Tuesday, November 01, 2011

முஅம்மர் கதாஃபியின் மறுபக்கம்

- கான் பாகவி
கடந்த 21.10.2011 அன்று லிபியா அதிபர் முஅம்மர் கதாஃபி சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி கல் நெஞ்சையும் கரைத்துவிடும். உயிருக்குப் பயந்து ராட்சச நீர் குழாய்க்குள் ஒளிந்துகொண்டிருந்த கதாஃபியை, நேட்டோ படைகளும் லிபிய புரட்சிப் படைகளும் சேர்ந்து வெளியே இழுத்துப் போட்டுக் குண்டுகளுக்கு இரையாக்கியதை அல்ஜஸீரா தொலைக்காட்சியின் இணையதள ஒளிபரப்பில் கண்டபோது நாமும் துடித்துப்போனோம் என்பது உண்மைதான்.
கடந்த 42 ஆண்டுகாலமாக எதிர்ப்பே இல்லாமல், அல்லது எதிர்ப்பு இருந்தாலும் அதை எளிதாக முறியடித்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி புரிந்தார் கதாஃபி. ஐக்கிய ஆப்ரிக்காவின் சிற்பிஎன அவருடைய ஆதரவாளர்களால் புகழ்ந்துரைக்கப்படும் கதாஃபியின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி.
கதாஃபி தன்னை எப்போதும் ஏழைகளின் பங்காளிஎன்று வர்ணித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைவார். சாதாரண நிலையிலிருந்து பெரிய பதவிக்கு வந்த அவர், ‘ஆப்பிரிக்க அரபி முஸ்லிம்என்று வெளி உலகுக்கு அறிமுகமானவர். ஆப்ரிக்கர் என்பது உண்மை; அரபியர் என்பதும் உண்மை. அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் சர்ச்சைக்குரியது என்கிறது குவைத் இஸ்லாமிய வார இதழ் அல்முஜ்தமா’.
வாழ்க்கைக் குறிப்பு
1942ஆம் ஆண்டு வட ஆப்ரிக்கா நாடான லிபியாவில் சரத்மாவட்டத்தில் ஜஹ்னம் எனும் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முஅம்மர் கதாஃபி பிறந்தார். லிபிய ராணுவத்தில் இடைநிலை ஆசிரியராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கினார்.
தமது 27ஆவது வயதில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கதாஃபி தனிப்பட்ட முறையில் திறமைசாலிதான் என்பதில் ஐயமில்லை. ஐக்கிய ஆப்பிரிக்காவை உருவாக்குவதுதான் அவரது முதல் கனவுத் திட்டமாக இருந்தது. இதையடுத்து எகிப்து, சூடான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளை ஆப்பிரிக்கக் கூட்டணியில் கதாஃபி இணைத்தார்.
எகிப்து முன்னாள் அதிபர் கமால் அப்துந் நாசிரின் ஆசி கதாஃபிக்குக் கிடைத்தது. நாசர் இறந்தபிறகு அவருடைய வாரிசாக இருந்து அல்ஜீரியா, துனூசியா, மெராக்கோ ஆகிய நாடுகளையும் இக்ககூட்டணியில் இணைத்தார்.
இதையடுத்து ஆப்பிரிக்காவின் ராஜாதி ராஜன்என்று தமக்குத் தாமே அவர் பட்டம் சூட்டிக்கொண்டர். அரசியல் மற்றும் சமூகநீதி என்பது, ‘மக்கள் ஜனநாயம்என்ற மூன்றாவது தூணால் மட்டுமே சாத்தியமாகும் என்று கதாஃபி வாதிட்டார்.
லிபியா நாட்டின் அரசியல் சாசனம் என்று சொல்லி, அவரே தயாரித்ததுதான் பச்சைப் புத்தகம்[Green Book] எனும் ஒரு நூல். இதில் தமது நாட்டுக்கு ஒரு நீண்ட பெயரைச் சூட்டினார். மக்கள் பொதுவுடைமை ஜனநாயக லிபிய அரபிக் குடியரசுஎன்பதே அப்பெயர்.
ஜனநாயகத்தின் எதிரி
மூச்சுக்கு மூச்சு மக்கள் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய கதாஃபி பேசினாரே தவிர, செயலில் ஜனநாயகத்தின் விரோதியாகவே விளங்கினார்.
கதாஃபி தமது ஆட்சியில் புரிந்த குற்றங்களின் பட்டியல் நீளமானது. 1978ஆம் ஆண்டு இமாம் மூசா ஸத்ர் அவர்களைக் கொலை செய்தார். சாட் நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1984ல் லண்டனில் லிபியா தூதரகத்தில் பணியாற்றிய பிரிட்டன் பெண்மணியைக் கொன்றார்.
1992ல் லிபிய விமானத்தில் குண்டுவைத்து 150 லிபியர்களைக் கொன்றார். 1996ல் தலைநகர் திரிபோலியில் உள்ள பூசலீம் சிறையில் 1170 கைதிகளைக் கொன்றார். 2003ல் சஊதி அரபியா மன்னர் அப்துல்லாஹ்வைக் கொல்ல முயன்றார்.
இக்வானுல் முஸ்லிமீன் நண்பர்கள் மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பளித்தார். இக்வான்களைச் சிறையிலடைத்துக் கொடுமைகள் புரிந்தார்... இப்படி நீள்கிறது கதாஃபியின் ஜனநாயகப் படுகொலைகள் பட்டியல்.
குர்ஆனின் எதிரி
எல்லாவற்றுக்கும் மேலாக, முஅம்மர் ஒரு நல்ல முஸ்லிமே அல்ல. தாம் எழுதிய பச்சைப் புத்தகத்தை நவீன பைபிள்என வர்ணித்த அவர், இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் மனம்போன போக்கில் கிறுக்கிவைத்துள்ளார் என்பதுதான் பெரிய கொடுமை.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டம், மற்ற எல்லாச் சட்டங்களையும்போல மாற்றத்திற்குரியதுதான்; இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தபால்காரர்[Postman] என்பதற்கு மேலாக வேறொன்றுமில்லை. நபியவர்களின் பரப்புரை எல்லாம் அரபுகளுக்கு மட்டுமே உரியவை.
திருக்குர்ஆனில் எங்கெல்லாம் குல்’ (நபியே, கூறுவீராக) என்று வருகிறதோ அங்கெல்லாம் அச்சொல்லை அகற்றிவிட வேண்டும். நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட இதுபோன்ற சொற்கள், நபியவர்களின் மறைவுக்குப் பிறகு அவசியமற்றவை -இதுவெல்லாம் கதாஃபியின் உளறல்களில் அடங்கும்.
இஸ்லாத்தின் எதிரி
உங்களைப் போன்று நான் வெளிப்படையாகத் தொழுகையை நிறைவேற்றமாட்டேன் என்று சொன்ன கதாஃபி, முழங்கால்களை இதைவிட அதிகமாகத் தாழ்த்தக் கூடாது என்று மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளார்கள் என்றார்.
அஸ்ர் தொழுகையை மாற்ற வேண்டும்; மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளில் சப்தமிட்டு குர்ஆன் ஓதமாட்டேன். உங்களுடன் அதிக நேரம் பேசுவதால், அத்தொழுகைகளில் குரலெழுப்பி என்னால் ஓத முடியாது.
பகல் முழுக்க நோன்பு நோற்பது பேரிழப்பாகும். அது ஒரு வேதனை. இதில் சந்தேகமே இல்லை. நோன்பு சுகமான ஒன்று என யார் கூறுவார்? நோன்பு நோற்க வேண்டிய தேவை என்ன? சிரமமான, பிடிக்காத ஒரு தேவையே நோன்பு.
புனித கஅபா ஆலயம் இறுதிக் காலம்வரை இருக்கும் கடைசி விக்கிரகம். கஅபாவையும் ஸஃபா - மர்வாவையும் சுற்றிவருவதும் அரஃபாத் மலைமீது ஏறுவதும் சாதாரணமான ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான்! இதுபோன்ற வழிபாடுகளையெல்லாம் அல்லாஹ் விரும்புவதில்லை.
ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு நீங்கள் கல் எறிகிறீர்கள். முறைப்படி பார்த்தால் பாலஸ்தீனில் யூதர்களை நோக்கியே கல் எறிய வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் ஏழு கற்களை எடுத்துக்கொண்டு, பாலஸ்தீனம் செல்வதுதான் உண்மையான அறப்போர்; கல்லெறிதல். ஒரு சிலைமீது கல் எறிவதால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? (பிற்காலத்தில் இஸ்ரேலின் நண்பராக கதாஃபி மாறியது தனிக் கதை.)
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எந்தப் புனிதத்துவமும் கிடையாது. பெண்கள் ஹிஜாப் (பர்தா) அணிவது கடமையல்ல; முதல் பெண்மணி ஹவ்வாவை எப்படிப் படைத்தான் இறைவன்? அவரிடம் என்ன ஆடை இருந்தது? இதுதான் இயற்கை. இவ்வாறுதான் அல்லாஹ் நம்மை ஆரம்பத்தில் படைத்தான். ஷைத்தானால்தான் மனிதன் ஆடை அணிந்தான். ஹிஜாபே ஷைத்தானால் வந்ததுதான்.
பலதாரமணத்திற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவே இல்லை. இரண்டு அல்லது நான்கு திருமணம் செய்துகொள்வது குர்ஆனில் இல்லவே இல்லை.
இப்படி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராக ஏராளமான புரட்டுகளை எழுதியவரும் பிரசாரம் செய்தவரும்தான் கதாஃபி.
நபிமார்களையும் தோழர்களையும் திட்டியவர்
நபி யஅகூப் (அலை) அவர்கள் குறித்து கதாஃபி எழுதும்போது, ‘‘அவரும் அவர் குடும்பத்தாரும் மிகவும் மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்று அபாண்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபித்தோழர்கள், குறிப்பாக நேர்வழி கலீஃபாக்களை ஏசுகின்ற கதாஃபி, நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வந்த கலீஃபாக்களைவிட்டு விலகியவர்கள் என்று புளுகுகிறார். அலீ (ரலி) அவர்கள், இறைத்தூதரின் கலீஃபா என்றால், அவரது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் பாதிப்பேர் அவரை ஏன் எதிர்த்தனர்? அவருக்குப்பின் அவருடைய மக்களை ஏன் கொன்றனர்?
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி புரியவே தகுதியில்லாதவர்; அவர் அரிஸ்டாட்டில் கொள்கையைப் பின்பற்றியவர்; உறவினர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து இடைத்தரகர்களை உருவாக்கினார். இறுதியில் அவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார் என்று கடுமையாக விமர்சிக்கிறார் கதாஃபி.
மிஅராஜ்என்று ஒன்று நடக்கவே இல்லை; இதுவெல்லாம் கற்பனை; குர்ஆனில் இதற்கு இடமில்லை. குறிப்பாக, ‘புராக்என்பது சுத்தப் பொய்; அப்படி ஒன்று இல்லவே இல்லை. மிஅராஜ் நடந்திருந்தால், ‘அப்பெயர்நிச்சயம் குர்ஆனில் இடம்பெற்றிருக்கும்.
ஷெய்க் அப்துல்லாஹ் பின் பாஸ்
இக்வானுல் முஸ்லிமீன் பெரியவர்களை மதம் மாறியவர்கள்; பேன் பிடித்த தாடிக்காரர்கள் என்றெல்லாம் கதாஃபி ஏசுகிறார்.
மேற்சொன்ன வரிகள் கதாஃபியின் பச்சைப் புத்தகத்திலும் அவருடைய உரைகளிலும் வெளிப்பட்ட, இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துகளாகும்.
கதாஃபியின் இத்தகு கருத்துகள் இஸ்லாத்திற்குப் புறம்பானவை என மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் முன்பே தீர்ப்பளித்துள்ளார்கள். சஊதி உலமாக்கள் அமைப்பும் கதாஃபியைக் கண்டித்துள்ளது.
உலக இஸ்லாமிய மையம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) 27 ஆண்டுகளுக்கு முன்பே கதாஃபிக்கு எதிராக ஒரு நூலை வெளியிட்டது. கதாஃபியின் அவதூறுகளும் தக்க பதில்களும்என்பது நூலின் பெயர். ‘‘முஅம்மர் கதாஃபி எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டார்; இஸ்லாத்தின் கொள்கை, நம்பிக்கை, சட்டம், வாழ்க்கை நெறி அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துவிட்டார்’’ என்பதே நூலின் முதல் பக்க வாசகமாகும்.

இஸ்ரேலின் நண்பர்
ஹிஜ்ரீ காலண்டரை நீக்கிவிட்டு, லிபியாவுக்கென புதியதொரு காலண்டரை கதாஃபி உருவாக்கினார். அது நபி (ஸல்) அவர்களின் இறப்பிலிருந்து தொடங்குகிறது. பெண்கள் இல்லங்களில்தான் இருக்க வேண்டும் என்று பச்சைப் புத்தகத்தில் எழுதிவிட்டு, ஆண்களைவிடப் பெண்களையே எப்போதும் தம்முடன் வைத்திருப்பார் கதாஃபி. கடந்த ஆண்டு இத்தாலி சென்றிருந்தபோது அழகிகளுடன் தங்கிய அவர், அழகிகளுக்கு இஸ்லாமியப் பிரசாரம் செய்கிறேன் என்றார்.
எகிப்தின் ஹசனீ முபாரக்கைப் போன்றே லிபியாவின் முஅம்மர் கதாஃபியும் இஸ்ரேலின் இனிய நண்பர்களில் ஒருவராவார். இதனால்தான் இஸ்ரேலையும் ஃபாலஸ்தீனையும் இணைத்து இஸ்ராதீனம்எனும் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று கதாஃபி கருத்துத் தெரிவித்தார்.
கடந்த 42 ஆண்டுகளாக கதாஃபியின் கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துப் பொறுத்து பொறுமை இழந்துவிட்ட லிபிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கதாஃபிக்கெதிராகப் போர் முரசு கொட்டத் தொடங்கி, இறுதியாகச் சுட்டுக்கொன்றுவிட்டனர். அல்லாஹ்வே மிகப் பெரியவன்.

நன்றி: அல்முஜ்தமா, (குவைத் அரபி வார இதழ்)
http://magmj.com/index.jsp?version=107&archive=true

5 comments:

  1. அஸ்ஸலமு அலைக்கும்
    ஹழ்ரத் தாங்கள் எழுதிய முஅம்மர் கதாஃபியின் மறுபக்கம் படித்தேன் மிகவும்
    அழகாக கொஞ்சம் ஆழமாகவே இருந்தது.தாங்கள் எதிலிருந்து இந்த மறுபக்கத்தை
    எடுத்தீர்கள்?மேலும் அவரின் கிரீன் புக்,மற்றும் கதாஃபியின் அவதூறுகளும் தக்க பதில்களும்’
    என்ற நூலின் முகவரியையும் இணைத்திருந்தால் எங்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
    ஏன்னென்றால் இது ஒரு மதனின் ஈமான் சம்பத்தப் பட்டது.அவர் நல்லவராக இருப்பின்
    அவரின் நன்மையைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்கலாம்.அவர் தீயவர் என்றால் ஆதாரமில்லாமல்
    அவைப் பற்றி பிறரிடம் கூறக்கூடாதல்லவா!தாங்களின் கட்டுரை உலகின் மூல முடுக்கெல்லாம்
    செல்லக்கூடியது.நிச்சயம் நீங்கள் ஆதரில்லாமல் எழுதமாட்டீர்கள்.ஆனால் நான் பிறருக்கு அனுப்பும்
    போது என்னிடம் ஆதாரம் கேட்பார்கள்.அதனால் தான் கேட்கிறேன்.
    வஸ்ஸலாம்
    shamsudeen79@gmail.com

    ReplyDelete
  2. அன்புச் சகோதரர் ஷம்சுத்தீன் அவர்களுக்கு...

    வ அலைக்குமுஸ் ஸலாம்

    “முஅம்மர் கதாஃபியின் மறுபக்கம்” வலைதளக் கட்டுரையின் தகவல்கள், குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ வார இதழிலிலிருந்து கையாளப்பட்டது. அதன் இணைப்பை இத்துடன் கொடுத்துள்ளேன். சொடுக்கிக் காணவும்.

    கருத்துகளுக்கு ஜஸாக்குமுல்லாஹு கைரா

    http://magmj.com/index.jsp?version=107&archive=true

    http://magmj.com/index.jsp?inc=5&id=8075&pid=1977&version=115

    Moulavi, A. Mohamed Khan Baqavi
    +91 94441 60082

    ReplyDelete
  3. as saalaamualykum wa rahamahatulAllah Dear Brother, I read your article about Gaddafi. Is this just a translation of "Al-Mujthama" or it is your own creation?
    ws salaamualykum
    mailjunaidh@gmail.com

    ReplyDelete
  4. 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் பிரிட்டிஷ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற கடாபி சோஷலிச அரபு தேசியவாத நாயகனாக திகழ்ந்தார்.கடாபியின் சோஷலிச சிந்தனை இஸ்லாமிய சட்டங்களை பகிரங்கமாக துணிந்து குறை கூறும் அளவிற்கு இருந்தது. ஹதீஸ்கள் தொடர்பான கடாபியின் நிராகரிப்பு கொள்கை முஸ்லிம்களை கொந்தளிக்க வைத்தது. 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரிபோலி நகரிலுள்ள மவுலை முஹம்மது ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற்ற 100 வது குர்ஆன் ஓதுதல் நிறைவு நிகழ்ச்சியில் கடாபி ஹதீஸ்களை வெளிப்படையாகவே விமர்சித்தார்.நபி அவர்கள் மறைந்து 200 ஆண்டுகள் கழித்து ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டிருப்பதால் அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருப்பதாகவும் அவற்றை அறவே ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன்னுடைய ஹதீஸ் நிராகரிப்பு கொள்கையை பிரகடனப்படுத்தினார்.

    கடாபியின் அறிவிப்பு முஸ்லிம்களை அதிர்ச்சியடைய செய்தாலும், அவரை எதிர்க்க பலரும் அஞ்சினர். இந்நிலையில் ஹிஸ்புத்தஹ்ரீரின் 13 பிரதிநிதிகள் கடாபியிடம் சென்றனர். இவர்கள் கடாபியை நேரடியாக சந்தித்து ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை அழகிய முறையில் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கடாபி தன்னுடைய ஹதீஸ் மறுப்பு கொள்கையிலும்,குப்ர் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தார். எனவே மக்கள் மத்தியில் இந்த விசயங்களை பிரசுரங்களாக ஹிஸ்புத்தஹ்ரீர் விநியோகித்தது. இதனால் சீற்றமடைந்த கடாபி,ஹிஸ்புத்தஹ்ரீர் அனுப்பியிருந்த அந்த 13 சஹோதரர்களை, அவர்களின் பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில் கொடூரமான முறையில் தூக்கிலிட உத்தரவிட்டார். இரும்பு கொக்கிகளை கண்களில் மாட்டி, சக மாணவர்கள்,ஆசிரியர்கள், குடும்பத்தார் முன்னிலையில் கொடூரமாக கம்பத்தில் ஏற்றி கொன்றார். அவர்களில் ஒருவர் மரணிக்கவில்லை என்பதை அறிந்தபோது இரண்டாவது முறையாக அவரை தூக்கிலேற்றி பின்னர் இராணுவ வாகனத்தில் கட்டியிழுத்து அவருடைய குடும்பத்தார் முன்னிலையில் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டார்.

    கடாபி தன்னை எதிர்ப்பவர்களை பகிரங்கமாக கொன்றொழிப்பதில் இன்பம் கண்டு வந்தார்.
    இத்தகைய இஸ்லாமிய விரோதியான கடாபியின் ஆட்சி காலத்தில் லிபியாவில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டது என்பதற்காக கடாபியை ஆதரிக்க முடியுமா? லிபிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான வசதிகளை கடாபி ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதற்காக கடாபி அரங்கேற்றிய கொடூர செயல்களை மறந்து விட முடியுமா? அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததற்காக கடாபியை ஆதரிக்க முடியும் என்றால், ஆப்கானிஸ்தானில் சில உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவை ஆதரிக்கவேண்டி வருமே? இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோதுஅணைக்கட்டுகள், பாலங்கள், சாலை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தார்கள் அல்லவா! அப்படியிருந்தும் மக்கள் ஏன் அவர்களை எதித்தார்கள்?

    அமெரிக்காவிற்கு எதிராக இறுதி நேரத்தில் பேசினார் என்பதற்காக,அவரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று கூறி விட முடியுமா? தான் கைவிடப்பட்டதன் விளைவாக எழுந்த குரல் அல்லவா அது!லிபியாவில் மக்கள் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை அவரோடு மேற்குலகினர் நெருக்கமாகத்தானே இருந்தார்கள்! தன் ஆட்சிகாலம் முழுவதும் தங்களுக்கு விசுவாசியாக இருந்த கடாபியைக்கொண்டு இனி பலன் ஏதும் இல்லை;அவர் தூக்கி எறியப்படுவது நிச்சயம் என்பதை உணர்ந்தபோது இறுதி நேரத்தில் கழற்றி விடப்பட்டார் அல்லவா?இதே கதிதானே சதாம் ஹுசைனுக்கும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட முடியுமா? மேற்குலகைப் பொறுத்தவரை தங்களுக்கு பலன் கிடைப்பது வரை முஸ்லிம் ஆட்சியாளர்களை தக்க வைத்திருப்பார்கள்.அதற்கு பாதகம் ஏற்படப் போவதாக அறிந்து விட்டாலே அவர்களை தூக்கி எறிந்துவிட்டு மற்றொரு ஏஜண்டை நியமிப்பார்கள். அவர்களை தூக்கி ஏறிய முடியவில்லை என்றால் கொலையும் செய்து விடுவார்கள். இதுதான் மேற்குலகின் கொள்கையாகும். சதாம் ஹுசைன், கடாபி, முஷாரப் ,பின் அலி, முபாரக்,....போன்றவர்கள் எப்பொழுதுமே மேற்குலகின் அடிமைகளாக திகழ்ந்து வந்தார்கள். முஸ்லிம் உலகின் தற்போதைய ஆட்சியாளர்களும் இந்த வரிசையில் உள்ளவர்களே.இவர்கள் நிச்சயமாக தூக்கி எறியப்பட வேண்டியவர்களே.முஸ்லிம் உலகில் நடைபெற்று வரும் எழுச்சிமிகு போராட்டங்கள் கிலாபத்திற்கான மீள்வருகையை பறைசாற்றி வருகிறது.

    எனவே அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு ஆட்சி செய்யாமல், மேற்குலகின் விசுவாசியாக திகழ்ந்த கடாபிக்காக வருந்துவது, கடாபியால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டுஇஸ்லாத்தின் பாதையில் ஷஹீதானவர்களை அவமதிப்பது போன்றதாகும் என்பதை நம் சகோதரர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

    கடாபிக்கு ஏற்பட்ட இழிவான மரணம் அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு ஆட்சிசெய்ய மறுக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும்,அவர்களை தாங்கிப்பிடிப்பவர்களுக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும். கடாபியின் சரிவு லிபியாவிற்கு நல்ல ஆரம்பமாகும்.

    ReplyDelete
  5. அப்புறம் ஏன் இண்டராக்டிவ், வலைப்பதிவு அவர்களை வாழ்த்த வேண்டும். நான் இந்த வரலாற்று கணக்குகள் மூலம் நாட்டை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆதரவு அணைத்துக்கொள்கிறார் மற்றும் பிரேசில் பெறும். http://novajerusalemdecristo.blogspot.com/

    ReplyDelete