Wednesday, December 17, 2014

சர்வதேசப் பார்வை - செய்திச் சுருள்


7 அரபு நாடுகளை ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டம்

மெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இந்நாள் ஆலோசகருமான ஹென்ரி கிஸிங்கர், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துவரும் இன மற்றும் உள்நாட்டுச் சண்டைகளும் புரட்சிகளும் நிலையற்ற தன்மையும் அமெரிக்காவின் மூன்றாம் உலகப் போருக்கான முன்னுரை என்று கருதுகிறார்.

இப்போரின் ஒரு பக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் மறுபக்கத்தில் ரஷியா மற்றும் சீனாவும் நிற்கப்போகின்றன. நியூயார்க் தினசரியானடெய்லி ஸ்கீப்இதழுக்கு அளித்த பேட்டியில் கிஸிங்கர் இதை வெளிப்படையாகக் கூறினார்.

பேட்டியின்போது அவர் கூறியதாவது: மாஸ்கோவும் பீகிங்கும் உலகளவில் பெரிய மதிப்பைப் பெற்றுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எனவே, ரஷியா மற்றும் சீனா ஒருபுறமும் அமெரிக்கா இன்னொரு புறமுமாக நின்று மோதிக்கொள்ளும் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை ஐரோப்பிய யூனியன் புரிந்திருக்கிறது.

இதனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு வலுவான கூட்டணியாக உருவாகி ரஷியர்களையும் சீனர்களையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய அவசரம் உண்டு. அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்கள், உலக அளவில் ரஷியாவையும் சீனாவையும் எதிர்கொள்ளும் இலக்கை அடைய முனைப்புக் காட்டிவருகின்றன.

இதற்காக 7 அரபு நாடுகளை ஆக்கிரமிக்கும் பணியை அமெரிக்கப் படைகள் மேற்கொள்ள வேண்டும் என அவை கோரிவருகின்றன. அப்போதுதான், அந்நாடுகளின் இயற்கை வளங்களை, குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சுரண்ட முடியும். அந்த நாடுகளின் வளங்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதே இந்நாடுகளை ஆக்கிரமிப்பதாக அமையும். தற்போது இந்த நோக்கத்தை எட்டும் பணியில்தான் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளன என்றார் கிஸிங்கர். (அல்முஜ்தமா)


உலக முஸ்லிம்களை அழிக்க
சிலுவைப் போர் தொடங்க அழைப்பு

மெரிக்காவில் உள்ள யூத மதக்குரு (ரப்பி) ஒருவர், புனித சிலுவைப் போரைத் தொடங்கி முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளாராம்! அவரது பெயர் ஷாலோம் லோயஸ். இவர் ஜார்ஜியாவில் யூதர்களின் புத்தாண்டை முன்னிட்டு ஆற்றிய உரையில்தான் இந்த அழைப்பை வெளியிட்டார்.

பயங்கரவாதத்திற்கு முஸ்லிம்களே பொறுப்பு. எனவே, அவர்களைப் பூண்டோடு ஒழித்தாக வேண்டும் என்றாராம்! இதே மதக்குருதான் மூன்றாண்டுகளுக்குமுன் நடந்த யூதப் புத்தாண்டு தினத்தில், முஸ்லிம்களை நாஜிகளுக்கு ஒப்பிட்டுப் பேசியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அப்போது அவர் பேசியதாவது: உலகில் முஸ்லிம்கள் பல கோடிப்பேர் உள்ளனர். அவர்களில் 5 சதவீதத்தினர் பயங்கரவாதிகள். ஆனால் இப்போது கூறுகிறேன்: முஸ்லிம்கள் அனைவருமே பயங்கரவாதக் குற்றவாளிகள்தான். 95 சதவீத முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று நம்மில் சிலர் சொல்வது என்னைச் சங்கடப்படுத்துகிறது. ஆயினும், அது உண்மையாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

ஆனால், அந்த பயங்கரவாதிகள் அல்லாத முஸ்லிம்கள் எங்கே? மௌன சாட்சிகளாக இருக்கிறார்களா? ஜெர்மனியரில் பெரும்பாலோர் நாஜிகள் அல்லர். ஆனால், இது இப்போது முக்கியமல்ல. ரஷியர்கள் பெரும்பாலோர் ஸ்டாலினியர்கள் அல்லர். இதுவும் இப்போது முக்கியமல்ல. அவ்வாறே, முஸ்லிம்கள் பெரும்பாலோர் பயங்கரவாதிகள் அல்லர். இதுவும்தான் இப்போது முக்கியமல்ல.


ஃபிரான்ஸ்பள்ளிகளில் பன்றி இறைச்சிக்குத் தடை

ஃபி
ரான்ஸ் நாட்டின் Bringnoles நகரம் சமய மற்றும் உணவு வித்தியாசங்களை மதிக்காத, பிடிவாத குணத்திற்குப் பெயர்போன ஊர். அந்நகர்ப் பள்ளிக்கூடங்களின் கேண்டீன்கள், மதச்சார்பற்றவர்களின் (மதங்களை மறுப்போரின்) ஆக்கிரமிப்பு இடங்களாகக் காட்சியளிக்கின்றன.

அவ்வாறிருந்தும் அந்நகர மேயர் Josette Pons, பள்ளிகளில் பன்றி மாமிச உணவுகளுக்குத் தடை விதித்துள்ளார். முஸ்லிம் பிரமுகர்களின் கோரிக்கையை ஏற்று இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பன்றி மாமிச உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் சுமார் 300 சிறார்கள் கேண்டீன்களைப் புறக்கணிப்பர் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால், நகரத் தந்தை, எந்த ஊடகங்களின் தலையீட்டையும் அனுமதிக்கப்போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் மாணவர்களின் பெற்றோர்களும் சங்கங்களும் தம்முடன் இணைய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது, கண்ட உணவையும் கூட்டாக உண்கிற போக்கைத் தடுத்து நிறுத்துகிற திட்டம் என்று கருதப்படுகிறது. (அலூகா)


எய்ட்ஸ் ஏற்படுவதைகத்னா
கட்டுப்படுத்துகிறது  ஆய்வறிக்கை

ப்பிரிக்காவில் அறிவியலாளர்களும் அரசியல்வாதிகளும் எய்ட்ஸைத் தடுக்கும் வழிகள் குறித்துச் சிந்தித்துவருகின்றனர். இஸ்லாத்தில்சுன்னத்என்று சொல்லப்படும் கத்னாமுறையால் ஆண்களை எய்ட்ஸிலிருந்து பெரிய அளவில் காப்பாற்ற முடியும் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

EOS எனும் சஞ்சிகை, எய்ட்ஸ் வைரஸைத் தடுப்பதற்குகத்னாஒரு முக்கியமான ஆயுதம் என்று கூறும் பல ஆய்வறிக்கைகளை முன்பும் வெளியிட்டுள்ளது. கினியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட விரிவான 3 ஆய்வறிக்கைகளை அது இப்போது வெளியிட்டுள்ளது.

பெண்களிலிருந்து ஆண்களுக்குப் பரவும் வைரஸ், கத்னா செய்த ஆண்களில் 60 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆணுறுப்பின் நுனித்தோல் அகற்றப்படுவதால் வைரஸ் பன்மடங்காகப் பெருகுவதற்குத் தேவையான செல்கள் மறைந்துவிடுகின்றன. இது, கட்டிளம் பருவத்தில் அதிகமாக வைரஸ்களைக் குறைக்கிறது. ஆணுறுப்பின் மொட்டுப் பகுதி வலுவாக இருப்பதால் வைரஸ் தொற்றிலிருந்து நிறைய பாதுகாப்பு கிடைக்கிறது.

இதே அடிப்படையில் கரு உருவாக்கத்தை நாம் ஆய்வு செய்ய விரும்பினால், நோய்த்தொற்றை அதிக அளவில் குறைத்துவிடலாம். கினியாவில் 1984 முதல் பாலுறுப்பு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் மாரிலாகா கூறுகிறார்: ஆண்கள் கத்னா செய்துகொள்வது, அவர்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் நல்ல பயனைத் தருகிறது. பெண்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது.

எதிர்வரும் 15 ஆண்டுகளில் 14 நாடுகளில் உள்ள 28 மில்லியன் ஆண்கள் கத்னா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவர். அதன்மூலம் 3.4 மில்லியன் நோய்த் தொற்றுகளைப் புதிதாகத் தடுக்க முடியும். இதற்கு 13 பில்லியன் யூரோ செலவாகக் கூடும். அதேநேரத்தில், கத்னா மட்டுமே எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு என்று சொல்லிவிடவும் முடியாது. (அலூகா)


பிரிட்டனில் மது தயாரிப்பதைக்
குறைப்பதில் முஸ்லிம்களின் பங்கு

பி
ரிட்டனில் மது உற்பத்தியின் வேகத்தைக் குறைத்ததிலும்பார்களைத் திறப்பதைக் குறைத்ததிலும் பிரிட்டன் முஸ்லிம்களுக்கு ஆக்கபூர்வமான பங்கு உண்டு. இதை பிரிட்டன் அரசியல் பொறுப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பிரிட்டனில் Notting, Leicester, Manchester, Leeds முதலான பகுதிகளில் முஸ்லிம்கள் போதைப் பொருட்களைத் தவிர்த்ததாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதில் பங்குபெற்றதாலும் ஏராளமான மதுக் கடைகள் மூடப்பட்டுவிட்டன.

இன்னொரு பக்கம், பிரிட்டனின் வணிகம் நஷ்டமடைவதற்கு முஸ்லிம்களே காரணம் என்ற கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது. இதை முஸ்லிம் அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. பிரிட்டன் வணிகத்திற்கு எப்போதெல்லாம் நஷ்டம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்களைக் குறைகூறுவதே வாடிக்கையாகிவிட்டது. மது, பன்றி இறைச்சி போன்ற இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை படுத்துவிட்டால், உடனே முஸ்லிம்களைக் குறை கூறுகின்றனர்.

நல்லவர்கள் இருக்கும் இடத்தில் தீமைகளுக்கு என்ன வேலை! பிரிட்டன் முஸ்லிம்களே! உங்களுக்கு ஒரு சலாம்! (அலூகா)

No comments:

Post a Comment