# التمرين في ترجمة المقالة العربية عن مجلة منار الإسلام #
----------------------------------------
₹ இஸ்லாத்தில் நான் ₹
+++++++++++++++++++
நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, எகிப்தின் பிரசித்தி பெற்ற பிரமிடுகள் தொடர்பான படம் ஒன்று பார்த்தேன். படத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கையில் பாஙகொலியைச் செவியுற்றேன். பாங்கு சொன்னவரின் குரல் அழகாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தது. அது என் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும், அவர் என்ன சொல்கிறார்; எது பற்றி அறிவிப்புச் செய்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை
அதே பங்கை லண்டன் பள்ளிவாசல்களிலுருந்தும் கேட்டுள்ளேன். இந்ந பாங்கு குறித்து அறிந்துகொள்ள வேண்டுமென்ற பேரவாவில், எகிப்து மற்றும் சூடானைச் சேர்ந்த என் முஸ்லிம் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பாங்கு பற்றியும் அதன் பொருள் பற்றியும் அவர்களிடம் வினவினேன்.
இதையடுத்து, இஸ்லாம் குறித்து கூடுதலாகக் கண்டறிய வேண்டும் என்ற பிரியம் என்னைத் தள்ளியது. என் முஸ்லிம் நண்பர்கள் சில நூல்கள் கொடுத்து எனக்கு உதவினர்.
அந்நூல்கள் வாயிலாக, திருக்குர்ஆன் மனிதனின் பிரச்சினைகளுக்கும் விவகாரங்களுக்கும் தர்க்கரீதியாகவும் எதார்த்தமாகவும் தீர்வுகாண்கிறது என்பது எனக்குப் புலப்பட்டது. மேலும், இறைநம்பிக்கை கொண்ட மனிதனுக்கு பெரிய அளவில் மன அமைதியை குர்ஆன் அளிக்கிறது ;அதை அவன் நம்பும்போது.
இதுவே, பின்னால் நான் இஸ்லாத்தைத் தழுவக் காரணமாக அமைந்தது
என்கிறார், ஜமைக்ககாவைச்க் சேர்ந்த அப்துஸ் அப்துஸ் ஸலாம் இஸ்மீட் இஸ்மீட்.
****************, ********
الألفاظ الغريبة للمعاني الحديثة
1.لندن - லண்டன்
2. فيلم - திரைப்படம்
3. مشاكل - பிரச்சினைகள்
منطقية - தர்க்கரீதியாக
4.اعتناق الإسلام - இஸ்லாத்தைத் தழுவுதல்
5. اهرامات - பிரமீடுகள்
No comments:
Post a Comment