Sunday, August 25, 2019

# மொழிபெயர்ப்பில் முதன்மையான அக்கறை எதில் ? #

# மொழிபெயர்ப்பில் முதன்மையான அக்கறை எதில் ? #
**************************
---- வெ. ‌ராம்
0 ஒரு வாக்கியத்தைப் புரிந்து கொள்வதோ கதையைப் புரிந்துகொள்வதோ மட்டும் இலக்கியமல்ல. சொல்லாடல் ,உள்வாங்கிக்கொள்ளும் மொழியின் அமைப்பு,தொனி இவற்றிலெல்லாம் என் முதன்மையான அக்கறை இருக்கும்.வாக்கியங்களை உடைத்தாலும் அதன் தன்மை மாறாது என்றால் மட்டுமே உடைத்துக்கொள்வேன்.இல்லையேல் அதை அப்படியே மொழிபெயர்ப்பதுதான் சரி.

எது மொழிக்கு இயல்பாக இருக்கிறது;எது இயல்பாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பானது சொற்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை.எனவே பிரெஞ்சு கருத்தாக்கத்துக்கும் பண்பாட்டு அம்சத்துக்கும் தமிழில் சரியான சொல் இல்லை எனும்போது , அங்கிருந்து அந்தச் சொல்லைக் கடன் வாங்கிக்கொள்ளலாம். ஒருவேளை ஏதேனும் வார்த்தைப் பயன்பாட்டால் பொருள் திரிவதாகத்  தோன்றினால்,அடிக்குறிப்புகள் கொடுத்து விடுவோம்.ஒரு வாக்கியம் சரியாக வர வேண்டும் என்பதற்காக இரண்டு மணிநேரம் கூட நண்பர்களுடன் உரையாடியிருக்கிறோம்.
முறையாகக் கலந்தாலோசிப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் தன்மை வளம்பெறுகிறது.

  ( நன்றி: இந்து தமிழ் )

No comments:

Post a Comment