Tuesday, November 04, 2014

சர்வதேசப் பார்வை - செய்திச் சுருள்

தமிழில் :- கான் பாகவி

பிரிட்டன் முஸ்லிம்களின் பொருளாதாரப் பங்களிப்பு




பி
ரிட்டன் நாட்டுப் பொருளாதாரத்தில் பிரிட்டன் முஸ்லிம்களின் பங்கு 50 பில்லியன் (5 ஆயிரம் கோடி) டாலர்களை எட்டியுள்ளது.

பிரிட்டன் இஸ்லாமிய மன்றம், லண்டனில் செயல்படும் சர்வதேச இஸ்லாமியப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரிட்டனில் 27 லட்சத்து 80 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 1,14,548 பேர் நிறுவனப் பதவிகளிலும் பெரிய வேலைகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் 5 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பிரிட்டனின் பொருளாதாரத்தில் பங்காற்றிவருகிறார்கள்.

மேலும், 13,400 முஸ்லிம்கள் தலைநகர் லண்டனில் மட்டும் பெரிய கம்பெனிகளை நடத்திவருகின்றனர். இவற்றில் மொத்தம் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உண்டு. பிரிட்டன் முஸ்லிம்கள் ஆண்டுக்கு 2050 கோடி பவுண்டைவிடக் கூடுதலாகச் செலவு செய்கிறார்கள். அவற்றில் நூறு கோடி பவுண்ட்ஹலால்உணவுகள் தயாரிப்பிற்காகச் செலவிடப்படுகிறது.

பிரிட்டன் தலைநகரம்தான் இஸ்லாமிய முதலீட்டுத் தொழிலுக்கு முதன்மையான மையமாக விளங்குகிறது. அதன் மொத்த முதலீடு 1.3 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் ஆயிரம் பில்லியன்) பவுண்ட்டுகளாகும். அதாவது 1லட்சத்து 30 ஆயிரம் கோடி பவுண்டுகளாகும். இதுதான் ஐரோப்பிய யூனியனில் புதிய கட்டுமானங்களை எழுப்புவதில் பெரும்பங்காற்றிவருகிறது.

23 கால்பந்து வீரர்கள் இஸ்லாத்தில்...







ப்பிரிக்க நாடான கேமரூன் கால்பந்து அகாடமியில் 20 வயது இளைஞர்கள் குழு ஒன்று சேர்ந்தது. அவர்களில் 23 பேரைத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதகாலப் பயிற்சிக்காக துபை நாட்டுக்கு அகாடமி அனுப்பிவைத்தது.

பயிற்சிக் காலம் முடிந்தபின் இக்குழுவின் கேப்டன், எங்கள் குழுவினர் அனைவரும் இஸ்லாத்தில் இணைய விரும்புகிறோம் என்று அறிவித்தார். ‘இஸ்லாம் டுடேஇணையதளம் தெரிவித்திருப்பதாவது:

மார்க்க நற்பணி மன்றங்களின் அமைச்சக ஆலோசகர்களில் பெரியவரான ஜாவித் கதீப் கூறினார்: இந்த இளைஞர்களோ விளம்பரத்திற்காக விளையாடும் வீரர்கள். இப்போது அவர்களின் அடிப்படை இலட்சியம் இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்வதாக மாறியிருப்பது புதிராகும். கால்பந்து வீரர்களில் ஒரு முழு குழுவினர் இஸ்லாத்தில் இணைவது இதுவே முதல்முறையாகும்.

வீரர்கள் மட்டுமன்றி, விளையாட்டு ஏற்பாட்டாளர்களும் மனஅமைதியையும் சாந்தியையும் தேடி அலைகிறார்கள். அவர்கள் தேடிய அமைதி அவர்களுக்கு இஸ்லாத்தில் கிடைத்தது. விளையாட்டு மைதானத்தில் ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமிடம் எப்படி நடந்துகொள்கிறார்; மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறார் என்பதை அவர்கள் நேரில் பார்த்தனர். (அல்அலூகா)

மலேசியாவில் 11ஆயிரம் ஹாஃபிழ்கள் உருவாக்கத் திட்டம்



லேசியா கல்வி அமைச்சகம் அருமையான செயல்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் உள்ள பல்வேறு மதரசாக்களில் திருக்குர்ஆன் மனனம் செய்த 11 ஆயிரம் மாணவ மாணவிகளை உருவாக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டம். இஸ்லாமிய மதரசாக்களின் வளர்ச்சித் துறை தலைவர் ஹசனுத்தீன் அப்துல் ஹமீத் கூறியதாவது:

மலேசிய இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளிகளில் 15 பள்ளிகள் இந்த முயற்சியில் பங்கெடுக்க உள்ளன. அப்பள்ளிகளில் ஹிஃப்ழு பிரிவின் தரம் உயர்த்தப்படும். இதற்காகச் சாத்தியமான எல்லா ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் 1092 ஆசிரியர்கள் இதற்காகத் தேவைப்படுவார்கள்.

2011ஆம் ஆண்டு கணக்குப்படி, மலேசியாவில் திருக்குர்ஆன் மனனத்திற்காக 278 அரசாங்கக் கல்வி நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை மலேசிய மாணவர்களுக்குத் திருக்குர்ஆனை மனனம் செய்கின்ற வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், இவர்கள் மருத்துவம், பொறியியல், கணிதம் போன்ற பாடங்களையும் தொடர்ந்து படிக்கிறார்கள்.

ரஷியா நடத்திய சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி



ஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த செப்டம்பர் 15இல், சர்வதேச திருக்குர்ஆன் மனனப்போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது. 15ஆவது முறையாக நடந்த இப்போட்டியை ரஷியாவின் தலைமை முஃப்தி ஷைகு ராவி அய்னுத்தீன் அவர்கள் முன்நின்று நடத்தினார்.


முஃப்தி ராவி அய்னுத்தீன்
இரண்டு கட்டங்களாக நடந்த இப்போட்டியின் இறுதிச்சுற்று மாஸ்கோஸஅஃபரான்நகர அரங்கத்தில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து 35க்கும் அதிகமான காரிகளும் ஹாஃபிழ்களும் கலந்துகொண்டனர்.

திருக்குர்ஆனைத் திருத்தமாக ஓதுவதற்கான ஒரு போட்டியும் மனனத்திற்காக மற்றொரு போட்டியும் நடத்தப்பட்டன. போட்டியில் சஊதி முதலாவது இடத்தையும் ஈரான் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. கடந்த 15 ஆண்டுகளாக ரஷியாவில் முஃப்திகள் பேரவை இந்தப் போட்டியை நடத்திவருவது குறிப்பிடத் தக்கது.

திருக்குர்ஆனின் ஜெர்மன் மொழிபெயர்ப்புகளில்


 ஒன்றுக்குத்தான் இனி அனுமதி





ரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் (ஆஸ்திரேலியா அல்ல), திருக்குர்ஆனுக்கு ஜெர்மன் மொழியிலுள்ள மொழிபெயர்ப்புகளில் ஒரேயொரு பிரதியை மட்டும் சட்டபூர்வமானதாக அறிவிப்பதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன. இதன் மூலம், தீவிரவாதிகள் உலக முஸ்லிம்களின் புனித நூலைத் தவறான பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.

ஆஸ்திரியா வெளிவிவகாரத் துறை அமைச்சர் செபாஸ்டியன் கார்டஸ் இது தொடர்பாகக் கூறுகையில் பின்வருமாறு தெரிவித்தார்:

ஆஸ்திரிய மக்கள் குர்ஆனின் உள்ளடக்கத்தை முறையோடு அறிந்துகொள்வதற்கு இச்சட்டம் அவசியமாகிறது. முஸ்லிம் பொதுமக்களை அணுகும் தீவிரவாதிகள் திருக்குர்ஆனுக்குத் தவறான விளக்கங்கள் கூறியே அவர்களை ஈர்க்க முனைகிறார்கள் என சர்வதேச குர்ஆன் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

எனவே, ஒரு குறிப்பிட்ட சரியான ஜெர்மன் மொழிபெயர்ப்பை இனம்காணும் பணியை, ஆஸ்திரிய இஸ்லாமிய மார்க்க ஆர்வலர்கள் மேற்கொள்வர்.

துருக்கி பள்ளிகளில் குர்ஆன் அடிப்படை பாடம்




து
ருக்கி பெயரளவில் முஸ்லிம் நாடு. ஆனால், இஸ்லாம் அரசாங்கத்தில் இல்லை. அண்மைக் காலமாக மாற்றங்கள் தெரிகின்றன. துருக்கி பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இப்போது அனுமதிக்கப்படுகிறது.

துருக்கி அதிபர் அர்துகான்
அவ்வாறே பள்ளிகளில் திருக்குர்ஆன் கற்பிக்கப்படும் என்ற முடிவையும் அரசு எடுத்துள்ளது. திருக்குர்ஆனைக் கற்கவும் விளங்கவும் ஏதுவாக அரபிமொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும். இதன் மூலம் பல்கலைக் கல்வி எளிதாகும்; அடுத்த தலைமுறை அரசியல் மாற்றங்களையும் இறைவேதத்தின் சரியான விளக்கத்தையும் புரிந்துகொள்ள இயலும்.

இப்போது பதவிக்கு வந்துள்ள துருக்கி அதிபர், ‘மார்க்க இமாமத்பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. பிறகுதான்மர்மராபல்கலைக் கழகத்தில் பணி நிர்வாகவியல் படித்தார். மற்ற மாணவர்களைப் போன்றே அவருக்கும் அரசியல் பாடம் படிக்க அனுமதி கிடைக்கவில்லை.

ஸ்பெய்னில் இஸ்லாமிய ஃபிக்ஹ் மாநாடு




ஸ்
பெய்ன் நாட்டின் செப்டா நகரில் இஸ்லாமிய ஃபிக்ஹ் மாநாடு ஒன்றை முஸ்லிம் சமூகங்களின் ஒன்றியம் நடத்தியது. நபிவழியிலிருந்து கிடைக்கும் ஒருங்கிணைந்த சிந்தனைகளைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியே இம்மாநாடு ஆகும்.

கடந்த மாதம் 30ஆம் தேதிஇப்னு ருஷ்த்பள்ளிவாசலில் நடந்த இம்மாநாட்டை, சர்வதேச நபிவழி பேரவையின் தலைவர் டாக்டர் ஸாலிஹ் தர்வேஷ் தொடங்கிவைத்தார். இதற்கு முந்திய வாரம் மாட்ரிட் நகரில் நடைபெற்ற முஸ்லிம் சமூகங்களின் தேசிய மாநாட்டில் மக்கள் திரளாகக் கலந்துகொண்டதைப் போன்றே இம்மாநாட்டிலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அரசுடனான தொடர்பை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். (அல்அலூகா)


போஸ்னியாவின் புதிய பள்ளிவாசல் திறப்பு



தெ
ன் ஐரோப்பிய நாடான போஸ்னியா, ஹெர்சேகோவினா குடியரசில் ஸவோர்நேக் நகரில்ஸாம்லார்ஜாமிஆ மஸ்ஜித் திறப்பு விழா நடந்தது. 1992ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தப் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டது. போருக்குப்பின் அந்த இடத்தில் குடியிருப்புகளை உள்ளூர் நிர்வாகம் அமைத்துவிட்டது.

இருந்தாலும், பழைய பள்ளிவாசலுக்கு அருகே மற்றோர் இடத்தில் இப்பள்ளிவாசல் பழைய அதே தோற்றத்தில் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. குவைத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளின் அறக்கொடையால் இப்பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டது. திறப்பு விழாவில் டோஸ்லா பிராந்திய முஃப்தீ வஹீத், பால்கன் இஸ்லாமிய தொன்மைச் சின்னங்கள் பாதுகாப்பு அலுவலக மேலாளர் பேராசிரியர் மஹ்மூத் நஜ்தீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

நகர இமாம்களின் தலைவர் ஷைகு ஹாரிஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நல்ல காரியத்திற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொன்மைச் சின்னங்கள் பாதுகாப்பு மன்றம் இதுவரை 65 பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு நிதியுதவி அளித்திருப்பதுடன், போஸ்னியாவில் 4 ஆயிரம் அநாதைகளைப் பராமரித்தும் வருவது குறிப்பிடத் தக்கதாகும். (அல்அலூகா)

அமெரிக்கத் தேர்தலில் முஸ்லிம்கள் - கருத்துக் கணிப்பு




மெரிக்காஇஸ்லாமியக் கூட்டுறவு மன்றம், அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன:

நவம்பரில் நடக்கவுள்ள முதல்பாதி தேர்தல்களில் அமெரிக்க முஸ்லிம்களில் 69 விழுக்காட்டினர் கலந்துகொள்வார்கள். 16 விழுக்காட்டினரே பங்கு கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் வாக்காளர்களில் 50 விழுக்காட்டினர் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். 15 விழுக்காட்டினரே குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜார்ஜ் புஷ் காலத்திலிருந்து குடியரசு கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டு வருவதே இதற்குக் காரணம்.

இந்தக் கருத்துக் கணிப்பு முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கலிபோர்னியா, நியூயார்க், இல்லினாய்ஸ், டெக்ஸஸ், ஃபுலோரிடா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment