Sunday, December 17, 2017

# பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஆபத்து #

# பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஆபத்து #
---------------------------------------

நீங்கள் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைப் பாதுகாக்கவே வங்கியில் டெபாசிட் செய்கிறீர்கள். அதிலும் பொதுத்துறை வங்கிகள்மீது மக்களுக்கு அதீத நம்பிக்கை.

ஆனால், இந்த வங்கிகளின் வாராக் கடன் பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதனால் வங்கிகள் கடுமையான நிதிச்சிக்கலுக்கு ஆளாகும் நிலை.

இவ்வாறு வங்கிகள் கடனில் மூழ்குமானால், டெபாசிட் செய்தவருக்கு இன்றுவரை குறிப்பிட்ட தொகை கிடைத்துவருகிறது. ரூ. 1 லட்சம் வரை இவ்வாறு கிடைக்கும். ஆனால், இப்போது ஒரு புதிய மசோதா தயாராகி வருகிறது. இதன்படி, டெபாசிட் செய்தவருக்கு அவரது தொகையோ, ரூ 1.லட்சம என்ற உச்சவரம்போ தரப்படும் என்ற எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, திருப்பித் தர வேண்டிய தொகைக்கு நிகராக வங்கியின் பங்குகள் மாற்றித் தரப்படுமாம். இந்த பங்குகளின் நிலை இறைவனுக்கே வெளிச்சம்.
ஆக, முழுத் தொகை கிடைக்கும் என்ற உத்தரவாதம் சட்ட முன்வரைவில் கிடையாது.

₹ இனி நீங்கள்தான் உங்கள் நிதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்படி என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். பல திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்ற அரசின் வாக்குறுதி பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
-- மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் லிங்கை தொடுங்கள்.

http://tamil.thehindu.com/opinion/columns/article21825897.ece
ஞாயிறு அரங்கம்: வைப்புநிதி காப்பீட்டு மசோதா: அச்சப்பட வேண்டிய விஷயமா?

No comments:

Post a Comment