Friday, September 14, 2018

# نموذج ثالث من المقالات العربية #
+++++++++++++++++++
$ خطبة الرسول صلى الله عليه وسلم في حجة الوداع $
( عن مجلة  'المجلة العربية ')
**************************

© في موقف تاريخي خالد ، وفي مشهد مهيب رائع، وفي يوم من أيام الله،وفي ساحة عرفات ،وفي حجة الوداع ركب رسول الله صلى الله عليه وسلم ناقته القصواء، وهتف في الجموع الخاشعة التي تحيط به،يبلغ الناس وحي الله جل جلاله،ويلقي إليهم دستور الحياة.

حرص المصطفى صلى الله عليه وسلم على أن يوصيهم وصيته الجامعة ،فلعله لا يلقاهم بعد عامه هذا،ولعله لا يقف بينهم بعد موقفه هذا، وكان الذين استمعوا لهذه الخطبة العظيمة الجامعة نحو مائة ألف مسلم.تجمعوا على شكل مؤتمر موسع، ليسمعوا من قائدهم ومعلمهم محمد بن عبد الله عليه الصلاة والسلام.

وكان النبي العظيم صلى الله عليه وسلم حريصا على أن تصل كلماته إلى كل سمع،وتمس كل قلب،فكان يستعين برجل من صحابته هو ربيعة بن أمية بن خلف،فكان يصرخ في الناس بقول رسول الله صلى الله عليه وسلم حتى تذاع الخطبة في أرجاء الوادى الفسيح..

ولقد جمعت هذه الخطبة العظيمة أصول الدين وقواعد البر ومنهج السلوك، ونظمت علاقة الإنسان بالله تبارك وتعالى،ونفسه، والمجتمع الذي يعيش فيه، إنها أعلنت حقوق الإنسان قبل أن تعرف دساتير الارض ما هي حقوق الإنسان؟ إنها رسمت الطريق واوضحت المعالم وبينت حدود الله عز وجل.

قال رسول الله صلى الله عليه وسلم في أثناء تلك الخطبة:

أيها الناس! إن ربكم واحد وإن اباكم واحد كلكم لأدم ،وأدم من تراب... إن أكرمكم عند الله أتقاكم. وليس لعربي على عجمي فضل إلا بالتقوى... ألا هل بلغت اللهم فاشهد.

قالوا :نعم! قال: فليبلغ الشاهد الغائب.
( إن شاءالله)

Monday, September 10, 2018

இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை


சலாம்.வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி ,7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை.
+++++++++++++++++++
*இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்*
*பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி*
இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான் வாசித்தேன். நூலாசிரியர் முனைவர் *மௌலானா, P.S. சையித் மஸ்வூத் ஜமாலி* அவர்களின் வாழ்நாளில் இந்த ஒரு நூலே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு, நூல் அற்புதமாகவும் தரமாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள்!
இஸ்லாத்தில் இறைவழிபாடு, குடும்பம், சிவில், குற்றவியல், நீதி, நிர்வாகம், பொருளாதாரம்… என ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட சட்டங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது இம்மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும். எந்தவொரு வினாவுக்கும் இங்கே விடை உண்டு. செல்லும்-செல்லாது; உண்டு-இல்லை; விரும்பத் தக்கது-தகாதது… எனத் தெளிவான வரையறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயல்பூர்வமான துறைச் சட்டங்களுடன், நம்பிக்கை சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கியதே ‘ஷரீஆ’ எனும் மார்க்க நெறியாகும். செயல்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு, ‘ஃபிக்ஹ்’ என்று பெயர். இந்த வேறுபாட்டைத் தொடக்கத்திலேயே நூலாசிரியர் விவரித்துவிடுவது சிறப்பு.
இறைமார்க்கத்திற்கும் அதன் சட்டங்களுக்கும் மூலாதாரமாகவும் அடிப்படை சான்றாகவும் எது இருக்க முடியும்? இறைவேதம்; அந்த வேதத்தைப் போதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பெற்ற இறைத்தூதரின் வாழ்க்கை (ஹதீஸ்); அந்த வாழ்க்கை முறையை அருகிலிருந்து நேரில் பார்த்த அத்தூதருடைய தோழர்களின் கூற்று (இஜ்மாஉ); இவற்றையெல்லாம் உள்வாங்கி, சட்டத் தரவுகளை முன்வைத்துச் சட்ட வடிவம் கொடுத்த வல்லுநர்கள், இமாம்கள் ஆகியோரின் ஆய்வு (கியாஸ்) –இவையெல்லாம்தான் மூலாதாரங்களாகும்.
இந்த மூலாதாரங்களின் நான்கு பிரிவுகளில் ஒவ்வொன்றும் மூலாதாரமாக இருப்பதன் தகைமை, அவை ஒவ்வொன்றிலிருந்தும் சட்டங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணி, அக்காலச் சூழ்நிலை, சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதற்கான அவசியம், சட்டத்தை அதன் மூலாதாரத்திலிருந்து பெயர்ப்பதில் ஒவ்வோர் இமாமுக்கும் இருந்த அணுகுமுறை, இச்சட்டத் தொகுப்புகள் வெவ்வேறு நாடுகளில் நடைமுறைக்கு வந்தவிதம்… என ஒவ்வொரு கட்டத்தையும் வரலாற்றுரீதியாகவும் தர்க்கரீதியாகவும் ஆசிரியர் நிறுவியிருப்பது புதுமையானது; வியக்கவைப்பது.
இந்தப் பாரம்பரியம் அன்றோடு முடிந்துவிடவில்லை என்பதையும் இன்றளவும் தோன்றுகின்ற புதுப்புதுப் பிரச்சினைகளுக்குச் சட்டத் தீர்வு காணும் பணி, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களால் தொடர்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் நம் முனைவர் விவரித்திருப்பது, அவரது பரந்துபட்ட ஆய்வை நமக்கு உணர்த்துகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்கச் சட்டங்களைக் கையாள்வதில் அறிஞர்களிடமும் சமுதாயத்திடமும் இருக்க வேண்டிய நெகிழ்வுத் தன்மை குறித்தும் இறுக்கம் இருக்கலாகாது என்பதில் தமக்குள்ள சமூக அக்கறை குறித்தும் ஆசிரியர் வெளியிட்டுள்ள கருத்துகளும் யோசனைகளும் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன.
அவரவர் தத்தமது மத்ஹபைப் பின்பற்றுவதில் குறைகாண முடியாது. அதே நேரத்தில், சூழ்நிலையின் இறுக்கம், பிரச்சினையின் தீவிரம், சுமூக முடிவுக்கான தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மற்றொரு மத்ஹபின் சட்டத்தைத் தத்தெடுத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற ஆசிரியரின் சிந்தனை, இன்றைய நெருக்கடிகளுக்கு ஒரு விடிவாகும் என்பதை மறுக்க இயலவில்லை.
இந்த நெகிழ்விற்கு வலுசேர்க்கும் வகையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கையாண்ட மூன்று முத்தான காரணிகளை இந்நூல் வரிசைப்படுத்துகிறது. ‘கியாஸ்’ எனும் நான்காவது அம்சத்திற்கு அப்பால், ‘மஸ்லஹா’ (பொதுநலன்), ‘இஸ்திஸ்ஹாப்’ (தடை செய்யப்படாதவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை –என்ற கோட்பாடு), ‘தராயிஉ’ (காரணிகள்- விலக்கப்பட்டதற்கு வழிகோலும் காரணியும் விலக்கப்பட்டதே- என்ற கோட்பாடு) ஆகிய இம்மூன்று அம்சங்களையும் கருத்தில் கொண்டே இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் சட்டம் சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டாம் பகுதியில் இமாம்களின் பங்களிப்புபற்றி உரையாடும் நூலாசிரியர் தரமான தரவுகளை வழங்கியிருப்பது, நம் அறிவுப் பசிக்கு நல்லதொரு சத்தான தீனி. பிரசித்தி பெற்ற நாற்பெரும் இமாம்களின் வாழ்க்கை வரலாறு, சட்டத்துறைக்காக அவர்கள்தம் வாழ்நாளை அர்ப்பணித்த விதம், கல்வியைத் தேடி அவர்கள் மேற்கொண்ட கரடுமுரடான பயணங்கள், சட்டத் தீர்மானங்களின்போது, இமாம்கள் கடைப்பிடித்த தார்மிக நெறிகள், அறிஞர்களின் அடுத்த தலைமுறை உருவாக்கத்தில் இமாம்கள் காட்டிய ஆர்வம்… என ஒவ்வொன்றையும் நூலாசிரியர் அழகுபடச் சித்தரிக்கிறார்.
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள், இராக் தலைநகர் பக்தாதில் இருந்தபோது சில சட்டங்களை இயற்றினார்கள். அப்போது அன்னாருக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே நபிமொழி ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. பின்னர் எகிப்து சென்றபின் கிடைத்த புது ஆதாரங்களையும் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு சட்டங்களைக் கண்டறிந்தார்கள். இதனால், பக்தாத் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டியதாயிற்று.
இதனாலேயே, இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களிடமிருந்து இருவேறு தகவல்கள் சட்டங்களில் காணப்படுவதுண்டு. முந்தியது பழையது (கதீம்) என்றும், பிந்தியது புதியது (ஜதீத்) என்றும் பின்வந்த அறிஞர்களால் இனங்காணப்படுகிறது.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், நபிமொழிகளில் முத்தவாத்திர், மஷ்ஹூர், அஸீஸ் ஆகியவற்றைக் கவனத்தில்கொள்வார்கள். இதன் அறிவிப்பாளர்கள் பலராக இருப்பதால் இவற்றுக்குப் பலம் அதிகம் என்பதே காரணம். ஓரிருவர் அறிவிப்பில் வந்துள்ள ஹதீஸைவிட, மதீனாவாழ் மக்களின் வழக்கிலிருந்த நடைமுறைக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இங்கே, சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தற்கால அறிஞர்கள் வெளியிட்டுள்ள தீர்வுகளும் ஃபத்வாக்களும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். இவற்றை எடுத்துக்காட்டுவது மட்டுமே ஆசிரியரின் நோக்கம் எனத் தெரிகிறது.
ஆக, ஆழமான, விரிவான, அற்புதமான, அவசியமான கருத்துக் கருவூலமாக இந்நூல் அமைந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. இதை ‘சட்டத்துறை கலைக்களஞ்சியம்’ என்றே தாராளமாகக் குறிப்பிடலாம். அது மிகையன்று.
மார்க்க அறிஞர்கள் ஒவ்வொருவரும் இந்நூலை ஒருமுறையாவது கவனத்தோடு வாசிக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். அப்போதுதான், ஃபிக்ஹ் சட்டங்களின் நெளிவுசுளிவுகள் புரியும்; அத்துடன் சட்டங்களைச் சொல்வதிலும் செயல்படுத்துவதிலும் ஓர் இங்கிதம், நெகிழ்வு உண்டாக வழி பிறக்கும்; இமாம்களின் தியாகம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை நமக்கு வழிகாட்டும்.
வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் ஏன், பொதுமக்கள் உள்பட அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய அறிவுப் புதையல்தான் இந்தப் புத்தகம்.
நூலாசிரியரும் பெரிய கல்விமானும் பண்புள்ள முனைவரும் எனக்கு மூத்தவராக இருந்தாலும் நல்ல நண்பருமான *முனைவர் மௌலானா மஸ்வூத் ஜமாலி* அவர்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர். அன்னாருக்கு அல்லாஹ் மேன்மேலும் நல்லாற்றல்களை வழங்கி, இதுபோன்ற பல நூல்களை வழங்க அருள் புரிவானாக! இந்நூலால் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட தவ்ஃபீக் செய்வானாக!
சென்னை-14.
*அ. முஹம்மது கான் பாகவி*
10.04.2018

Sunday, September 02, 2018

# نماذج ثاني من المقالات العربية.لازم عليك أن تحتذي #

# نماذج ثاني من المقالات العربية.لازم عليك أن تحتذي #

+++إعجاز القرآن الكريم +++
( عن مجلة منار الإسلام )

* لما كانت الأمة العربية التي بزغ منها نور النبوة المحمدية أمة أمية، لا تعرف علما ولا صناعة ،ولكنها تملك ملكة البيان تتصرف فيه وتجيد الضرب في نواحيه والتحليق في سمائه، لما كان ذلك ناسب أن تكون حجة محمد صلى الله عليه وسلم عليهم هي البيان،وتكون وسيلته إليهم هي البلاغه، لأنها هي التي آمنوا بها فيما بينهم،وعرفوا قدرها في نفوسهم.

أنزل الله على رسوله صلى الله عليه وسلم القرآن، فكان حجته الدامغة وقوته وعدته على حين لا عدة له ولا قوة ، فصعقوا وزلزلوا وأخذوا واذعنوا حين سمعوا آياته الكريمة وأسلوبه القوي ولسانه الخلاب وعباراته الآخذ بعضها بحجز بعض.

وإذا أردت مصداقا لهذا حتى تبصره بعيناك فها هو أبو جهل بن هشام يقول في ملأ من قريش : قد التبس علينا أمر محمد، فلو التمستم لنا رجلا عالما بالشعر والكهانة والسحر، وكلمه ثم أتانا ببيان عنه!

فقال عتبة بن ربيعة :
والله لقد سمعت الشعر و الكهانة والسحر، وعلمت من ذالك علما وما يخفى علي إن كان كذلك. فقالوا :ايته فحدثه.

ثم أتاه والشر ينبعث من عينيه وشياطين السوء تلعب برأسه.فقال : يا محمد أنت خير أم هاشم ؟ اانت خبر أم عبد المطلب ؟ اانت خير أم عبدالله ؟فيم تشتم الهتنا وتضلل آباؤنا وتذم ديننا ؟ فإن كنت إنما تريد الرياسة عقدنا إليك الويتنا فكنت رئيسنا ما بقيت، وإن كنت تريد الباءة زوجناك عشر نساء، وإن كنت تريد المال جمعناك ما تستغني به أنت وعقبك...؟
يقول عتبة هذا ورسول الله صلى الله عليه وسلم ساكت.

فلما فرغ من حديثه قرأ عليه محمد صلى الله عليه وسلم قوله تعالى: بسم الله الرحمن الرحيم. حم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون... إلى أن بلغ قوله تعالى: فإنما بما ارسلتم له كافرون.

وهنا، وهنا فقط ،ارتعد جسم عتبة والساقطت نفسه رعبا وفزعا وصاح قائلا : نسدتك الله والرحم يا محمد أن تمسك، وامسك رغم الرسول صلى الله عليه وسلم.

لقد رجع عتبة إلى أهله فلم يخرج لقريش.....ثم قال :
لقد كلمته فأجابني بشيء ما هو بسعر ولا كهانة ولا سحر.ولما بلغ محمد : صاعقة عاد وثمود،امسكت بفيه،وناشدته بالرحم أن يكف، وقد علمتم أن محمداً إذا قال شيئاً لم يكذب.فخفت أن ينزل بكم العذاب.*

( إن شاء الله. أيها الإخوة الأعزة المشتركون في المجموعة اقرؤا المقال وهذا سهل جدا فإن عرض عليكم الشك فارجعوا الى القاموس.واعتبروا أسلوب المقالة العربية واحتذوا به .)
نشدتك الله. وامسك بفم

Tuesday, August 21, 2018

பெருநாள் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் .உங்கள் அனைவருக்கும்
எனது  இதயம் கனிந்த
ஈதுல்  அள்ஹா ..பெருநாள்  வாழ்த்துக்கள்.

Sunday, August 19, 2018

# أمثلة من المقالات العربية #

# أمثلة من المقالات العربية #

& أيها الزملاء الأعزة ! نقدم اليكم بعض النماذج من المقالات العربية. يچب عليكم أن تحتذوا به كي تأخذوا منه الملكة على كتابة المقالات باللغة العربية &

¥¥¥¥ دين الرحمة ¥¥¥¥
++++++++++++++++
( عن معلم الإنشاء )

الحمد لله رب العالمين.والصلاة و السلام على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين.

كانت العرب في القرن السادس الميلادي على شفا جرف هار..
كادوا يتهالكون في الحروب و يتفانون فيها تشتعل فيهم نيران الحرب لأمر بسيط تافه فتستمر إلى سنين طوال- يأكلون الميتة و يئدون البنات ويعبدون الأصنام ويسجدون لها - وكانت الدنيا كلها في ظلام وكان الناس في ضلال وسفاهة .

فبعث الله فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم و يعلمهم الكتاب والحكمة. وانزل معه الكتاب ليخرجهم من الظلمات إلى النور فهداهم الرسول إلى الحق ..

ففلاح العالم في دين الإسلام وصلاح المجتمع البشري في إتباع أحكام الله. إن هذا القرآن يهدي للتي هي أقوم. وإن هذا الدين يخرج الناس من عبادة العباد إلى عبادة الله ,  ومن جور الأديان إلى عدل الإسلام.

ولكن الناس في ضلالات يعمهون .ولا يهتدون إلى الحق والحق أمامهم. وان ما جاء به الرسول معهم . وان الكتاب الذي أنزل مع الرسول بين أيديهم .ولكنهم في شك منه .بل هم في عناد وهم في حاجة إليه وهم في حاجة إلي دين الرحمة .

( إن شاء الله )

Sunday, August 12, 2018

الخبر قد يكون شبه جملة

# الخبر قد يكون شبه جملة #
+++++++++++++++++++

اعلم أيها الإخوة أن خبر المبتدأ قد يكون شبه جملة.لذا لازم عليكم أن تعرفوا ما هو شبه الجملة ؟

المقصود بشبه الجملة هو الجار والمجرور وظرفا زمان ومكان.

والأمثلة على الترتيب :
١.النجاة في الصدق
٢.الراحة بعد التعب
٣. الساعة تحت الوسادة

ثم الكلمات التالية الظرفية قد تقع خبرا .وتنصب أذا أضيفت ألى إسم أخر مذكور
نحو : قبل هذا وبعده

وأما إذا حذف المضاف إليه ونوي في القلب  فتبنى على الضم
نحو : لله الأمر من قبل ومن بعد ( بضم قبل وبعد )

& الأمثلة &
١.الجنة تحت أقدام الأمهات
٢.ان الحكم بعد التجربة
٣. الراشي والمرتشي كلاهما في النار
٤.كان الحارس خلف الباب
٥.اختبار نصف السنة بعد هذا الأسبوع.
٦.بيت المقدس في فلسطين المحتلة ( ஆக்கிரமிக்கப்பட்ட )

( إن شاء الله )

Wednesday, August 08, 2018

#,பெரியார் , அண்ணா தியரி என்றால், கலைஞர் பிராட்டிக்கல்.

Tuesday, August 07, 2018

தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவு ஏனோ சோகத்தை அளிக்கிறது.அனைவருக்கும் அனுதாபம்.
கான் பாகவி

Saturday, August 04, 2018

*காலச்சுவடு இதழுக்கு என் கடிதம்*

*காலச்சுவடு இதழுக்கு என் கடிதம்*

*அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…*

‘வன்கொடுமைகளின் களியாட்டம்’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன். சீர்மரபினர் சாதிக்காரர் ஒருவரின் கிணற்றில் நீச்சலடித்த குற்றத்திற்காக (?) மகாராஷ்டிரா கிராமம் ஒன்றில், தலித் சிறுவர் இருவருக்கு நடந்த வன்கொடுமையானது, நாகரிக உலகத்தின் அவமானச் சின்னம் என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை என்றே சொல்ல வேண்டும்.

அச்சிறுவர்கள் செய்த பாவம்தான் என்ன? தலித் குடும்பத்தில் பிறந்ததா? பிறப்பு மனிதன் கையில் இல்லையே! இதே தலித்களை அழைத்துத்தானே கிணற்றைத் தோண்டுகிறார்கள்! சுற்றுச்சுவர் எழுப்புகிறார்கள்! கிணற்று நீரைச் சுத்தப்படுத்துகிறார்கள்! தூர் வாருகிறார்கள்! அப்போதெல்லாம் தீண்டாத தீட்டு, நீந்துவதால் மட்டும் எப்படித் தொற்றும்?

இதுவென்ன கொடுமை? தலித் சிறுவர்களின் உடம்பிலுள்ள அழுக்கு நீரில் கலந்துவிடும் என்றால், யார் நீந்தினாலும் அப்படித்தானே! கிணற்றிலுள்ள மீன்கள் அழுக்கைச் சுத்தம் செய்துவிடுமே! மீனுக்குத்தான் சாதி இல்லையே!

இவர்களின் ஆட்சியில் சமூகநீதி செத்துப்போய் பல ஆண்டுகளாகிவிட்டன. விளிம்புநிலை மக்களுக்குச் சமூகநீதி கிடைக்க இவர்கள் பாடுபடுகிறார்கள் என்பதெல்லாம், காதில் பூச்சுற்றும் வடிகட்டிய பொய். மத்தியிலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இவர்களின் ஆட்சிதான் நடக்கிறது. அங்கெல்லாம் தலித்கள், சிறுபான்மையினர் போன்ற விளிம்புநிலை மக்கள் நாள்தோறும் அனுபவிக்கும் வன்கொடுமைகள் கொஞ்சமா?

அற்பக் காரணங்களைச் சொல்லி, பட்டப்பகலில் அடித்துக் கொல்வதும், அக்கொலைகள் படமாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுவதும், பார்த்துவிட்டு நாலுபேர் கொதிப்பதும், அத்தோடு மூச்சுப்பேச்சு இல்லாமல் அடங்கிப்போவதும் வாடிக்கையாகிவிட்டன.

இந்த வன்கொடுமை குற்றவாளிகளில் எத்தனை பேர் கைது செய்யப்படுகின்றனர்? எத்தனை பேர்மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடக்கிறது? எத்தனை பேர் தண்டனை அனுபவிக்கின்றனர்? எத்தனை இடங்களில் இக்கொடுங்குற்றங்கள் குறைந்துள்ளன? ஏதாவது கணக்கோ புள்ளிவிவரமோ இருக்கிறதா?

போலீஸ் கண்முன்னே கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது. கொடுமைகளின் அரங்கேற்றத்திற்கு அனைவரும் சாட்சிகள். பெயருக்குச் சில கொலையாளிகள் கைது; வழக்கு; பின்வழியாக ஜாமின்; கொஞ்ச நாளில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி விடுதலை. இதுதானே தொடர்கதை!

யாருக்குத் தெரியாது இந்தக் கண்துடைப்பு நாடகமெல்லாம்? சட்டத்தின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. உண்மை பேச வேண்டியவர்கள் வாய் திறக்க அஞ்சுகிறார்கள். குற்றவாளிகளின் கழுத்தைத் தொடாமல் தூக்கக் கயிறு பம்முகிறது. அரசு மரியாதையுடன் சிறைக் கதவு திறக்கிறது. மாலை மரியாதையோடு குற்றவாளி வெளியே வருகிறான். அடுத்த ஆட்டம் ஆரம்பமாகிறது.

ஹிட்லரோ முசோலினியோ இருந்திருந்தால், இந்த ஆட்சித் தலைமைக்கு நோபல் பரிசு வழங்கியிருப்பார்கள். இனியும் இங்கே நீதி கிடைக்கும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? அப்படியென்றால், நீங்கள் ஓர் அப்பாவி!

சென்னை
*அ. முஹம்மது கான் பாகவி*

Tuesday, July 31, 2018

* بقية الدرس الثامن من دروس اللغه العربيه العصريه *

* بقية الدرس الثامن من دروس اللغه العربيه العصريه *

# أمثلة كون الخبر جملة فعلية #
+++++++++++++++++++
١. وزير الداخلية الفرنسي يبدي إعجابه بالتطور الكبير لمدينة الرياض.
٢.حامد ومحمود يناقشان في صالة الدراسة حول مسئلة الربا
٣.المبشرون يخططون بذكاء ويريدون أن ينقرض الإسلام بانقراض أتباعه
٤.العدو الصهيوني يكثف مجهوداته لهدم المسجد الأقصى
٥. حركة الأغلبية تنشط ضد المسلمين بالهند
٦.شركات التأمين التجاري تشكل خطراً كبيراً على الإقتصاد القومي
٧.النساء يقمن بشئون المنازل وتربية الأولاد
٨.ان هتلر وموسولني ملأ الأرض ضجيجا ، واشاعا الرعب في أقطار الأرض

@,المعانى للألفاظ الغربية @

صالة الدراسة - வகுப்பு அறையில் / வாசிப்பு ஹாலில்
مناقشة - விவாதம்
العدو الصهيوني- சியோனிஸ்டு எதிரி
تنشط - இயங்குகிறது
شركات التأمين - இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

& التمرين / عربوا الجمل التالية

1. தமிழக முதல்வர் நாளை சென்னையில் புதிய டெலிவிஷன் சென்டரை திறந்து வைக்கிறார்

2.நான் தங்கள் கல்லூரியில் சேர விரும்புகிறேன்

3.என் ஆசிரியர் நேற்று எனக்கு ஓர் அழகிய பரிசு வழங்கினார்.

4.நம் கல்லூரி முதல்வர் இன்று அருமையான உரை நிகழ்த்தினார்

5.தருக்குர்ஆன் மொழியான அரபு மொழி என்னை மிகவும் கவர்ந்துவிட்டது .

الألفاظ للمعاني الغريبة

முதல்வர் -الوزير الاول

டெலிவிஷன் சென்டர் -مركز التليفزيون

கல்லூரியில் சேரல் -الالتحاق في الكلية

பரிசு வழங்கல் - منح ا الجائزة

கவர்தல் -اعجاب
( ان شاء الله )

Friday, July 13, 2018

பள்ளிவாசல் இமாம்கள் உதாசீனப் படுத்தப்படுவதற்கு இனியாவது தீர்வு காணப்பட வேண்டும்.

பள்ளிவாசல் இமாம்கள் உதாசீனப் படுத்தப்படுவதற்கு இனியாவது தீர்வு காணப்பட வேண்டும்.
***************************
இந்தியாவில் 651 ஆண்டு கால முஸ்லிம் ஆட்சியின் போது பள்ளிவாசல் இமாம், முஅத்தின், மதரஸா ஆசிரியர்கள், மாவட்ட காஜிகள் போன்று இஸ்லாமியத் துறையில் பொறுப்பு வகித்த பணியாற்றிய அனைவரும் அரசின் முதல்நிலை ஊழியர்களாக வாழ்ந்தனர். அவர்களின் அறிவு ஆற்றல் அனுபவம் உழைப்பு ஆகியவற்றுக்கேற்ப மாத ஊதியமும் இதர ஊக்கத் தொகைகளையும் அரசு தாராளமாக வழங்கி கண்ணியப்படுத்தியது.

முஸ்லிம் ஆட்சி சிதைக்கப்பட்ட பிறகு நாட்டில் இருந்த அத்துனை பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் தங்களை தனித்தனியாக தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அரசு இல்லாத நிலையில் இஸ்லாமியத் துறையை உயிரோட்டமாக செயல்பட வைப்பதற்கு சமூகத்தில்  வசதிபடைத்த பணக்காரர்களின் தயவை நாட வேண்டிய நிலைக்கு அறிஞர்கள்  தள்ளப்பட்டனர்.

அடுத்து வந்த காலங்களில் தனியார் பங்களிப்பில் பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் மற்றும் பலவகை இஸ்லாமிய சேவை நிறுவனங்கள் உருவாகின. அவை ஒவ்வொன்றும் ஒரு பாதையில் செல்லத் துவங்கின. இன்று தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் ஒரு பொது  செயல்திட்டமோ அல்லது நிர்வாக ரீதியாக வழிகாட்டும் இஸ்லாமிய நெறிமுறைகளோ இல்லை.

இந்திய அரசின் அறக்கட்டளை (Trust ) சட்டம் மற்றும் அமைப்பு (Society) சட்டங்கள்  மட்டுமே உள்ளன. சமூக ரீதியாக எதுவும் நம்மை கட்டுப்படுத்தாது யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற இன்றைய நிலைதான் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் மஹல்லாவாசிகள் உடனான உரிமைகளிலும் உறவுகளிலும் பல ஜமாஅத்து நிர்வாகங்கள் அத்துமீற வழிவகுத்துள்ளது. 

ஒரு சாதாரன மனிதனுக்கு இன்றைய முதலாளித்துவ சட்டங்கள் வகுத்து தந்துள்ள குறைந்தபட்ச மனித உரிமைகளை கூட உலகில் மனித உரிமைகளுக்கு சான்றாக விளங்கும் இஸ்லாத்தை பயின்று பயிற்றுவித்து உம்மத்தில் வழிபாடுகளை நிலைநிறுத்தி அவர்களின் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பள்ளிவாசல் இமாம்களுக்கு சமூகம் தருவதில்லை.

ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அவலத்தால் தங்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்காக பள்ளி நிர்வாகிகளின் பணக்காரர்களின் ஃபத்வாக்களுக்கு எண்ணங்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு பல இமாம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இல்லை இல்லை சமூகம் வலிந்து அவர்களை தள்ளியுள்ளது.

சமூக அநீதிகளுக்கு எதிராக உரக்கப் பேச பயிற்றுவிக்கப் பட்டவர்களின் வாயை வலுக்கட்டாயமாக பொத்தி முஸ்லிம் சமூகம் தன் தலைக்கு தானே கொல்லி  வைத்துக் கொள்கிறது.

தான் மனிதப் புனிதனாக மாறுவதற்கு தனது வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு தனக்காக சமூக அரசியல் தளங்களில் போராடுவதற்கு சில நேரங்களில் உயிரிழக்கக் கூட துணிந்து முன்வரும்  தலைவர்களை சிந்தனையாளர்களை இமாம்களை அவமானப்படுத்துவதும் அலட்சியப்படுத்துவதும் அவதூறுகள் பரப்புவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது. உலகில் வேறு எந்த சமூகமும் எப்போதும் செய்யாத கொடுமையை இந்த 20 ஆண்டுகளில் உருவாகி வந்துள்ள முஸ்லிம் இளைஞர்களில் சிலர் செய்கின்றனர்.சில சம்பவங்கள் வெளியே தெரிகின்றன பல சம்பவங்கள் வெளியே வருவதில்லை.

பள்ளி இமாம்களுக்கு ஏற்படும் இந்த அவல நிலை தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் உம்மத்தில் அறிவார்ந்த மக்கள் சமூக அக்கரையில்லாமல் இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக அமைந்துவிடும்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் ஏறக்குறைய 4500 பள்ளிவாசல்கள் உள்ளன.இந்த பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்களுக்கு மாநில அளவிலான மய்ய அமைப்பு மூலம் மாத ஊதியம் வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசின் வருவாய் துறை மற்றும் நிதி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முஸ்லிம் அதிகாரிகளை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஒரு வரைவு திட்டத்தை தயாரிக்க வேண்டும்.  

இமாம்களின் அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபை,சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொலைநோக்குப் பார்வையுடைய சமுதாய புரவலர்கள் ஒன்று கூடி  இந்த வரைவு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி இமாம்களின் பணிச்சூழல்  உரிமைகள் மற்றும் ஊதியம் வழங்குதல் ஆகியவற்றை மாநில ஜமாஅத்துல் உலமாவின் இந்த நிதித்துறை கமிட்டி மூலம் செயல்படுத்தப்படும் போது இமாம்களின் கண்ணியம் உரிமைகள் பாதுகாக்கப்படும். 

தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 4500 பள்ளிவாசல்களை 1.கிராம மஹல்லா 2.நகர மஹல்லா 3.மாநகர மஹல்லா என்று மூன்று வகைகளாக பிரித்து அவர்களுக்கான ஊதியம் உணவு உறைவிடம் போன்றவற்றை நிர்ணயம்  செய்ய வேண்டும்.

குறிப்பாக கிராம மஹல்லாவில் பணியாற்ற விரும்பும் இமாமிற்கு குடும்பத்துடன் தங்குவதற்கு வீடு வசதியுடன் குறைந்தது ரூபாய் 25,000 மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்போது தான் இஸ்லாமிய நகரமான மஹல்லாக்களில் வாழும் மக்களுக்கு திறமையான இமாம்களின் கல்வியறிவும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.ஜூம்ஆ மேடைகள் உம்மத்தின் வாழ்வியல் சிக்கலுக்கான வழிகாட்டும் மேடைகளாக உயர்ந்து நிற்கும். அடுத்த தலைமுறையின் இஸ்லாமிய அறிவு மேம்படும்.

பல்வேறு வாழ்வியல் உலகியல் காரணங்களுக்காக மஹல்லாக்களை விட்டு முதலாளித்துவ நகரங்களுக்கு புலம் பெயரும் மக்களை ஓரளவிற்கு தடுத்து நிறுத்த முடியும். புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவது சாத்தியப்படும்.    

இவையெல்லாம் இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் மிக எளிதாக நடைமுறைப்படுத்த சாத்தியமுள்ளவை. சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அனைவரின் ஆலோசனைகளையும் காது கொடுத்து கேட்கும் பக்குவம் நாம் அனைவருக்கும் வேண்டும்.

- CMN SALEEM

# கான் பாகவியின் பின்னூட்ட ம் #
*************************************
சலாம்.நன்றி. ஒரு இமாம் இவ்வளவு ஊதியம் கொடுத்தால்தான் பணிபுரிவேன் - அதாவது தொழவைப்பேன் என்று அடம்பிடிக்கவும் முடியாது; துப்புரவு தொழிலாளியின் ஊதியத்தை விடக் குறைவான ஹதியாவை வாங்கிக்கொண்டு பணியில் தொடரவும் முடியாது.மற்ற துறை பணியாளர்களைப் போல் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்த வோ வேலை நிறுத்தம் செய்யவோ தார்மிக அடிப்படையில் முடியாது .

ஜமாஅத்துல் உலமா சபையும் தன்னிச்சையாக ஒன்றும் செய்வதற்கில்லை. தங்கள் சொந்த ஆதாயத்திற்காகச் சங்கம் நடத்துகிறார்கள் என்ற பெயர்தான் கிடைக்கும். ஊதியம் குறைவாக இருந்தாலோ , ஓர் ஆலிம் இடைநீக்கம் செய்யப்பட்ட இடத்தில் யாரும் இமாமாகச் சேராதீர்கள் என்று சொல்லவோ சட்டத்தில் எங்கே இடமுண்டு என்ற கேள்வி தான் பிறக்கும்.

இதனால்தான் , ஜ. உ.சபையின் மறைந்த மூத்த நிர்வாகிகள் ஊதியப் பிரச்சினையை கையில் எடுக்காமல், தவ வாழ்வு வாழ்ந்து விட்டு மறைந்தார்கள்.

ஆனால் , அதற்காக இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதும் பேராபத்து ஆகும்.ஏற்கெனவே ஆலிம்கள் உருவாக்கம் குறைந்து போனது மட்டுமின்றி, தகுதிமிக்க இளம் ஆலிம்கள் வேறு துறைகளுக்குச் சென்றும் விட்டார்கள் . இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இழப்பாகும்.

இன்றைக்கு வெளிமாநில இமாம்கள் தான் இடங்களை நிரப்பி வருகிறார்கள் .இவர்களில் பெரும்பாலோர் முறையாகக் கல்வி கற்ற ஆலிம்கள் அல்லர்.இராகத்தோடு இனிய குரலில் குர்ஆன் ஓதப் பயிற்சி எடுத்துள்ளார்கள் அவ்வளவுதான்.இமாமுக்கு இஃது மட்டும் போதுமா? சட்டங்கள் , குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கங்கள் , இங்குள்ள சூழ்நிலை அறிந்து உரையாற்றல் ...என ஏகப்பட்ட விஷயங்கள் கற்றிருக்க வேண்டாமா?

சரி ! இதற்குத் தீர்வுதான்  என்ன ? பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கூட்டமைப்பு, வக்ஃப் வாரியம் , சமூக ஆர்வலர்கள் , ஜ.உ. சபை அல்லாத சமுதாய அமைப்புகள், முஸ்லிம் கட்சிகள் , சமுதாயப் பிரமுகர்கள் முதலானோர் கவலையோடு ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவெடுத்து செயல்படுத்துவது தான் .

இதை யார் முன்னெடுப்பது ? ஒன்றிணைப்பது என்பதுதான் விடை தெரிய வேண்டிய வினா . ஆர்வமும் துடிப்பும் மார்க்க மரபுகளில் அசையாத பிடிப்பும் உள்ள , பொதுநலனில் அக்கறை கொண்ட ஒரு ஐந்து , பத்து இதயங்கள் கூடவா இல்லை இச்சமுதாயத்தில்...?

Saturday, June 30, 2018

# காலச்சுவடு மாத இதழுக்கு கான் பாகவி யின் கடிதம் #

# காலச்சுவடு மாத இதழுக்கு கான் பாகவி யின் கடிதம் #

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன். ஓர் ஆட்சியின் தகைமையைக் கணிக்க நான்கு ஆண்டுகள் என்பது, கூடுதல் கால அவகாசம்தான். இருப்பினும், ‘திருந்தலாம் அரசு’ எனும் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் அளவிற்கான இக்கால அவகாசத்தில் மேற்கொள்ளப்படும் சரியான மதிப்பீடு, அரசுமீதான நம்பிக்கையைக் கேள்விக்குரியதாக்கி, இனியும் சாக்குப்போக்குச் சொல்லி அரசு தப்பிக்க இயலாது என்ற நிஜத்தை உணர்த்தும் துலாக்கோலாக அமையும் என்பதை மறுக்கவியலாது.

ஓர் அரசாங்கம், குடிமக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதி செய்யாமல் இருந்தாலே பேருதவியாக இருக்கும். இந்தியச் சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர்களைத் திட்டமிட்டே நசுக்கும் வேலையை மட்டுமே பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கிறது. விளிம்பு நிலை மக்களான அப்பிரிவினரோ, தம் வாழ்வில் எத்திசையிலிருந்தாவது ஒளிக்கீற்று தென்பட்டுவிடாதா என ஆவலோடு காத்திருக்கும் வகையினர் ஆவர்.

ஆனால், அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, அடிமைகள்போல் ஆக்கி, சட்டபூர்வமான உரிமைகளைக்கூடப் பறித்து, தம் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நொடியையும் கழிக்கின்ற அவல நிலையில்தான் அவர்களை வைத்திருக்கிறது இந்த அரசு. எம்மை நீங்கள் கைகொடுத்துத் தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை; முதுகில் குத்திவிடாதீர்கள் என்று கெஞ்சுவதைப் போன்றுதான் அவர்களின் வாழ்நாள் இங்கே கழிகிறது. “இருக்கும் சுதந்திரத்தில் கை வைக்காதீர்கள்; அதுபோதும்” என்று, கூட்டம்போட்டு அவர்கள் கதறுகின்ற பரிதாப நிலையை உருவாக்கியதுதான், இந்த அரசின் நான்கு ஆண்டுகாலச் சாதனை!

நான் யாரை வழிபட வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என்ன உண்ண வேண்டும்? எப்படிச் பேச வேண்டும்? எவ்வாறு சிந்திக்க வேண்டும்… என்பதையெல்லாம்கூட, இணை அதிகார மையங்கள் தீர்மானிக்கின்றன; மீறினால், வன்முறையை ஏவிவிடுகின்றன. அரசு நிர்வாகம் யார் பிடியில் சிக்கியுள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

இதற்காகவா, எம் முன்னோர் விடுதலைப் போரில் பங்கெடுத்தனர்? வெள்ளையனே வெளியேறு என்று கர்ஜித்தனர்? நாட்டுப் பிரிவினையின்போது, இதுதான் எங்கள் தாய்மண் என்று கூறி தம் வாழ்வையும் சாவையும் இங்கேயே தீர்மானித்துக்கொண்டனர்?

வெட்டிக் கொல்வது, வன்புணர்ச்சி, ஊடக அராஜகம், சுய மரியாதை ஒழிப்பு, சமூகநீதி மறுப்பு, அரசியல் வெறுப்பு, மொழித் திணிப்பு, அதிகாரப் பறிப்பு ஆகியவற்றைத் தவிர, வேறு என்ன வளர்ச்சியைக் கண்டது நாடு?

இறுதியாக, இளைத்தவர்களின் இறை வேண்டல் இதுதான்: சமயச் சார்பற்ற சக்திகள் பலம்பெற வேண்டும்; மத துவேஷம், இன, மொழி வெறி அகல வேண்டும்; அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற வேண்டும்.

                                                                           அன்புடன்.                                                        அ. முஹம்மது கான் பாகவி
சென்னை-14.
30.06.2018