Tuesday, February 17, 2015

பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?


தமிழில்: கான் பாகவி

டெ
ய்லி போஸ்ட் எனும் லண்டன் நாளேட்டில் தியான் உபைதுல்லாஹ் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். ‘பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களா?’ என்பதே கட்டுரையின் தலைப்பு. “எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லைஎன்ற சுலோகத்தைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இதையேபயங்கரவாதிகள் எல்லாரும் முஸ்லிம்களா?’ என்று மாற்றி யோசித்தால், உண்மைகள் பல வெளிச்சத்திற்கு வரும் என்கிறார் தியான்.


இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதிகள், யூத பயங்கரவாதிகள், பௌத்த பயங்கரவாதிகள் இல்லையா? (இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.) முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயலுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டா? என விவாதிக்க உலக முஸ்லிம்கள் தயார். உண்மையில் இவர்கள் அரசியல் பயங்கரவாதிகள்; ஆனால், முஸ்லிம்களாக இருக்கின்றனர். அவ்வளவுதான்!

அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பயங்கரவாத மோதல்களில் பெரும்பாலானவற்றுக்கும் முஸ்லிம்களுக்கம் தொடர்பில்லை. இது நமக்குத் தெரிவதில்லையே என்று அப்பாவித்தனமாகக் கேட்காதீர்கள்! எல்லாம் செய்தி ஊடகங்களின் உபயம்!

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களால் நடந்ததாகச் சொல்லப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள், மொத்த பயங்கரவாதத் தாக்குதல்களில் வெறும் 2 சதவீதமே! ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பிலுள்ள ஐரோப்பிய இன்டர்போல் வெளியிட்டுள்ள கடந்த ஆண்டுக்கான அறிக்கையைப் பாருங்கள்:

ஐரோப்பாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் பெரும்பாலானவை பிரிவினைவாதக் குழுக்களால் நிகழ்ந்தவைதான். எடுத்துக்காட்டாக 2013ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை – 152. இவற்றில் 2 மட்டுமே மத ரீதியிலானவை. 84 சம்பவங்கள் இன மற்றும் பிரிவினைவாத தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை ஆகும்.

ஃபிரான்சில் இயங்கும் FLNC எனும் பிரிவினைவாத இயக்கம்கோர்ஸிகாதீவைத் தனிநாடாகப் பிரிக்கச் சொல்கிறது. 2013 டிசம்பரில் FLNC தீவிரவாதிகள், ஃபிரான்சில் உள்ள இரு நகரங்களின் காவல் நிலையங்கள்மீது ராக்கெட் தாக்குதல் தொடுத்தனர். ஜெர்மனியில் 2013 இறுதியில், வலதுசாரி அரசியல் கட்சி உறுப்பினர்கள் இருவரை, இடதுசாரி மக்கள் புரட்சிப் படையினர் கொன்றனர். இத்தாலியில் FAI குழு பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டது. ஒரு பத்திரிகையாளர்மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அவற்றில் அடங்கும்.

பட்டியல் நீள்கிறது. ஆனால், யாரும் இதைகிறிஸ்தவ அடிப்படை பயங்கரவாதம்என்று சொன்னதுண்டா? இந்த்த் தாக்குதல்களை முஸ்லிம்கள் யாராவது செய்திருந்தால், இந்த அளவுக்கு ஊடகங்கள் மூடி மறைத்திருக்குமா? 2011ல் ஐரோப்பாவில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடந்த்து. ‘கிறிஸ்தவ ஐரோப்பாஎன்ற அமைப்புக்கு ஆதரவாக இன்டர்ஸ் பிரிஃபேக் எனும் பயங்கரவாத அமைப்பு நார்வேயில் 77 பேரின் கழுத்தை அறுத்துக் கொன்றது. முஸ்லிம்களுக்கும் குடியேறிகளுக்கும் எதிரான படைகளுக்கு உதவும் வகையில் நடந்த்தே இப்படுகொலைகளாகும்.

அமெரிக்க ஏடுகள் இந்த விவகாரத்தை ஒரேயடியாக மூடி மறைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஒரு வகையில் மறைக்கும் வேலை நடக்கவே செய்தது. ஒரு முஸ்லிம் பயங்கரவாதியாக இருந்தால் எப்படியெல்லாம் கற்பனைகளைக் கலந்து வெளிச்சம் போட்டுக்காட்டுவார்களோ, அப்படி இதை வெளியிட்டார்களா? பயங்கரவாதச் செயல்கள் பற்றிய தகவல்களைத் தரும் செய்தியாளர்கள் ஒளிபரப்பு நேரத்தில் எங்கே போனார்கள்? எதிர்காலத்தில் கிறிஸ்தவப் பயங்கரவாதிகளை எப்படி ஒடுக்குவது என்று கேள்வி கேட்க அங்கு யாரும் இல்லையே! ஏன்?

பௌத்த, யூத பயங்கரவாதம்

புத்த பயங்கரவாதிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? புத்தமத தீவிரவாதிகள் பர்மாவில் (மியான்மர்) ஆயிரக்கணக்கான முஸ்லிம் சிவிலியன்களைப் படுகொலை செய்தனர். சில மாதங்களுக்குமுன் இலங்கையில் 4 முஸ்லிம்களைக் கொன்றதுடன் முஸ்லிம்களின் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினார்கள். அப்போதெல்லாம் புத்த பயங்கரவாதிகள் என்று யாரும் சொன்னார்களா?

ஏன், யூத பயங்கரவாதிகள் மட்டும் என்ன? 2013ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட பயங்கரவாதம் குறித்த அறிக்கையைப் பாருங்கள்: இஸ்ரேல் குடிமக்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்கள் 399. இந்த யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீன சிவிலியன்கள்மீது தொடுத்த பயங்கரவாதத் தாக்குதலில் 93பேர் படுகாயம் அடைந்தனர். பல பள்ளிவாசல்களும் கிறித்தவ தேவாலயங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போதெல்லாம் யூத பயங்கரவாதிகள் என்று யாரும் குறிப்பிட்டதுண்டா?

சுதந்திரம், ஜனநாயகம் என்று எப்போது பார்த்தாலும் குரலெழுப்பும் அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறது? அமெரிக்காவில் முஸ்லிம்கள் நடத்திய தீவிரவாத்த் தாக்குதல்கள்ஐரோப்பாவைப் போன்றேமிக மிக்க் குறைவு. 1980 – 2005 ஆகிய ஆண்டுகளுக்கிடையே அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கூட்டாய்வு அலுவலகம் (FBI) நடத்திய ஆய்வின் முடிவு என்ன தெரியுமா?

அமெரிக்க நிலத்தில் நடந்த பயங்கரவாதச் சம்பவங்களில் 94 விழுக்காடு முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்பட்டதாகும். லத்தீன்களோடு தொடர்புள்ள குழுக்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் 42 சதவீதமாகும். அவற்றில் 24 சதவீதம் தீவிரவாத இடதுசாரிக் குழுக்களால் நடத்தப்பட்டதாகும்.

2014ல் வடக்கு கரோலினா மாநிலத்தின் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் காணப்படுவதாவது: செப்டம்பர் 11 தாக்குதல் உள்பட முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதாக்க் கூறப்பட்ட தாக்குதல்களில் 37 அமெரிக்கர்கள் மட்டுமே பலியானார்கள். அதே காலகட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 1,90,000 அமெரிக்கள் கொல்லப்பட்டனர்.

2013ஆம் ஆண்டு முடிவில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கர்களில் கணிசமானோர் சிறுவர்கள் கரத்தால் கொல்லப்பட்டவர்களே!

புள்ளிவிவரம்


 

  

ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு விவரங்கள் 

அடங்கிய பட்டியல்




 (அல்முஜ்தமா)

http://mugtama.com/translations/item/14478

No comments:

Post a Comment