Monday, January 01, 2018

# الترجمة للمقالة العربية في التمرين الماضي بالتاميل

# الترجمة للمقالة العربية في التمرين الماضي بالتاميل #

< ரமளான் வரவேற்பு >
~~~~~~~~~~~~~~~~
பூமியின் மேற்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து எல்லாருமே தகிழ்ச்சியோடும் ஆவலோடும் ரமளானை வழவேற்கின்றனர். இறைநம்பிக்கையால் கட்டமைக்கப்பட்ட திருப்தியான மனத்தாலும் பொறுமை மற்றும் அமைதியால் உறுதி செய்யப்பட்ட வலுவான வைராக்கியத்தாலும் இவ்வாறு வழவேற்கின்றனர். அனைத்துலகங்களின் இரட்சகன் அல்லாஹ்வுக்கென்ற தூய எண்ணத்தால் அமைந்த உண்மையான எண்ணத்தோடும் அவர்கள் ரமளானை வழவேற்கின்றனர்.

பசிக்கோ தாகத்திற்கோ அவர்கள் அஞ்சுவதில்லை. கடும் வெயிலைப் பொருட்படுத்துவதில்லை. பகல் நீள்வதைக் கண்டு நடுங்குவதில்லை. கோடை வெப்பமோ பனிக் கால குளிரோ நோன்பிலிருந்து அவர்களை அகற்றிவிடுவதில்லை. நிலை எப்படி மாறினாலும் அவர்கள் உண்மையிலேயே நோன்பு நோற்பவர்களே.

ரமளானில் அவர்கள் வழிபாடு செய்கிறார்கள். தூய்மை அடைகிறார்கள். பாவமன்னிப்புக் கோருகிறார்கள். நோன்பு, தானம், இதர வணக்க வழிபாடுகளால் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாகிறார்கள். அந்த மாதத்தில் பாவங்கள், தீமைகள், தடைசெய்யப்பட்டவை ஆகியவற்றிலிருந்து விலகிவிடுகிறார்கள்.

ரமளான் யாருடைய கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அவருக்கு வாழ்த்துகள். அவர்தம் எஜமானனிடம் திரும்புகிறார். அவனிடம் பாவமன்னிப்புக் கேட்கிறார்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் மீட்சி பெறுகிறார்கள்.

( இன் ஷாஅல்லாஹ்)

No comments:

Post a Comment