நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்
மூ
|
ன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம்
வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!
இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர்,
பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று
கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில்
இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.
இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’
என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித்
துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு
ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.
ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களுக்கானஆதரவும் எதிர்ப்பும்
அ
|
மெரிக்காவின் கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘பியூ’ அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய மக்களிலேயே ஃபிரான்ஸ் மக்கள்தான் அதிகமாக முஸ்லிம்கள்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பதாகவும் அதிக வெறுப்பைக் காட்டுவதில் இத்தாலியர்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தாலியர்களில் 63 விழுக்காட்டினர் முஸ்லிம்களுடன் பழகுவதை விரும்புவதில்லை; முஸ்லிம்களைப்
பற்றிய எதிர்மறையான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள். கிரீஸ் நாட்டில் 53 விழுக்காடு, போலந்தில் 50 விழுக்காடு, ஸ்பெய்னில் 46 விழுக்காடு, ஜெர்மனியில் 33 விழுக்காடு மக்கள் இவ்வாறு எதிர்மறையினராக உள்ளனர்.
ஆனால், ஃபிரான்ஸ் மக்களில் 72 விழுக்காட்டினர் முஸ்லிம்களுடன் நேர்மறை அணுகுமுறை கொண்டுள்ளனர். பிரிட்டனில் 64 விழுக்காடு, ஜெர்மனியில் 58 விழுக்காடு மக்களும் இவ்வாறு நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் இடதுசாரிகளே முஸ்லிம்களுடன் சுமுகமான அணுகுமுறையை மேற்கொண்டுவருகின்றனர் என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
முஸ்லிம்களின் பெருநாள்களுக்கும்பொது விடுமுறை கோரி கையெழுத்து இயக்கம்
பி
|
ரிட்டனில் முஸ்லிம்களின் பெருநாட்கள், இந்துக்களின் தீபாளி பண்டிகை ஆகியவற்றுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கக்கோரி
இதுவரை 1,16,000 பேர் கெயெழுத்திட்டுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில இந்தக் கையெழுத்து வேட்டை
நடந்துள்ளது. பிரிட்டிஷ் பிரஜையான ஜான்தாமேஸே இந்தக் கருத்துக்
கணிப்புக்கு ஏற்பாடு செய்தார்.
பிரிட்டனின் பொதுச் சபையில் இந்த
விவாதம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானால், பொதுக் கருத்துக்கணிப்பில்
ஒரு லட்சம்பேர் முடிவை ஆதரித்திருக்க வேண்டும். அதைவிட அதிகமானோர்
ஆதரித்திருப்பதால் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
புருண்டியில் 120 பேர்இஸ்லாத்தில் இணைந்தனர்
ஆ
|
ப்பிரிக்க நாடான புருண்டியில் 120 பேர் இஸ்லாத்தல் இணைந்தனர். இவர்கள் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டவர்கள். சஊதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பிரசாரகர்கள் இவர்களுக்கு வகுப்பு நடத்தினர். இந்த மையத்தில் இஸ்லாத்தைத் தழுவிய 23ஆவது குழுவாகும் இது.
இந்த இஸ்லாமிய ‘தஅவா’ மையம் திறக்கப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று, பெரும் வெற்றி அடைந்துவருகிறது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான புருண்டி மக்கள் இதுவரை இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். மையத்தில் இதற்குமுன் நடந்த 22 வகுப்புகளில் 1117 புதிய முஸ்லிம்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு வகுப்பு என்பது 60 நாட்களைக் கொண்டது.
இந்த இஸ்லாமிய ‘தஅவா’ மையம் திறக்கப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று, பெரும் வெற்றி அடைந்துவருகிறது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான புருண்டி மக்கள் இதுவரை இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். மையத்தில் இதற்குமுன் நடந்த 22 வகுப்புகளில் 1117 புதிய முஸ்லிம்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு வகுப்பு என்பது 60 நாட்களைக் கொண்டது.
அமெரிக்காவில் வேகமாகப் பரவும்இரண்டாவது மார்க்கம்
அ
|
மெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
புதிதாக நடத்தப்பட்டது. அதன் முடிவு குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம்
வெளியிட்டுள்ள அறிக்கையாவது: அமெரிக்காவின் 20 மாநிலங்களில் மிக வேகமாகப் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் இரண்டாம் இடத்தில்
உள்ளது. குறிப்பாக, மத்திய அமெரிக்காவிலும்
தென்அமெரிக்காவிலும் இஸ்லாம் அதிகமாகப் பரவியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் 8 மில்லியன் (80 லட்சம்) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களில் அமெரிக்க முஸ்லிம்கள், குடியேறிய முஸ்லிம்கள்,
அகதிகள் ஆகியோர் அடங்குவர்.
கிரிமியாவில் இஸ்லாமியப் பல்கலை
ர
|
ஷியாவில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இஸ்லாம் கால்பதித்துவிட்டது. கிரிமியாவில் உள்ள தாதாரியர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ரஷியாவின் ஐரோப்பிய பகுதி ஆன்மிக அமைப்பின் தலைவர் திம்யர் ஹழ்ரத் முஹம்மத்
யனோஃப் ரஷிய அதிபருக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கிரிமியா
தீபகற்பத்தில் இஸ்லாமியப் பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும் என்பதே அக்கோரிக்கை.
இந்த ஆன்மிக அமைப்பின் துணைத் தலைவர்
கூறியதாவது: ரஷியாவின் தலைமை முஃப்தி எங்கள் அமைப்பின் தலைவரை அண்மையில்
சந்தித்தபோதுதான் இந்தச் சிந்தனை உருவானது. தீபகற்பத்தில் ஆன்மிகக்
கல்வியும் சட்டக் கல்வியும் பரவலாகப் போதிக்கப்படவும் மார்க்க நூல்கள் வெளியிடவும்
உதவ வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக இஸ்லாமியப் பல்கலைக்
கழகம் உருவாக்க விழைகிறோம்.
நார்வே தலைநகரில் முதலாவதுமுஸ்லிம் பள்ளிக்கூடம்
நா
|
ர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில்
முஸ்லிம்களுக்கெனத் தனியான துவக்கப்பள்ளி ஒன்று உருவாக்கும் திட்டத்திற்கு அந்நாட்டு
கல்வி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். ‘முஸ்லிம் அன்னையர்’
எனும் அமைப்பே இதற்கான கோரிக்கையை முன்வைத்தது.
மாணவர்கள் இஸ்லாமிய – அரபிய கலாசாரத்தையும் மார்க்கத்தையும் இனி கற்றுக்கொள்வார்கள். இஸ்லாமியத் தத்துவங்கள், பண்பாடுகள் ஆகியவற்றையும் பயில்கின்ற
வாய்ப்பைப் பெறுகின்றனர். தலைநகரின் கிழக்கே அமைந்துள்ள இப்பள்ளியில்
200 மாணவர்கள்வரை பயிலலாம்- என்று ‘முஸ்லிம் அன்னையர்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கு
நார்வேயின் சில அரசியல் கட்சிகள் –குறிப்பாகத் தொழிலாளர் கட்சி- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமய அடிப்படையில் மக்களை ஒன்றுகூட்டுவதானது, நார்வே சமூகத்தின் ஐக்கியத்தைப் பலவீனப்படுத்திவிடும்; ஐக்கியத்திற்காக அதிகமான செல்வங்களைச் செலவழித்துவரும் நாடு, இனி தனித்தனியாகப் பிரிந்து அச்செல்வங்களைச் செலவிடவேண்டிவரும் என அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment