறிப்பிட்டார்.

ரஷியாவில் சுமார் 20 மில்லியன் (2கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது, சோவியத் ரஷியா 15 குடியரசுகளாகப் பிரிந்த பின்னர் உள்ள நிலையாகும். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

தற்போது ரஷிய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றனர். இன்னும் ஏராளமான பள்ளிவாசல்கள் மீட்கப்படாமலேயே உள்ளன. 1917இல் நடந்த கம்யூனிஸப் புரட்சிக்கு முன்னர் ரஷியாவில் மொத்தம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் இருந்தன. படிப்படியாகக் குறைந்து 80 பள்ளிவாசல்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

ரஷிய முஸ்லிம்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை, தேவையான அளவில் இமாம்களோ பிரசாரகர்களோ இல்லாததுதான். அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மையங்களும் கிடையாது.
கடின முயற்சிகளுக்குப் பிறகு இப்போது ரஷியாவெங்கும் 4 ஆயிரம் பள்ளிவாசல்கள்வரை மீட்கப்பட்டுள்ளன.



கெய்ரோவில் உலமாக்கள் மாநாடு

கிப்து தலைநகர் கெய்ரோவில் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் மாநாடு அண்மையில் நடந்தது. இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் யூசுப் அல்கர்ளாவி மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

உலகளவில் 70 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளாக நூற்றுக்கும் அதிகமான உலமாக்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் சிரியாவில் நடக்கும் மக்கள் போராட்டம் தொடர்பாக விரிவான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தலைமை உரையாற்றிய டாக்டர் கர்ளாவி அவர்கள் தமது தலைமை உரையில், சிரியாவின் கொடுங்கோலன் பஷ்ஷார் அல்அசதுக்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு உதவி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தக் கொடுமைக்காரனுக்கு ஈரானும் ஹிஸ்புல்லாஹ்கட்சியும் இனரீதியாக உதவிவருகின்றன. இதைத் தடுத்துநிறுத்த வேண்டும். தன் சொந்த மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இஸ்ரேலுக்கெதிராக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் துணிவில்லாத பஷ்ஷார் சொந்த மக்கள்மீது அந்த ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கர்ளாவி கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் உம்மா சிரியா மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ முன்வர வேண்டும் என கெய்ரோ மாநாடு அழைப்பு விடுத்திருக்கிறது. பஷ்ஷாருடன் ஈரான், இராக், ஹிஸ்புல்லாஹ் ஆகிய ராஃபிளாக்களும் பாத்தினிய்யாக்களும் சேர்ந்துகொண்டு சன்னி முஸ்லிம்களைப் படுகொலை செய்துவருகின்றனர். ரஷியா மற்றும் சீனாவிலுள்ள சிலரும் ஒத்துழைக்கின்றனர்.

இது ஒரு இனப்படுகொலை. இந்த அநியாயத்தைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்படுவது முஸ்லிம் உம்மாவின் கடமையாகும் என மாநாடு தன் அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டது.




இராக்கில் மீண்டும் பஹாயிஸம் தலைதூக்குகிறது


ராக்கிலுள்ள குர்திஸ்தான் மாகாணத்தில் சத்தாம் காலத்தில் அடங்கிக்கிடந்த பஹாயிகள் இப்போது மீண்டும் தலைதூக்கிவிட்டனர். அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி பஹாயிகள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

உண்மையில் பஹாயிஸம்என்பது ஈரானில் முளைத்த பாத்தினீ’ (அந்தரங்கம்) இயக்கமாகும். ஷியாக்களில் ‘12’ பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆதராவகத் தோன்றியதே பஹாயிஸம். ஷைகு, கஷ்ஃப், பாபிய்யா என்றெல்லாம் அழைக்கப்படும் வரிசையில் வந்த இயக்கமாகும் இது. ஆரம்பத்தில் ரஷியாவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் வளர்த்த இவ்வியக்கத்தைப் பிற்காலத்தில் யூதர்களும் ஊட்டிவளர்த்தனர்.

முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் குழப்பம் ஏற்படுத்தவும் முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கவும் உருவாக்கப்பட்டதே இந்த பஹாயிஸமாகும்.

கி.பி. 1817இல் பிறந்த மீர்ஸா ஹுசைன் அலீ அல்மாஸன்தரானீ என்பவர்தான் பஹாயிஸத்தை ஆரம்பித்தார். இவரை பஹாஉல்லாஹ்’ (இறைவனின் சௌந்தரியம்) என்றழைப்பர். இவருடைய தந்தை பெரிய பண்ணை முதலாளி ஆவார்.

அத்வைதக் கொள்கையை வலியுறுத்திய மீர்ஸா ஹுசைன், எல்லா மதங்களும் ஒன்றுதான் என்றும் மக்களுக்கு மதரீதியான எந்தக் கட்டளையும் இல்லை என்றும் பிரசாரம் செய்தார். பாரசீகக் கவிதைகள், தீவிர சூஃபிஸம், ஷைகிஸம் போன்றவை தொடர்பான நூல்களைப் படித்துவிட்டு பஹாயிஸத்தை அவர் நிறுவினார்.

அவருடைய சகோதரர் மீர்ஸா யஹ்யா அலீ நிரந்தர விடியல்என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார். இவர்கள் தங்களுக்கு அஸலிய்யீன்’ (நிரந்தரமானவர்கள் அல்லது அழிவில்லாதவர்கள்) என்று பெயர் சூட்டிக்கொண்டனர்.

‘‘அல்லாஹ் முதலில் முஹம்மத் (ஸல்) அவர்களின் உருவில் வந்தான். அடுத்து இவர்கள் சொல்லும் 12 இமாம்களின் உருவில் தோன்றினான். முதலில் வந்தவர்களைவிட பின்னால் வந்தவர்களே மேலானவர்கள். அஹ்மத் இஹ்சாயீ (கி.பி. 1753-1826) ஷைக், எல்லா நபிமார்களையும்விடச் சிறந்தவர். சொர்க்கங்கள் இரண்டும் நரகங்கள் இரண்டும் உண்டு’’ போன்ற மூடக்கொள்கைகளைக் கொண்டவர்களே பஹாயிகள்.

பஹாயிஸத்தின் நிறுவனர் பஹாஉல்லாஹ் யூதர்களுடன் நெருங்கிய ரகசியத் தொடர்பு வைத்திருந்தவர். யூதப் பாதிரியான ஷம்ஊன் உஜாசீயுடன் பஃக்தாதில் பஹா நெருங்கிப் பழகினார். குர்திஸ்தானில் ஹாரூன் பார்சானி என்ற யூதக்குரு பஹாஉக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்துவந்தார்.

குர்திஸ்தான் மலைகளில் தலைமறைவாக வாழ்ந்த பஹா, அங்கே யூதப் பாதிரியான யூசுஃப் ஹாயீம் என்பாரிடம் ஆன்மிகப் பயிற்சி பெற்றார்.


(அல்முஜ்தமா)

No comments:

Post a Comment