Friday, February 02, 2018

கார்ப்பரேட் பட்ஜெட்

#கார்ப்பரேட் பட்ஜெட் #
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பைக்  கூட்டாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியில் சலுகை செய்திருக்கிறது பா. ஜ. க. அரசு. ரூ. 250 கோடிக்குள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரியை 25 விழுக்காடு குறைத்துள்ளார் ஜேட்லி.

மத்திய பட்ஜெட்டால் 29 வகை பொருட்களின் விலை உயரப்போகிற நிலையில், 4 பொருட்களின் விலை மட்டுமே குறையுமாம். விலை குறையும் பொருட்களில் கச்சா முந்திரியும் அடக்கம்.

விலை உயரும் பொருட்களில் காய்கறிகள், பற்பசை, காலணிகள், விளக்கு, கைக்கடிகாரம், சிறு பொம்மைகள், நாற்காலி, மெழுகுவர்த்தி, பட்டம் ஆகிய பொருட்களும் அடக்கம். இந்த விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்குமா இல்லையா? இந்த விலைக் குறைப்பு ஏழைகளுக்கு உதவுமா?

குடியரசுத் தலைவர் பழைய சம்பளம் :ரூ. 1.50 லட்சம். புதிய சம்பளம் : ரூ. 5 லட்சம். குடியரசு துனைத் தலைவர் :ப - 1.25 லட்சம், பு - 4 லட்சம். ஆளுநர்கள்  ப- 1.10 லட்சம், பு - 3.5 லட்சம்.

ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் சேர்த்தபின் கவனிப்பு குறைந்துபோனது. ரூ. 1.46ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு ஒதுக்கியிருப்பதோ 53 ஆயிரம் கோடி மட்டுமே. மீதத்தை மாநில அரசு, தனியார் பங்களிப்பு, ரயில்வே துறை பார்த்துக்கொள்ள வேண்டுமாம்! கடந்த பட்ஜெட்டில் ரூ. 55ஆயிரம் கோடி நடுவண் அரசு கொடுக்கும் என்று சொல்லிவிட்டு, கொடுத்தது 40ஆயிரம் கோடி. இதற்கெல்லாம் கணக்கு வழக்கு இருக்கா?

இத்தனைக்கும் தேர்தல் கால பட்ஜெட்டாம் இது! இதுவே இப்படி என்றால், சாதாரண கால பட்ஜெட் எப்படி இருக்கும்? இதற்கு பாராட்டுகள் வேறு!

பாவம்! இவர்களின் அஜண்டாவே வேறு.

No comments:

Post a Comment