Wednesday, November 15, 2017

 بسم الله الرحمن الرحيم
# الدرس الرابع #
@,الحصة الثالثة @
-----------------------------------------

**** التمرين في ترجمة المقالة العربية بالتميلية ****
( المبتدأ والخبر )
-----------------------------------------


٪٪٪  الاسلام دين المساواة ٪

( من مجلة المنار )

  ان أخوة الاسلام فوق جميع الاعتبارات ، تتجلى صورها في وحدة الهدف وتتجسد في المحبة والتعاطف والاحساس بالمسؤلية تجاه كل مسلم .

والمجتع المسلم لا يعرف الفوارق ولا يميل الى الاتجاهات المعاكسة. والحقوق فيه متساوية ، ولا يزكي المجتمع المسلم رجلا أو امرأة بالمال والنسب ولا اللون ، وانما يزكي العامل لدينه ودنياه ، المتحلي بالأخلاق الحميدة .

ونظرته للمرأة كنظرته الرجل  لقوله تعالى : ولهن مثل الذي عليهن بالمعروف . أي في الحقوق والواجبات .كما أن الاسلام أباح للمرأة حرية الرأي وحرية العمل في مجال اختصاصها و المساواة في حقوقها . اضافة الى أن الاسلام يجيز أن يتولى المسلم المناصب الحساسة اذا كان مؤهلا علميا لذلك ، بقطع النظر عن النسب و اللون و الفوارق الاقليمية .

وأرض الاسلام وطن لكل مسلم . وخرج النبي صلى الله عليه وسلم ذات يوم والمسلمون يتحدثون في الأنساب ، قال : ان أنسابكم هذه أنساب لا صلة لها ، كلكم أبناء رجل واحد طف الصاع لم تملؤوه ، لا فضل لأحد منكم على الاخر الا بالتقوى أو عمل صالح ، كلكم لادم و ادم من تراب .

و الاسلام يقدم المسلم حسب ما قدم لدينه ولاخوانه وعامة شعبه .

# الملاحظة #
ان في كل مقالة تذكر في دروسنا لشواهد خلال العبارات والتراكيب حسب القوانين اللغوية المبينة في الدرس ، عليكم أخذها في الاعتبارات.

*** ترجموا أيها الأعزة المقالة العربية المنقولة في الدرس بدون خطأ ما استطعتم لأنها ابتداء للتدريب على الترجمة .ان اعتنيتم بها لتتقدمتم فيها ان شاء الله .

( ان شاء الله )
# الترجمة الصحيحة للمقالة العربية من التمرين السابق #
====================

+++ சமத்துவ மார்க்கம் இஸ்லாம் +++
( மனாருல் இஸ்லாம் -  மாத இதழ்)

₹ இஸ்லாமியச் சகோதரத்துவம் என்பது, நிச்சயமாக எல்லாக் கணிப்புகளுக்கும் மேலான ஒன்றாகும். ஒருமை இலக்கில் அதன் வடிவங்கள் வெளிப்படும். அன்பு, பரஸ்பர பரிவு, ஒவ்வொரு முஸ்லிமையும் நோக்கிய பொறுப்புணர்வு ஆகியவற்றில் அது உருப்பெறுகிறது.
         
முஸ்லிம் சமூகம், பிரிவினைகளை அறியாது; எதிர்மறை அணுகுமுறைகளை ஏற்காது. அதில் உரிமைகள் சமம். ஓர் ஆணையோ பெண்ணையோ பணம், பாரம்பரியம், நிறம் ஆகியவற்றைக் கொண்டு முஸ்லிம் சமூகம் புனிதப்படுத்தாது. நற்குணங்கள் பூண்டு, தம் மார்க்கத்திற்காகவும் இம்மைக்காகவும் யார் செயல்படுவாரோ அவரையே தூய்மையாளராகப் பார்க்கும். பெண் குறித்த அதன் பார்வை, ஆண் குறித்த பார்வை போன்றதே. அல்லாஹ் கூறுகின்றான் : அப்பெண்கள்மீது கடமைகள் இருப்பதைப் போன்றே, நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. ( 2:228)
ஆக, உரிமைகளிலும் கடமைகளிலும் சமத்துவம். அவ்வாறே, பெண்ணுக்குக் கருத்துச் சுதந்திரம் அளித்துள்ளது இஸ்லாம். அவளுக்கே உரிய சிறப்புத் தளங்களில் அவள் பணிபுரியும் உரிமையும் அது வழங்குகிறது. அவள் உரிமைகளில் சமத்துவமும் வழங்குகிறது.

ஒரு முஸ்லிம், உணர்வுபூர்வமான பதவிகள் வகிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால், அதற்கான கல் வித் தகுதி உடையவராக அவர் இருக்க வேண்டும். அங்கும் பரம்பரை, நிறம், பிரிவினைகள், வட்டாரம் ஆகிய பாகுபாடுகளை அது கவனிக்காது.

இஸ்லாமிய மண், ஒவ்வொரு முஸ்லிமுக்குமான தேசமாகும்.  ஒருநாள் நபி ( ஸல்)  அவர்கள் வெளியே வந்தார்கள். அங்கே முஸ்லிம்கள் வமிசாவளிகள் குறித்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபிகளார் கூறினார்கள் :
உங்களுடைய இந்த வமிசங்கள் எல்லாம், எந்த ஒட்டும் இல்லாதவையாகும். நீங்கள் அனைவரும் ஒரே மனிதரின் பிள்ளைகள் ; நிரப்பாத மரக்காலின் மிச்சங்கள். உங்களில் ஒருவருக்கு மற்றொருவரைவிட இறையச்சம் மற்றும் நற்செயல் கொண்டே சிறப்பு உள்ளது. அனைவரும் ஆதமுக்கு ( பிள்ளைகள்). ஆதமோ மண்ணிலிருந்து வந்தவர்.

ஆக,  ஒரு முஸ்லிம், தன் சமயத்திற்கும் சகோதரர்களுக்கும் முன்வைப்பதைப் பொறுத்தே இஸ்லாம் அவரை முன்னிலைப்படுத்தும்.
        ( முற்றும்)

*** الملحوظ ***
أيها الزملاء الاعزة ¡
فضلا قارنوا هذه الترجمة مع أصلها العربي. وخذوا في إعتباركم تقنية المعلومات المتعلقة بالترجمة في كل جملة. هذا فقط درس هذا الأسبوع.
( إن شاء الله)

No comments:

Post a Comment