#முத்தலாக் பில் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் #
நேற்று (7.12.17)மாலை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், முத்தலாக் பில் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நிலோபர் தலைமையில் நடந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அறிமுக உரையாற்றினார். முத்தலாக் சட்டவிரோதமானது ; மீறுவோருக்கு மூன்றாண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் ; மனைவிக்கு ஜீவனாம்சம் உள்ளிட்ட செலவுகளை கணவனே ஏற்க வேண்டும் ; குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும்... என்றெல்லாம் மத்திய அரசு தயாரித்துள்ள அந்த பில் சொல்கிறது.
இது குறித்து மாநில அரசுகளின் கருத்தையும் மைய அரசு கேட்டுள்ளது. தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தை அறிய விரும்பியது. குறுகிய நேரத்தில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் அரசு தலைமை காஜி, ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள், அமைப்பு பொறுப்பாளரகள், ஆலிம்கள் சட்டமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முதலானோர் கலந்து கொண்டு, பில்லுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர்.
இறுதியில் இதுவே தமிழக அரசின் கருத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. தக்பீர் முழங்க அனைவரும் வரவேற்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கான் பாகவி

No comments:
Post a Comment