பிரிட்டன் குழந்தைகளில் 10% முஸ்லிம்கள்
பி
|
ரிட்டன் ‘டைம்ஸ்’ ஏடு அண்மையில் அதிகாரப்பூரவ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளில் 10 விழுக்காட்டினர் முஸ்லிம் குழந்தைகள் ஆவர் என்கிறது அந்த அறிக்கை. தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்ட அந்த அறிக்கை மேலும் கூறுவதாவது:
ஐந்து வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 17 ஆயிரத்து 952 குழந்தைகள், ‘முஸ்லிம்கள்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனின் மொத்தக் குழந்தைகளில் இவர்கள் 9.1 விழுக்காடு ஆவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் பிறப்பு – இறப்பு துறைப் பேராசிரியர் டேவிட் கோல்மேன், “உயர்ந்துவரும் இந்த எண்ணிக்கை, முஸ்லிம் நாடுகளிலிருந்து நீண்டகாலமாக நடந்துவரும் குடியேற்றத்தைக் காட்டுகிறது” என்று சொன்னார்.
பிரிட்டனில் மதங்களில் முதலிடம் வகிப்பது கிறிஸ்தவம். அடுத்த இடத்தைப் பெற்றிருப்பது இஸ்லாம். அடுத்து இந்துக்கள் (1.6%) சீக்கியர்கள் (0.8%), யூதர்கள் (0.5%), புத்தர்கள் (0.3%) பட்டியலில் உள்ளனர். ‘மதம் சாராதோர்’ (Unreligion) என்ற பெயரில் 11,93,614 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 34.1 விழுக்காடு. மதம் குறிப்பிடாத குழந்தைகள் 9.6 விழுக்காடு.
இதற்கிடையே, பிரிட்டன் ராணியின் மதிப்புமிக்க பரிசுக்கு ஒரு முஸ்லிம் பெண் போலீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நைகீ ஹாபர்ட் என்பது அவரது பெயர். பிரிட்டன் முஸ்லிம்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கண்ணியமாகும் இது என்று நைகீ குறிப்பிட்டிருக்கிறார்.
2006ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர், சட்டஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாண்ட விதம், சமூக நல்லிணக்கத்திற்காக ஆற்றிய பணி, குடும்ப வன்முறைகளை ஒழிக்க எடுத்த நடவடிக்கை… எனப் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
இன்னொருபக்கம், பிரிட்டனில் ‘டவர்ஹோம்லட்’ நகர்மன்றம், முஸ்லிம் குடும்பங்களில் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இஸ்லாமிய சமூக ஆர்வலர்கள் இதைப் பெரிய முன்னேற்றமாகக் கருதுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக டவர்ஹோம்லட் முஸ்லிம்களுக்காக வங்காள மொழியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டினர் 30 பேர் இஸ்லாத்தில்
க
|
டந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி (10.1.2014)
வெள்ளிக்கிழமை மதீனா நகரில் ஈமானிய உணர்வுப்பூர்வமான ஒரு நிகழ்ச்சி. மார்க்க அறிஞர்கள், மாணவர்கள், நகரப் பெரியவர்கள் குழுமியிருந்த அந்நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த 30 பேர் திருக்கலிமா மொழிந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
புனித நபவீ பள்ளிவாசலின் இமாம் ஷைகு அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்ஹுதைஃபீ, பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் ஷைகு முஹம்மத் அப்பாஸ் நதீம், நபவீ பள்ளிவாசலின் தொழுகை அறிவிப்பாளரும் (முஅத்தின்) மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் இயாத் ஷுக்ரீ முதலானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஷைகு முஹம்மத் அப்பாஸ் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையில், பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். அடுத்து வாழ்த்துரை வழங்கிய டாக்டர் இயாத் ஷுக்ரீ அவர்கள், ‘இக்லாஸ்’ (குல் ஹுவல்லாஹ்) அத்தியாயத்தின் விரிவுரை வழங்கினார்.
இறுதியாகப் பேசிய இமாம் ஷைகு ஹுதைஃபீ அவர்கள், இஸ்லாத்தின் மேன்மை, அதை ஏற்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தினார். பிறகு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் ஒவ்வொருவராக வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தனர். தொடர்ந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ளப்போவதாகவும் ‘உம்ரா’ வழிபாட்டை நிறைவேற்ற இருப்பதாகவும் புதிய சகோதரர்கள் அறிவித்தனர்.
ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடையே
பரவும் இஸ்லாம்
ஆ
|
ஸ்திரேலியா நாட்டின் சமய-பண்பாட்டுத் துறைப் பேராசிரியர் ஆடம் போஸோமாய் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடி மக்களிடையே இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. 2002 – 2006ஆம் ஆண்டுகளில் 600 முதல் 1000பேர் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். இதற்குக் காரணம் உண்டு. ஆஸ்திரேலியர்களில் கணிசமானோரின் பூர்வீகம் இந்தோனேசியா ஆகும். இவர்களின் முன்னோர்கள் இந்தோனிசியாவிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்தவர்கள். அத்தோடு ஆப்கானிஸ்தான் வணிகர்கள் பலரும் இவ்வாறு அங்கே குடியேறியுள்ளனர்.
எனவே, மூதாதையர்களின் மார்க்கத்தை நோக்கி பழங்குடியினர் படையெடுக்கின்றனர். புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஆதம் என்பவர் கூறுகிறார்: பிரிட்டிஷ்காரர்கள் ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்திருந்த காரணத்தால், நான் கிறித்தவத்திலேயே பிறந்து வளர்ந்தவன். ஆனாலும், கிறித்தவச் சடங்குகள் எதையும் நான மேற்கொண்டதில்லை. மேலும், என் கேள்விகளுக்குச் சரியான விடைகளும் கிறித்தவத்தில் கிடைக்கவில்லை.
1770ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் காலனி ஏற்பட்டது முதல், பசிபிக் பெருங்கடலை ஒட்டி வாழ்ந்த பழங்குடி மக்களில் பெரும்பாலோர் கிறித்தவர்களாகவே இருந்தனர். ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கட் தொகையில் 3 விழுக்காட்டினர் பழங்குடியினர் ஆவர். இவர்களுக்கெதிரான இனப் பாகுபாட்டை சர்வதேச மன்னிப்பு நிறுவனம் கண்டித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பெல்ஜியத்தின் தலைநகரில் சர்வதேச திருக்குர்ஆன் மாநாடு
தெ
|
ன்மேற்கு ஜரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சர்வதேச திருக்குர்ஆன் மாநாடு நடைபெறுகிறது. இந்நகரில்தான் நேட்டோவின் தலைமையகம் உண்டு; ஐரோப்பிய யூனியனின் தலைமையகமும் இங்குதான் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. பிரஸ்ஸல்ஸில் உள்ள மேற்கத்திய உலமாக்களுக்கான ஐரோப்பிய மன்றம், திருக்குர்ஆன் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் குர்ஆனைத் திருத்தமாக ஓதுதல், குர்ஆன் உரைகள், குர்ஆன் கூறும் பண்பாட்டுவியல் ஆகிய தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடக்கும். மொராக்கோ, எகிப்து, துருக்கி, ஈரான், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் பிரபல ‘காரி’கள் மாநாட்டில் பங்கெடுக்கின்றனர். சமயம், ஒழுக்கம், கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
ஐரோப்பிய முஸ்லிம்களை குர்ஆன் ஓதுதல், மனனம் செய்தல், பொருள் அறியுதல் ஆகியவற்றில் ஈடுபடுமாறு ஊக்குவிப்பதே மாநாட்டின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், இஸ்லாத்தின் போதனைகள், நற்பண்புகள், மனிதநேயக் கருத்துகள் ஆகியவற்றை அவர்கள் அறிந்து செயல்பட வழியேற்படும்.
ஆண்டுதோறும் நடக்கவுள்ள இம்மாநாடு, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருகைதரும் பிரபலமான ‘காரி’களின் கிராஅத்களை கேட்பதற்கும் குர்ஆனிய சிந்தனைகளை அறிவதற்கும் ஐரோப்பிய முஸ்லிம்களுக்கு அரிய வாய்ப்பாக அமையும்.
இதற்காகத் தலைநகர் பிரஸ்ஸல்ஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், பன்முக சமய, கலாசார விழுமங்களை இந்நகரம் ஏற்றுக்கொண்டிருப்பதுதான். அத்துடன் ஐரோப்பாவிலேயே முஸ்லிம்களின் ஒரு பெரும் தொகையை இந்நகரம் அரவணைத்துக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
http://www.magmj.com/index.jsp?inc=5&id=15289&pid=4366&version=237
ஐரோப்பிய அருங்காட்சியகத்தில்
உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்
பி
|
ரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உலகிலேயே மிகப் பெரிய இரு திருக்குர்ஆன் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இப்பிரதிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இருபெரும் பிரதிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது. மற்றொன்று மங்கோலியாவின் (தாதரிஸ்தான்) பழைமையான பிரதி. இது 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய அருங்காட்சியகங்களை இப்பிரதிகள் அலங்கரிக்க உள்ளன.
ஐந்து மாதங்கள்வரை கண்காட்சியில் நீடிக்கவுள்ள இப்பரதிகளை இலட்சக்கணக்கான ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் ஆப்கன் பிரதி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 218 பக்கங்களைக் கொண்ட இப்பிரதி, 3 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இப்பிரதி ஷைகு மன்சூர் நாதிரீ அவர்களால் எழுதப்பட்டது.
மங்கோலியா பிரதி, உலகிலேயே இரண்டாவது பெரிய திருக்குர்ஆன் பிரதியாகக் கருதப்படுகிறது. இது, மங்கோலியா தலைநகர் உலன்பதோர் (காஸான்) பள்ளிவாசல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது விலையுயர்ந்த குர்ஆன் பிரதி என்கின்றனர். விலை உயர்ந்த கற்களால் இப்பிரதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் ஒன்றரை மீட்டரும் அகலம் இரண்ட மீட்டரும் கொண்டது. 632 பக்கங்கள் கொண்ட இப்பிரதியின் எடை, 800 கி.கி. ஆகும். இப்பிரதி பொன், வெள்ளி ஆகியவற்றால் முலாம் பூசப்பட்டுள்ளது.
http://www.magmj.com/index.jsp?inc=5&id=15293&pid=4366&version=237
அயர்லாந்தில் இஸ்லாமிய நற்பணி
மன்றம் தேர்வு
அ
|
யர்லாந்து நாட்டில், வோடர்போர்டு தொழில்நுட்ப அகாடமியின்கீழ் இயங்கும் இஸ்லாமிய நற்பணி மன்றம் 2013 மே மாதம் நிறுவப்பட்டது. அகாடமியில் உள்ள முஸ்லிம் மாணவர்களின் சேவைக்காக உருவாக்கப்பட்ட இம்மன்றம், 2013ஆம் ஆண்டுக்கான அயர்லாந்தின் சிறந்த தொண்டு நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இஸ்லாமிய நற்பணி மன்றம் விரிவான ஆக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த நவம்பரில் ஏழை மற்றும் அநாதைகளின் நிதி உதவிக்காக முஸ்லிம் மாணவர் மன்றங்களின் ஒத்துழைப்பில் ‘நற்பணி வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டது. இஸ்லாமிய மாணவர் மன்றங்களின் கூட்டமைப்பு, இந்த மன்றத்திற்கு ‘சிறந்த இஸ்லாமிய நற்பணி மன்றம்’ என்ற சிறப்புப் பெயரை கடந்த டிசம்பரில் வழங்கி கௌரவித்தது.
இது தொடர்பாக அயர்லாந்து பத்திரிகையான ‘இண்டிபென்டென்ட்’ எழுதியிருப்பதாவது: 2043வாக்கில் அயர்லாந்தில் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாமே விளங்கப்போகிறது. குடியேற்றமும் இங்குள்ள முஸ்லிம்களின எண்ணிக்கை விகிதம் உயர்ந்திருப்பதுமே இதற்குக் காரணமாகும்.
நாட்டிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று எழுப்பும் திட்டத்திற்கு அரசு அனுமதி கிடைத்த சில வாரங்களுக்குப்பின் இந்த அறிக்கை அந்த ஏட்டில் வெளியாகியுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கலோங்கிரிபீன் பகுதியில் இந்தப் பள்ளிவாசல் எழுப்பும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
மோன்டெனெக்ரோ குடியரசு கொடியில் முஸ்லிம்களின் சின்னம்
செ
|
ர்பியர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய கண்டத்திலுள்ள மிகச்சிறிய நாடே மோன்டெனெக்ரோ. இந்நாட்டை ‘கறுப்பு முத்து’ (அரபியில் ‘அல்ஜபலுல் அஸ்வத்’) என்று வர்ணிப்பர். செர்பியாவிலிருந்து பிரிந்து தனி சுதந்திர நாடாக இது விளங்கிவருகிறது. இந்நாட்டின் நாடாளுமன்ற துணைத் தலைவர் சுலைமான் முஸ்தஃபா, தம் நாட்டின் தேசியக் கொடியில் எல்லா சமய மற்றும் சமூகங்களின் சின்னங்கள் இடம்பெறுவது அவசியம் என வலியுறுத்தினார். கிறித்தவச் சின்னம் இடம்பெறுவதைத் தாம் எதிர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
போஸ்னி கட்சியின் தலைவராகவும் இருக்கும் முஸ்தபா, அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மோன்டெனெக்ரோ குடியரசில் வாழும் முஸ்லிம்கள்தான் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் ஆவர். இந்நாட்டை உருவாக்குவதில் பல நூற்றாண்டுகளாக அதிகப் பங்காற்றியவர்களும் முஸ்லிம்களே. சமூகத்தில் அவர்களின் இருப்பு எதார்த்தமானது. இதனால், நம் நாட்டுச் சின்னங்களில் முஸ்லிம்களின் அடையாளமும் இருக்க வேண்டுமென்று கோருகிறோம்.
இதற்காகச் சட்டத் திருத்தம் கொண்டுவருகின்ற அரசியல் ரீதியான ஆர்வம் தேவை. மற்றவற்றை, இந்நாட்டில் அங்கம் வகிக்கும் சமூகத்திடம் விட்டுவிடலாம். மோன்டெனெக்ரோவில் போஸ்னிய முஸ்லிம்களின் நிலையை உயர்த்துவதற்கு நிறைய பாடுபட வேண்டியுள்ளது. மற்றச் சிறுபான்மையினரின் நிலையையும் அவ்வாறே மேம்படுத்த வேண்டும்.
மோன்டெனெக்ரோ அரசர் நைஜோஷ் பிறந்த நாளை விடுமுறையுடன்கூடிய தேசிய தினமாக அறிவிப்பதை முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள். அது அவசியமும் அல்ல –என்று கூறினார்.
No comments:
Post a Comment