Friday, September 14, 2012

செய்தித் துளிகள்...


யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்தபின்பே- மறுமணம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டி.என்.ஏ ரேகைப் பதிவு ((DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்குப்பின் அழிந்துவிடும் என அவரது ஆய்வு கூறியது.

இது தொடர்பாக, எகிப்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சய்யித் கூறுகிறார்: அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனக்குரிய பாலின ரேகையைப் பெண்ணிடத்தில் விட்டுச்செல்கிறான். அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.

அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவன்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமன்றி, தம்முடைய மூன்று மகன்களில் ஒருவர் மட்டுமே தமக்குப் பிறந்தவர் என்ற உண்மையும் அவரைத் தாக்கியது.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் என்பதற்குக் காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால் டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.

ஐரோப்பாவில் பெருகிவரும் முஸ்லிம்கள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.5 கோடியை (45 மில்லியன்) எட்டிவிட்டது. சர்வதேச சிறுபான்மையினர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடும் அளவுக்கு அதிகமாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. 

ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படியான அங்கீகாரம் பெற்றுள்ள இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம்தான். பால்கன் தீபகற்பத்தில் (தென்கிழக்கு ஐரோப்பா) முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்துவருகிறார்கள். கோஸ்வோ, அல்பேனியா, போஸ்னியா, ஹெர்ஸகோவினா ஆகிய பால்கன் நாடுகளில் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் வசிக்கின்றனர். 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடான பிரான்சில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. அடுத்து ஜெர்மனியில் 40 லட்சம்; பிரிட்டனில் 30லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். அடுத்து ஸ்லோவேனியாவிலும் குறைவு. ஐரோப்பாவிலேயே அதிகாரபூர்வமான பள்ளிவாசல்கள் இல்லாத ஒரேநாடு ஸ்லோவேனியாதான்.

குர்ஆனே அடிப்படை கல்வி - அமெரிக்க செனட் மெம்பர்

அமெரிக்காவின் இண்டியானா மாகாண ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஆண்ட்ரியா கார்சன் ஆச்சரியமான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் பாடத்திட்டத்தில் திருக்குர்ஆனை ஓர் அடிப்படை பாடமாகச் சேர்க்க வேண்டும். 

கல்வித் திட்டத்தில் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள், மற்ற பள்ளிகளைக் காட்டிலும் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளன. கல்வித் தகுதியிலும் அதை அடையும் வழியிலும் அவை வித்தியாசப்படுகின்றன. அமெரிக்காவில் எதிர்பார்த்த கல்வி முன்னேற்றம் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டிய கார்சன், அமெரிக்கா பள்ளிக்கூடங்கள் சமயத்தை நம்புவதில்லை; இஸ்லாமியப் பள்ளிகளை முன்னோடியாகக் கொள்வதில்லை என்று கடுமையாகச் சாடினார். உண்மை ஒருநாள் தலைதூக்கியே தீரும்.

2 லட்சம் சிரியா அகதிகள்
சிரியாவில் பஷ்ஷார்எனும் கொடுங்கோலன் ஆட்சிபுரிந்துவருகிறான். இவனது ஊழல் மிகுந்த சர்வாதிகார குடும்ப ஆட்சியை எதிர்த்து சிரியா மக்கள் துணிவுடன் போராடிவருகின்றனர். துனூசியா, எகிப்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் இரண்டாவது சுதந்திரப் போர் நடந்துவருகிறது.
இதுவரை சுமார் 25ஆயிரம் பேர் இப்போரில் பலியாகியுள்ளனர். கடைசி சில மாதங்களில் மட்டும் 17,281 சிவிலியன்களும் 1051 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
தீக்காடாக மாறிவிட்ட அந்த நல்ல பூமியில் நாள்தோறும் துப்பாக்கி சப்தமும் பீரங்கி முழக்கமும் கேட்டவண்ணம் உள்ளன. சிரியாவைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் மக்கள்
தஞ்சமடைந்துவருகின்றனர். இதுவரை 2லட்சம் சிரியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். துருக்கி, இராக், லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 30 ஆயிரம்பேர் சென்றுவிட்டனர். இராக்கில் மட்டும் 15 ஆயிரம் சிரியா அகதிகள் முகாம்களில் குடியேறியுள்ளார்கள்.
ஷாம் ஃபிர்அவ்ன்என அழைக்கப்படும் கொடுங்கோலன் பஷ்ஷாருக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. போர்க்கைதிகள், தன் போட்டோவை வழிபட வேண்டும் என்று அவன் உத்தரவிட்டுள்ளான். உள்நாட்டிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக உள்ளனர்; 25 லட்சம் பேர் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்துள்ளனர்.
பஷ்ஷார் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் முதல் ஆள் யார் தெரியுமா? இஸ்ரேல் பிரதமர்தான். இதிலிருந்தே அவனது யோக்கியதை தெரியும். மற்றொரு நாடு ஈரான்; காரணம் ஷியா-சன்னி பிரச்சினைதான்.

No comments:

Post a Comment